Posts

Showing posts from January, 2020

நில நிர்வாக துறையினருக்கு நிலம் உங்கள் எதிர்காலம் நூலன் ஆசிரியரின் 23 அம்ச கோரிக்கைகள்:

Image
                              1.தமிழகத்தின் முதல்வர், தமிழகத்தின் வருவாய் துணை அமைச்சர், தமிழக நிலநிர்வாக ஆணையர், நில நிர்வாகத்தில் இருக்கின்ற அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் நிலம் சம்மந்தப்பட்ட, தொழிலில் இருக்கின்ற மக்கள் மற்றும் நிலம் சம்மந்தமாக எதுவுமே தெரியாமல் வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிற அல்லது நம் நாட்டிலேயே விவரம் தெரியாமல் இருக்கின்ற பொதுமக்கள் அனைவருக்கும் கடந்த 16 ஆண்டுகாலமாக தமிழ்நாடு முழுவதும் சுற்றிவந்த களப்பணி அனுபவத்தின் மூலமாக நான் தெரிந்துகொண்டுள்ள நிலம் சம்மந்தப்பட்ட தகவல்களை தங்களுