Posts

Showing posts from October 11, 2019

பத்திரங்களை எங்கெல்லாம் பதியலாம் தெரிந்து கொள்ள வேண்டிய 14 விஷயங்கள்!!

Image
  1)ஒரு கிரய பத்திரதையோ அல்லது வேறு ஏதாவது பத்திரங்களையோ பதிய வேண்டும் என்றால் சொத்து இருக்கும் ஆட்சி எல்லைக்குட்டபட் சார்பதிவகத்தில் பதியலாம் என்பது அனைவருக்கும் தெரியும்அதில் சில விதிவிலக்குகளும் சிறப்பு விசயங்ளும் உள்ளன அவற்றை பார்ப்போம். 2)இரண்டு வெவ்வேறு கிராம சொத்து, இரண்டும் வேறு வேறு சார்பதிவக ஆட்சி எல்லையில் வருகிறது என்று வைத்து கொள்வோம்.உதாரணமாக செங்கல்பட்டு மாவட்ட திருக்கழுகுன்றம் சார்பதிவக எல்லைக்குள் இருக்கிற வசுவசமுத்திரம் கிராமத்திலும் 2இரண்டு ஏக்கர் நிலமும் மதுராந்தகம் சார்பதிவக எல்லைக்குள் இருக்கிற முருகம்பாக்கம் கிராமத்தில் 3ஏக்கர் நிலமும் ஒருவருக்கு இருக்கிறது என்றால் அதனை அப்படியே இன்னொருவருக்கு விற்கிறார் என்றால் 3)இரண்டு சொத்தையும் ஒரே கிரயபத்திரத்தில் எழுதி அதனை மேற்கண்ட இரண்டு சார்பதிவகத்தில் ஏதாவது ஒன்றில் மதுராந்தகமோ அல்லது திருகழுக்குன்றம் சார்பதிவகத்தில் பதியலாம் இப்படி ஒரு விதி பதிவு துறையில் இருக்கறது.நிறைய சொத்து வைத்து இருப்பவர்கள் சார்பதிவகம் சார்பதிவகமாக அலைய கூடாது என்பதற்காக இந்த விதி இருக்கிறது என்பது என் புரிதல் 4)பொது அதிகார பத்திரம் அதாவ

என்னைடைய புறந்தூய்மை முயற்சியும் அகந்தூய்மை தியான பயிற்சியும்!!

Image
என் பக்கம் அண்டாது என்று பாவத்தை லேசாக எண்ண வேண்டாம்!துளி துளியாய் விழும் தண்ணீராலேயே குடம் நிரம்பி விடும்.பேதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தாலும் பாவத்தால் நிரம்பி விடுகிறான்! எனபது புத்தரின் போதனை!!! என்னுள்ளும் 38 ஆண்டுகளாக துளி துளி யாயும் மலை மலை யாயும் சேரத்த பாவங்களை சுத்தம் செய்து கொள்ள எண்ணியும் இனி வரும் காலங்களில் புதிய மனிதனாக மாறி இருக்க வேண்டும் என்று எண்ணியும் Forgiveness Meditation உம் புரிதல் குறைவே அனைத்து தீமைகளுக்கும் காரணம் எனவே புத்தரை உரையை படிப்போம். மறுபடியும் புரிந்து கொள்வோம் என்ற நோக்கத்திலும் புத்தர் ஆலயத்திற்கு சிரம தான (உடல் உழைப்பு தானம்) செய்வோம்.என்ற எண்ணத்திலும் சென்னையை விட்டு 80 கி.மீ தொலைவில் ஈ.சி.ஆரி ல் தூய்மையான அழகான மரக்காணம் ஊருக்கு வெளியே மிக சிறிய புத்தர் கோயிலை தேர்ந்தெடுத்தேன். அக்கோயிலை ஆச்சாரிய தம்ம சீலர் என்ற பிக்கு நடத்தி கொண்டு இருந்தார்.அவரிடம் ஆசியும் வழிகாட்டுதலும் பெற்று தற்காலிக சிரமண துறவி ஆக மாற சீவர துணி பெற்று கடந்த பங்குனி பௌர்ணமி அன்று என்னுடைய அகத்தை தூய்மை செய்யும் பணியை மேற்கொண்டேன் சிறந்த பணிவோடும் முழு ஈடுபாட்டுட

என் வாழ்க்கையில் அதிக சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்திய மூன்று துயர சம்பவங்கள் !!

Image
             2000 ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் கேத்தியிலுள்ள CSI COLLEGE OF ENGENEERING இல் படித்துகொண்டிருந்தேன். அப்பொழுது நான் தந்தை பெரியாரைப் பற்றியும் சமூக அரசியல் பற்றியும் நிறைய படித்துகொண்டிருந்த மாணவன். சமூகத்தை பற்றிய கவிதை தொகுப்புகளையும் எழுதி புத்தகமாக வெளியிட்டிருந்தேன். எப்போதுமே உணர்ச்சி கொந்தளிபுள்ள சமூகத்திற்கு எதிராக நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்கின்ற ஒரு ஆளாக என்னை நானே வளர்த்து கொண்டு இருந்தேன் அந்த நேரத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா 1992 – 1996 இல் நடைபெற்ற ஆட்சி கால கட்டத்தில் கொடைக்கானலில் அரசு வரையறை செய்திருக்கும் வளர்ச்சி கட்டுப்பாடு விதிகளை மீறி ஏழு மாடிகள் கொண்ட Pleasant Palsta Hotel க்கு அனுமதி அளித்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு அதில் அன்று ஜெயலலிதாவிற்கு எதிராக ஓராண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வந்தது அதனுடைய எதிர்வினையாக தருமபுரி இலக்கியம் பட்டியில் கல்லூரி பேருந்தில் மூன்று மாணவிகளை உயிருடன் வைத்து பேருந்தோடு எரித்துவிட்டதாக வேகமாக தகவல் பரவியது. அந்த கல்லூரி மாணவிகள் கோவை வேளாண்மை கல்லூரியை சார்ந்தவர்கள். சுற்றுல

நில சிக்கல்களுக்கான இலவச ஆலோசனை முகாம்

Image
சமூக ஊடகங்களில் நிலம்சம்மந்தபட்ட சிக்கல்கள்,நிலம் சம்மந்தபட்ட பிரச்சினைகளுக்கு வழிகாட்டுதல்கள்,ஆலோசனைகள் கொடுப்பது சம்மந்தமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகிறேன். அதன் மூலமாக நிறைய பேர் நிலம் சம்மந்தபட்ட சிக்கல்களுக்கு போன் மூலம் ஆலோசனை கேட்டனர்.அதன்பிறகு அதற்கென்று தனி செல் நம்பர் போட்டு அதற்கு தனியாக எங்களின் குழு உறுப்பினரை பொறுப்பாக்கி வருகின்ற அழைப்புகளுக்கு டோக்கன் நம்பர் கொடுத்து வரிசை முறைபடி தினமும் நானும் என் குழுவினரும் 50 அழைப்புகளுக்கு மேல் பேசி வருகிறோம்.ஆனால் தற்போது அழைப்புகள் அதிகம் ஆயிடுச்சி..அதற்கென்னு இருக்கின்ற நிர்வாகம் ஸதம்பிக்க ஆரம்பிச்சிடுச்சி..நிறைய அழைப்புகள் பேச முடியாமல் நிலுவையில் நிற்க ஆரம்பிச்சிடுச்சி..மக்களும் ஒரு வாரமாக காத்திருந்தும் பேசவில்லையே என்ற அதிருப்தியை வெளிபடுத்தி வருகின்றனர்.மேலும் சில அழைப்புகள் சின்ன சின்ன விஷயங்களுக்காக ஆர்வ கோளாறு அன்பர்கள் ஓயாமல் போனில் அழைத்து எங்கள் குழுவினரை அயர்ச்சி அடைய வைக்கின்றனர். இதற்கெல்லாம் மாற்று ஏற்பாடு செய்ய என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போதுதான். இந்த இலவச ஆலோசனை முகாம் ஐடியா

பிராப்தம் ரியல்எஸ்டேட் அகடமி (பி) லிட்

Image
பிராப்தம் ரியல்எஸ்டேட் அகடமி (பி) லிட் என்ற புதிய நிறுவனத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்மனதில் திட்டமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக செயல்திட்டங்களை உருவாக்கி அதனை அனைவருக்கும் சொல்லி கொடுத்து அதனை பயிற்சி பெற வைத்து நடைமுறை படுத்தி Test and Trial லில் ஈடுபட்டு சம்ருதி சேவைகள்,நில சிக்கல் ஆலோசனைகள்,புத்தகங்கள்,பயிற்சி வகுப்புகள் என்று மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப புதிய வியாபார பிராடகட்டுகளை உருவாக்கி சமூக ஊடகங்கள் மூலமே வலிமையான மாக்னெட்டிக் மார்க்கெட்டிங் உருவாக்கி affluence mode இல் பிஸினெஸை பழைய பிஸினஸில் இருந்து EVOLVE செய்து இருக்கிறேன்.இந்த புதிய கம்பெனியின் ஒட்டு மொத்த நடவடிக்கைகளை (Business Conscious )ஐ என்னுடைய நம்பகமான அன்பான தங்கை என் வியாபார பயணத்தில் அதிக சிரத்தை எடுக்கும் செல்வி.மங்களலட்சுமி யிடம் ஒப்படைக்கிறேன்.இந்த நிறுவனத்தில் Content எழுதுவது பேசுவது மட்டும் என் பணி.அதனுடைய Growth மங்கள் தலைமையிலான டீமையே சாரும்.  இந்த புதிய கம்பெனி எதிரகால திட்டமான Housing Society யை இந்த ஆண்டிலேயே evolve செய்யும் பழைய கம்பெனியின் காயங்களையும் Heal செய்யும் என்று நம்பு

அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் சொத்து பிரச்சனைகளில் ஏன்? நீதிமன்றம் செல்ல வேண்டாம் 15 காரணங்கள்

Image
1. நீதிமன்றங்களில் CIVIL வழக்குகள் தலைமுறை தாண்டியும் காலம்தாழ்த்தப்படுகிறது. 2. முத்திரை தாள் செலவுகள், தேவைப்படின் காவல் துறை செலவுகள், முட்டு வழிச்செலவுகள் அதிகமாவதால் தங்களுடைய சேமிப்பு பணத்தை இழக்கின்றனர். 3. சேமிப்பு பணத்தை இழப்பதாலும், உரிய நேரத்தில் கிடைக்காத நீதியினாலும் பெரும் மன உளைச்சலும், நிம்மதியின்மையும், பாதுகாப்பற்ற உணர்வுடன் தவிக்கின்றனர். 4. கடன் வாங்கி அதிக தொகை செலவு செய்து நீதியை பெற்றாலும் அப்பீலின் மூலமாக நீதி நடைமுறைபடுத்தாமல் இருக்கின்றது. 5. சொத்து வழக்குகளில் SETTING CRIMINAL வழக்குகள் போடப்பட்டு அதிலிருந்து வெளிவருவதற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. 6. நீதிமன்றங்களில் போதுமான நீதிபதிகள் இல்லாமலாலும், வழக்கறிஞர்கள் தொடர் வேலை நிறுத்த போரட்டங்களிலாலும் ஏற்கனவே மலை போல தேங்கி கிடக்கும் வழக்குகள் அநியாயத்திற்கு வழக்குகள் இழுக்கப்படுகின்றன. 7. தாமதிக்கப்பட நீதி உண்மையில் மறுக்கப்பட்ட நீதி ஆகும். 8. வழக்குகள் அதிகபட்ச தாமதத்திற்கு பிறகு வழக்கறிஞர்களாலே சமதானப்படுதப்பட்டு அவை முடித்துவைக்கப்படுகின்றது. அதற்கு இவ்வளவு செலவு செய்

MANUPULATION தலைவர்கள் என்ற குரங்குகள் கையில் சிக்கிய பூமாலையாக இன்றைய அடிதட்டு சிறு மற்றும் குறு தொழில் முனைவர்கள்!!!

Image
சிறு மற்றும் குறு தொழில் முனைவர்கள் அதுவும் முதல் தலைமுறையினரை சார்ந்த தொழில் முனைவர்களின் குடும்பத்திலோ, குடும்ப பாரம்பரியத்திலோ அவர்களை சுற்றியுள்ள வாழிடங்களிலோ தொழில் முனைவு தன்மை (Entrepreneurship)சிறிதும் இல்லாத வேலைக்கு போகும் (worker mentality)மக்களே அதிகமாக இருப்பார்கள். அவர்கள் தொழில் செய்பவர்களை அட்வைஸ் செய்தும் பரிகாசம் செய்தும் தோற்றவர்களை எடுத்து சொல்லியும் தொழில்முனைவு தன்மைக்கு எதிரான சிந்தனைகளையே விதைப்பார்கள் அப்படிபட்டவர்களின் புறச்சூழல் எதிர்மறை செல்வாக்கினை எல்லாம் தாண்டி ஒரு சிறு தொழிலை உருவாக்கி விஸ்தரிக்க அதிக அளவு நெஞ்சில் திராணியும் கடும் உழைப்பும் தேவைபடுகிறது. அப்படி உழைத்து ஒரு தொழில் முன்னேறி வரும்போது அரசோ,அரசு இயந்திரமோ,வங்கியோ, கல்வி முறையோ என்று எதுவுமே பெரிதளவில் எங்களுக்கு துணையாக இருந்ததில்லை. மேலும் தொழில் சூழல் 20 ஆண்டுகள் முன்னோக்கி முன்னேறி சென்றால் அரசு எந்திரம் அதனில் Upate ஆகாமல் 20 ஆண்டுகள் பின்னோக்கி இருக்கிறது. மேலும் காலவதி ஆன சிலபஸை அடிதட்டு மக்களிடையே இன்றுவரை விற்று கொண்டு இருக்கிறது SSI போன்ற அரசு எந்திரம்.இந்த தலைமுறை அடிதட்ட

Conscious Real-estate Movement

Image
அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் தங்களுக்கான வீட்டு மனை தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்கு காலம் காலமாக அல்லல்படுகின்றனர். அரசு இலவச வீட்டு மனைகளையோ அல்லது தமிழ்நாடு அரசு குடிசைமாற்று வீடுகளையோ அல்லது புறம்போக்கு மற்றும் மானிய நிலங்களின் குடியிருப்புகளை பயன்படுத்தி வாழ்கின்றனர். இவைகளெல்லாம் ஒரு தொழில் செய்ய வேண்டி வங்கி கடனுக்கு போனால் இந்த சொத்துகளை ஈடாக வைக்க முடியாத நிலையில் அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்காமல் முன்னேற முடியாத பொருளாதார தடையை அந்த இடங்களும், அதனை சுற்றியுள்ள வாழிடங்களும் ஏற்படுத்துகின்றன. மேற்படி மக்கள் உழைத்து, சம்பாதித்து எங்காவது அங்கீகாரம் உள்ள நல்ல வீட்டு மனையை வாங்கவேண்டுமென்றால் அவர்கள் கையில் இருக்கும் பணத்திற்கு நகரத்தை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் மனைகள்தான் அவர்களுக்கு கிடைக்கிறது. நகரத்திற்கு பக்கத்திலோ அல்லது வளரும் புறநகர்களிலோ இடங்கள் வாங்கவேண்டுமென்றால் அதனுடைய அதிகபட்ச விலை ஏற்றத்தினால் அவர்களுக்கு எட்டா கனியாகவே அமைகிறது. மேலும் பெரு நகர்க்குள்ளே தங்களுடைய உழைப்பை எல்லாம் வாடகை கொடுத்தே அழித்துவிட்ட மக்களும், வாடகை வீட்டில

சார்பதிவகத்தின் 5 புத்தகமும் 4 அனுபந்தமும்

Image
சார்பதிவு அலுவலகத்தில் சொத்தம் 5 புத்தகங்கள் இருக்கிறது அதற்கு முறையே 1 புத்தகம், 2 புத்தகம், 3 புத்தகம், 4 புத்தகம் என சொல்கின்றார்கள். 1புத்தகத்தில் கிரயம் அடமானம், குத்தகை, விடுதலை, நன்கொடை முதலியவற்றினை பதியும் பத்திரங்களின் விவரங்கள். 2வது பத்திரத்தில் பத்திரம் பதியமுடியாது என ஒதுக்கப்பட்ட காரணங்களை எழுதி வைக்கும் புத்தகமாகும். 3உயில் தத்து எடுக்கும் எதிர்காலம் போன்ற பத்திரங்கள் பதியும் புத்தகம் ஆகும். 4பல்துறை உயில்களை பதியும் புத்தகம் பொது அதிகாரம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதில் தான் பதியப்பட்டது. திருமணம் சீட்டு பதிவுகள் புத்தகம் (5) அனுபந்தம் 1 புத்தகம் 1 ல் எழுதிகொடுத்தவர் பெயர் எழுதி வாங்கியவர் பெயர் விவரம் முழுதும் இதில் இருக்கும். அனுபந்தம் 2 பதிவு செய்யப்பட்ட சொத்துவிவரம் இதில் இருக்கும். அனுபந்தம் 3 உயில் சாகனம் எழுதி வைத்தவர் பெயர் உயில் சாதனத்தின் பயனாளிபெயர் இருக்கும். அனுபந்தம் 4 புத்தகம் 4ல் குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் பெயர் முகவரி எல்லா விவரங்களும் இருக்கும். சொத்துக்கள் இந்த அனுபந்தகளை பார்வையிட விரும்பினால் மனு கொடுத்து கட்டணம் கட்டி பா

சார்பதிவாளர் எதனையெல்லாம் பதிவு செய்ய மறுக்கலாம். காரணங்கள்

Image
1.சட்ட விரோதமாகவும், ஒழுக்க கேடாகவும் உள்ள பத்திரங்களை சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கலாம். 2.பதிவு கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால் பதிவு செய்ய மறுக்கலாம். 3.பத்திரம் எழுதிகொடுத்தவர் மனநிலை சரியில்லாதவராகவோ, மைனராகவோ இருந்தால் அந்த பத்திரத்தை மறுக்கலாம். 4.பத்திரம் எழுதி கொடுத்தவர் சார்பதிவாளர் முன்பு நான் எழுதி கொடுக்கவில்லை என்று சொன்னால் சார்பதிவாளார் பத்திரம் பதிவு செய்ய மறுக்கலாம். 5.சாட்சிகள் யாரும் இல்லை என்றால் பதிவினை மறுக்கலாம். 6.பத்திரத்தில் சம்மந்தபடாத எவரையேனும் பத்திரத்தில் சேர்ந்தால் அதனை பதிவுசெய்ய மறுக்கலாம். 7.உயில்களை தவிர ஏனைய பத்திரங்களை கையெழுத்திடபட நாளில் இருந்து நான்கு மாத காலத்திற்குள் பதிவாளரிடம் பதிவுக்கு சேர்க்கப்பட வேண்டும் அந்த காலகெடு முடிந்தால் சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கலாம். 8.சொத்துவிவரங்கள் தேதி போன்ற விவரங்கள் தெளிவாக குறிப்பிடபடவில்லை என்றாலும் மறுக்கலாம். சார்பதிவாளருக்கு புரியாத மொழியிலும் குழப்பங்களுடனும் இருந்தாலும் மறுக்கலாம். ஒவ்வொரு பத்திரம் போடும்போதும் 1 பத்திரத்தை சார்பதிவாளர்கள் பதிவு செய்ய மறுத்து விடுப

பொள்ளாச்சி சம்பவம் சம்மந்தமாக தங்கையின் அண்ணன்களும் மகளின் அப்பாக்களுக்கு செய்தி..

[audio m4a="https://paranjothipandian.in/wp-content/uploads/2019/03/pollachi_news-1.m4a"][/audio] இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-ரியல்எஸ்டேட் பயிற்சியாளர் தொழில் முனைவர் www.paranjothipandian.in ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3 #pollachi #rapist

பதிவு செய்ய கட்டாயபற்ற ஆவணங்கள் 11 அனைத்து ஆவணங்களையும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை விரும்பினால் பதிவு செய்யலாம். பதிவு செய்யபடவில்லை என்ற காரணத்தை காட்டி மேற்படி ஆவணங்களை நிராகரிக்க முடியாது.

Image
1.நீதிமன்ற எலத்தில் ஒரு அசையா பொருளை விற்க கொடுக்கும் விற்பனை சான்றிதழை (sales certificate) பதிவு செய்ய வேண்டும். 2.அடமான கடன் சேர்ந்துயிட்டது அல்லது பற்று ஆகிவிட்டது என ஒப்புகொண்டு அந்த பதிலான அடமான பத்திரத்திலேயே குறித்து எழுதினால் அதனை பதிவு செய்ய தேவையில்லை. 3.அரசாங்கம் வழங்கும் அசையாபொருள் நன்கொண்ட பட்ட வழங்கிய உத்திரவுகளை பதிவு செய்ய தேவையில்லை. 4.கடன் உறுதி சீட்டுகள் (Debenture) கூட்டுறவு கழகங்களில் வழங்கப்பட்டு இருந்தால் பதிவு செய்ய தேவையில்லை. 5.நீதிமன்றத்தில் சமரசம் பேசி சமாதான பத்திரம் எழுதினால் பதிவு செய்ய தேவையில்லை. 6.ஒரு வருட காலத்திற்குள் இருக்கும் குத்தகை/வாடகைகளை பதிவு செய்ய தேவையில்லை. 7.சொத்து விற்பனை உடன்படிக்கைகள் பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை.சொத்து எதுவும் கைமாறவில்லை என்பதால் அதனால் சச்சரவு வரும்போது நீதிமன்றம் செய்ய வேண்டுமானால் பதிவு செய்து இருக்க வேண்டும். 8.உயில் மூலம் தத்து எடுத்துகொள்ள அதிகம் வழங்கபட்டு இருந்தால் அதனை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. 9.கூட்டு குடும்பத்திலுள்ள அனைவரும் நமக்குள்ளையே விவசாய நிலங்களை கூறுசீட்டு மூலம

மார்ச் மாதம் 2019 இல் வளர்தொழில் மாத இதழில் இடம்பெற்ற என்னுடைய கட்டுரை “பத்திரங்களை உங்களுக்கென உருவாக்குகள்”!!!!

Image
இந்த மாத வளர்தொழில் மாத இதழில் சொத்து தொடர்பானவற்றில் பத்திரங்களை உங்களுக்கென உருவாக்குகள்” என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது.வாய்ப்பு இருக்கும் நண்பர்கள் படித்து பயனுறுமாறு வேண்டுகிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3 #deed #make #artical #valarthizhil #press #paranjothipandiayan #asset #land #consulting #வளர்தொழில் #பத்திரம்

நிலம் உங்கள் எதிர்காலம் தமிழின் முதல ஆன்லைன் ரேடியோ எபிசோட் -2 செட்டில்மெண்டு ரிஜிஸ்டர்,குடிவார உரிமை,மேல்வார உரிமை உட்பட ஆங்கிலேயரின் நில நிர்வாக வரலாறு தொடர்ச்சி

https://soundcloud.com/nilathinkural/ep2 நிலம் உங்கள் எதிர்காலம் தமிழின் முதல ஆன்லைன் ரேடியோ எபிசோட் -2 செட்டில்மெண்டு ரிஜிஸ்டர்,குடிவார உரிமை,மேல்வார உரிமை உட்பட ஆங்கிலேயரின் நில நிர்வாக வரலாறு தொடர்ச்சி ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3 #radio #podcast #online #soundcloud #land

பெண்கள் இன்னும் சொத்துரிமையில் முழு ஆளுமையை செலுத்தவே இல்லை (பெண்கள்தின சிறப்பு கட்டுரை)

Image
   பெண்கள் இன்னும் சொத்துரிமையில் முழு ஆளுமையை செலுத்தவே இல்லை (பெண்கள்தின சிறப்பு கட்டுரை). 1.பெண்களுக்கு தனி சொத்திலும், பூர்வீக சொத்திலும் சம உரிமை உண்டு என்று சட்டம் வந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்னும் பெண்கள் சொத்துக்களில் தங்கள் ஆளுமையை செலுத்தகூடிய மனநிலையில் இல்லாத அக விழிப்புணர்வு அற்றே இருக்கிறார்கள். 2.பாகப்பிரிவினைகளின் போது பெரும்பாலும் பெண்களுக்கு நிலத்தை பகிர்ந்தளிக்காமல் ஒரு தொகையை கொடுத்துவிட்டதாக பாபிரிவினை பத்திரத்தில் கணக்கு காட்டி கொண்டுவருகின்ற நடைமுறை இன்றுவரை இருந்துவருகிறது. 3.சொத்துரிமையில் இருந்து வெளியேறகூடிய விடுதலை பத்திரங்கள் அதிகமாக பத்திர அலுவலகங்களில் பதியபடுவது பெண்களை சொத்தில் இருந்து வெளியேற்றுவதற்காகத்தான். 4. ஒரு ஆணுக்கு பூர்வீக சொத்து இருந்தால் அது அப்படியே தன்னுடைய வாரிசுகளுக்கு அனுபவத்திற்கு விட்டு செல்கிறார். பெண்களுக்கு பூர்வீக சொத்து இருந்தால் அதை அப்படியே போட்டு வைப்போம் என்ற எண்ணம் பெண்களுக்கு இருப்பதில்லை, கூட இருக்கும் ஆண்களும் இருக்க விடுவதில்லை. 5.ஒரு பூர்விக சொத்து இருந்தால் சிறு வயதில் இருந்தே அதை ஆண் வாரிசுகள் அனுபவிக

அரசு நிலம் எடுப்பில் நஷ்ட ஈடு வாங்கும் போது உங்கள் நிலத்துக்கு கட்டாயம் பட்டா இருப்பது நன்று!!

Image
 2008 ம் ஆண்டு துடிப்பாக சுற்றி கொண்டு இருக்கிற ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் எனது பள்ளிகூட ஆசிரியரின் உறவினர் ஒரு பத்திரத்தை கொண்டு வந்து இந்த இடம் இப்போ எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள்.அது ஶ்ரீபெரும்புதூர் இருங்காட்டுகோட்டை அருகில் உள்ள ஒரு மனை பிரிவின் வீட்டுமனை சொத்து. மறுநாள் காலையிலேயே என்னுடைய Honda Activa வண்டியில் மைலாப்பூரில் இருந்து இருங்காட்டு கோட்டை கிளம்பி மனை பிரிவை தேடினேன்.சுத்தி சுத்தி பார்த்துவிட்டு கடைசியில் மனைபிரிவின் மேல் தான் சிப்காட் அமைத்து இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. சரி அந்த இடத்திற்கு நில எடுப்புக்காக அரசு கொடுக்கும் நஷ்ட ஈட்டை யாவது பெற்று கொடுக்கலாம் என்று வாடிக்கையாளரிடம் தகவல் தெரிவித்து விட்டு சிப்காட் நில எடுப்பு தாசில்தாரை பல முறை சந்தித்து அந்த பதிலை பெற்றேன். மேற்படி இடத்துக்கான நஷ்ட ஈட்டை வேறு ஒருவர் பெயரில் பட்டா இருந்ததால் அவருக்கே நஷ்ட ஈடு கிடைத்துவிட்டது.அவரும் அதனை பெற்றுகொண்டு நஷ்ட ஈடு போதாது என்று நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார் என்று தெரிய வந்தது.அந்த வழக்கில் எனது வாடிக்கையாளரை பார்ட்டியாக ச

நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்: (முன் பதிவு திட்டம்)

Image
1. தமிழகம் முழுவதும் மீண்டும் நில அளவை சர்வே செய்யவேண்டும் ஏன்?. 2. ஒப்படை பட்டாக்கள் எப்பொழுது ரெவின்யூ கணக்கில் ஏறும். 3. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும். 4. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது 5. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய     வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ? 6. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் . 7. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும். 8. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும். என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம், எளிய மக்களுக்கு புரியும் வகையில் எழுதப்பட்ட புத்தகம். ரியல் எஸ்டேட் தொழில் கடைநிலை ஏஜென்டாக தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி கற்று கொண்டதை புத்தகமாக ஆக்கியிருக்கிறார் ஆசிரியர். சொத்து வைத்து இருப்பவர்! சொத்து சிக்கலில் இருப்போர் ! சொத்து வாங்குவோர் என அனைவருக்கும் தேவையான புத்தகம் “இந்த நிலம் உங்கள் எதிர்கா

உங்கள் Personality தான் உங்களுடைய வாழ்வின் Personal Reality

Image
2007 களில திருமணம்.2011களில் என்னுடைய 2வது குழந்தை 3 வயதிலேயே இருதய பாதிப்புனால் இராமசந்திரா மருத்துவமனையில் எங்களின் பல கள மற்றும் மன போராட்டத்திற்கு பிறகு இறந்துவிட,என் வீட்டம்மா அழுது கொண்டே இருக்கிறாள் எனக்கு பெரிய அளவில் அழுகை வரவில்லை ஆனால் டாக்டர்கள் பேசிக்கொண்டது தான் மண்டையில் சுழன்றது. குழந்தைக்கு கால்சியம் இல்லை!விட்டமின் D இல்லை ரிக்கடஸ் ன்னு எலும்பு உடையும் நோய் இருக்கு ஒமேகா-3 இல்லை அதனால இருதய பிரச்சினை நோய் எதிர்ப்பு திறன் இல்லை என்று சொன்னதும் அதன்பிறகு ஒராண்டாக சப்ளிமெண்டுகள் வாங்கி வாங்கி என் குழந்தைக்கு கொடுத்தும் அது சம்மந்தமாக படித்து படித்து அதன்படி நடந்தும் என்னால் என் குழந்தையை காப்பாற்ற முடியவில்லையே!! தீராத யோசனை. பலர் நான் செய்த பாவம் ! கர்ம வினை என்று என்னென்னமோ சொன்னார்கள். ஆரம்ப காலங்களில் இருந்தே என் உள்ளுனர்வு சொல்வதை தான் கேட்பேன். அடுத்தவர் கருத்துக்கள் எப்பொழுதும் நான் கருத்தில் கொள்வது இரண்டாம்பட்சம்தான்.அதனால் Nutrition குறைபாடுகள் தான் என் குழந்தை இறந்தது என்று நம்பினேன். அதன் பிறகு பல்வேறு விதமான உணவு முறைகள் நான் தொழிலோடு தொழிலாக நா

BIL நிலம் புரிந்துகொள்ள வேண்டியவை!

Image
     பஞ்சம நிலம் , பூமிதான நிலம், அனாதீன நிலம், என்றெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அதென்ன “BIL” நிலம் என்று நெற்றி சுருக்குகின்றீர்களா? “BIL” நிலத்தை பேச்சுவழக்கில் “BL” நிலம் என்றே சொல்லபடுகிறது. நிலங்கள் “BIL” நிலம் என்பதை கேட்டால் ஏதோ வக்கீலுக்கு படிச்ச நிலம் என்று குழப்பம் அடையாதீர் . BIL என்பதின் விரிவாக்கம் BOUGHT IN LAND ஆகும். BIL நிலமும் ஒரு வகையான அரசின் அனாதீன நிலமே ! அதாவது அரசுக்கு தொடர்ந்து யாரும் வழிகாட்டாத போதும், அல்லது அரசுக்கு கடன் கொடுக்க வேண்டியதை கொடுக்காமல் போனாலும், அரசுக்கு ஏதாவது ஒரு வகையில் தண்டம் கட்ட வேண்டி இருந்து கட்டாமல் போனாலும் அரசு அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்யும். ஜப்தி என்பது அரசின் கடன்தாரர் நிலங்களை ஏலம் விற்பனை நடத்தி அரசுக்கு வரவேண்டிய பணத்தை மீட்டு கொள்ளுவது ஆகும். அப்படி ஏலம் நடக்கயில் யாருமே ஏலம் எடுக்காத நிலையில் அரசே அந்த இடத்தை வாங்கி கொள்ளும் . அதுவே BOUGHT IN LAND ஆகும். அரசு ஒரு நிலத்தை தாமே ஏலம் எடுக்கும் போது ஒரு தொகை நிர்ணயிக்கும் , அனைத்தையும் அந்த ஏலத்தில் கட்டாது. வார கடனில் வரவு வைத்துவிடும். (ஆக அரசு அந்

சொத்துக்கள் மதிப்பிடுதல் பற்றி தெரிய வேண்டிய அடிப்படை செய்திகள் !

Image
1. சொத்துக்களை வாங்குவதற்கும், விற்பதற்கும், அடமான கடன் வாங்குவதற்கும், பாக பிரிவினை செய்யும் போதும், சொத்து சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகளில் கோர்ட் ஸ்டாம்ப் வாங்குவதற்கும் சொத்துகளை ஏலம் விடும்போதும் சொத்துக்களுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தல் போதும் , சொத்துக்களை காப்பீடு செய்யும் போதும், அரசு நில எடுப்பு நஷ்ட ஈடு கொடுக்கும் போதும், வருமான வரி , சொத்துவரி, கேப்பிட்டல் செயின் டாக்ஸ் போன்ற வரிகளுக்காக உங்களுடைய சொத்தை மதிப்பிடுதல் மிக மிக தேவையாய் இருக்கிறது. 2. சொத்தை விற்பதற்கும், சொத்தை வாங்குவதற்கும், வாங்குவோர் விற்பவர்களுக்கு இடையே நடக்கும் விலை நிர்ணயித்தலில் அதிக அளவு பேச்சு வார்த்தைகள் சொத்தின் மதிப்பை பற்றி நடந்து கொண்டு இருக்கும் , அரசினுடைய வழிகாட்டி மதிப்பும், சந்தை மதிப்பும் காலி நில சொத்தை வாங்கும் போதும், விற்கும் போதும் காலி நிலத்தின் விலையை பெருமளவில் தீர்மானிக்கிறது. 3. அதே போல் காலி நிலத்தை அரசு கையகபடுத்தும் போது நஷ்ட ஈடு கொடுப்பதற்கு நிர்ணயிக்கும் மதிப்பு பெரும்பாலும் வழிகாட்டி மதிப்பு & சந்தை மதிப்பை சார்ந்தே இருக்கிறது. ஆனால் அதில் கட்டிடமோ ,

இந்த மாத வளர்தொழில் மாத இதழில் சொத்து தொடர்பானவற்றில் மானிய நிலங்களை அதிகம் அனுபவித்த பிராமணர்கள்!!

Image
இந்த மாத வளர்தொழில் மாத இதழில் சொத்து தொடர்பானவற்றில்            மானிய நிலங்களை அதிகம் அனுபவித்த பிராமணர்கள்!! என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது.வாய்ப்பு இருக்கும் நண்பர்கள் படித்து பயனுறுமாறு வேண்டுகிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3 #மானியம் #பிராமணர் #சொத்து #வளர்தொழில் #கட்டுரை #artical #valarthozhil #asset #property

கிரைய பத்திரத்தில் சொத்து விவரம் எழுதும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் !

Image
1. கிரைய பத்திரம் எழுதும் போது வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டம், தனி தனியாக எழுதுதல் வேண்டும். இரண்டும் ஒரே மாவட்ட பெயராக இருந்தாலும் , வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டம் , தனி தனியாக எழுதுதல் வேண்டும். 2. கிராம எண்ணும் இருக்கும், சர்வே எண்ணும் இருக்கும், இரண்டும் பற்றிய தெளிவான புரிதல் இருக்க வேண்டும். 3. பட்டா எண் , பட்டா படி உட்பிரிவு ஆகி இருந்தால் புதிய சர்வே எண் ஆகியவை குறிப்பிட்டு இருக்க வேண்டும். 4. சொத்து கூட்டு பட்டாவில் இருந்தால், சர்வே எண்ணின் ஒட்டுமொத்த விஸ்தீரணத்தை குறிப்பிட்டு அதில், வடக்கு ஓரம் இருந்து ஆரம்பித்தால் , வட பாகம் என்றும், தெற்கு , கிழக்கு, மேற்கில் இருந்து ஆரம்பித்தால் தென்பாகம், கீழ்பாகம், மேல்பாகம், என்று குறிப்பிட வேண்டும். 5. அப்படி வடபாகம், தென்பாகம், கீழ்பாகம், மேல்பாகம், என்று பிரித்தும் அதில் உள்ளே இடம் வாங்க போகிறீர்கள் என்றால் (எ.கா) வடபாகத்தில் கீழ மேலாக , தென்வடலாக, இத்தனை அடிநீளம், அகலம், என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். 6. பெரும்பாலும் கூட்டு பட்டாவில் இருந்தால் கட்டாயம் சொத்தின் நீள அளவுகளை அடியாலும், மீட்டரிலும், தெ

10k சந்தாதாரர்கள் கிடைத்ததற்கு… நன்றி Youtube Subscribers

Image
அன்புடையீர்! வணக்கங்களும் வாழ்த்துக்களும்!! என்னுடைய யுடியூப் சேனல் 10 ஆயிரம் subscribers ஐ தொட்டு இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.என்னுடைய subject பொழுது போக்கு அற்ற மகிழ்ச்சியின் சாரமற்றஒரு subject.அதுவும் என் முகத்தை தினமும் 3மணி நேரத்திற்கு பலர் பார்க்கிறார்கள் என்றால் நாம் குட்டி social media celebrity ஆகின்றோம். திருநெல்வேலி கலெக்டர் ஆபிஸில் ஒரு law student வந்து நீங்கதானே பரஞ்சோதி பாண்டியன் யூடியூபில் உங்களை பார்த்தேன் என்று அறிமுகப்படுத்தி கொள்ளும் போது லைட்டா கொஞ்சம் கிக் ஏறியது. இப்படியே ஒரு இலட்சம் subscribers ஐ தொட்டால் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிலத்தின் பயன்கள் போய் சேர வேண்டும் என்ற என் கனவுகள் மெய்பட்டு விடும். நன்றி முத்தங்களை என்னுடைய குழுவினருக்கு தெரிவித்து கொள்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நில

குத்தகை மற்றும் வாடகை பற்றி புரிந்து கொள்ள வேண்டியவை!

Image
1. விவசாயத்திற்கு அல்லாத எந்தவித குத்தகையும் ஒரு வருடத்திற்கு மேல் இருந்தால் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். 2. குத்தகை பத்திரத்தின் கண்டிசனுக்கு ஏற்றவாறு முன் அறிவிப்பு நோட்டீஸ் கொடுத்து குத்தகையை முடிவுக்கு கொண்டு வரலாம். வருடாந்திர குத்தகை என்றால் ஆறுமாத நோட்டீஸ் கொடுத்தும், மாதந்திர குத்தகை என்றால் 15 நாட்கள் முன்பு நோட்டீஸ் கொடுத்தும் கொண்டு வரலாம். 3. 1955 ன் ஆண்டின் உழுகின்ற குத்தகைகாரர் பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தப்பட்டு, நில சொந்தக்காரரின் உரிமையையும் , குத்தகைகாரரின் கடமையையும் விவரித்து இருவரையும் கட்டுக்குள் வைக்கிறது. 4. வீட்டு வாடகையை பொறுத்தவரை 1948 இல் போட்ட வீட்டுவாடகை கட்டுபாட்டு சட்டமும், மீண்டும் அதனை திருத்தி போடப்பட்ட 1960 ஆண்டு சட்டமும் வீட்டு வாடகை நடைமுறைகளை கட்டுபடுத்துகிறது. 5. குத்தகை பாக்கி வைத்தல், நிலத்திற்கும், அதில் விளையும் பயிருக்கும் பாதிப்பு ஏற்படுத்துதல், சாகுபடி செய்யாமல் தரிசாக நிலத்தை போட்டிருத்தல் , விவசாயத்திற்கு பயன்படுத்தாமல் வேறு காரணத்திற்காக உபயோகபடுத்துதல் போன்ற காரணங்களுக்காக குத்தகைதாரரை குத்தகையில் இருந்து வெளியேற்ற

ஆங்கிலேயரின் நிலநிர்வாகம் வரலாறு தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!

Image
1. வெள்ளையர்கள் காலத்தில் இருந்த கணக்கு வழக்கு நடைமுறைகள் உங்களுக்கு தெரிந்தாலமட்டுமே , பெரிய பெரிய எஸ்டேட்டுக்கள் , பண்ணைகள் வாங்கும்போதும், ஜமீன் ,இனாம் சொத்து் சிக்கல்கள் இருந்தால் குழப்பங்கள் இன்றி புரியும்.அந்த கால ஆவணங்களின் நகல்களை அலச முடியும், அதனால் அதனை எளிமைமைபடுத்தி வெள்ளையர் கால நில கணக்குககளை வரிசைபடுத்தி இருக்கிறேன். 2. காரன்வாலிஸ் பிரபுவால் முதன்முதலில் 1770 களில் பத்தாண்டுக்கு மட்டும் முதன்முறையாக வங்காளத்தில் ரொக்க தீர்வை விதிப்பு நடந்தது , அதனை டேசின்னியஸ் செட்டில்மென்ட் (DECINIOUS SETTLEMENT) என்பர். அதன் பிறகு இந்தியா முழுவதும் ஜமீன்தாரி முறை அமுல்படுத்தினர். அதனை PERMANENT SETTLEMENT என்றனர். கலெக்டர் நேரடியாக நிலத்திற்கு வரிவிதித்த முறை தாமஸ் மன்றோவால் அறிமுகபடுத்தபட்டது. அதனை இரயத்வாரிசெட்டில்மென்ட் என்பர்.  பஞ்சாப் பகுதிகளில் ஒரு கிராமமோ ஒன்றுக்கு மேற்பட்ட கிராமங்களோ ஒருங்கிணைந்து தீர்வையை செலுத்துவார்கள், அவை மகால்வாரி செட்டில்மென்ட் , தஞ்சை , செங்கை பகுதிகளில் சில கிராமங்களை கட்டுக்குள் வைத்து வரி வசூல் செய்து கொடுப்பார்கள் அதனை மிராசு செட்டில்மென்ட்

அடமானம் கடன் புரிந்துகொள்ள வேண்டியவை!

Image
  சொத்தின் மீதான அடமானம் கடன் புரிந்துகொள்ள வேண்டியது சொத்தை அடமானம் வச்சி கடன் வாங்கினேன் என்று சொல். நம் அன்றாட வாழ்வில் கேட்டு இருப்போம், போக்கியத்திற்கு விட்டு பணம் வாங்கினேன்! என்று காஞ்சிபுரம் திருவண்ணாமலை பகுதிகளில் சொல்வார்கள். பத்திரங்களில் ரூபாய் இரண்டு லட்சத்திற்கு போக்கிய பத்திரம் என்றால் பதிவும் செய்து இருப்பார்கள். திருநெல்வேலி, மதுரை பக்கங்களில் ஒத்திக்கு விட்ருக்கேன் என்பார்கள் பத்திரங்களில் ஒத்திகைதொகை , ஒத்திகை கெடு , ஒத்திகை சொத்து, ஒத்திகை பத்திரம், என்றே குறிப்பிடுவார்கள். பலர் ஒத்தி , பேறு , போக்கியம் வேறு, அடமானம் வேறு, என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அனைத்தும் ஒன்று தான். இந்த அடமானம் நான்கு வகையாக நம் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கிறது. அதனை பற்றி விரிவாக காண்போம். 1. சாதாரமான அடமானம் (SIMPLE MORTAGE) 2. சர்வாதின அடமானம் (MORTAGE WITH POSLO ) சாதாரண அடமானம் என்பது ! ஒரு தொகையை கடன் வாங்கும் போது தன் சொத்தை அடமானம் எழுதி கொடுத்து வாங்குவது அதில் மாதம்தோறும், அல்லது ஆண்டு தோறும், கொடுக்க வேண்டிய வட்டி, அசல் திருப்பி கொடுக்க வ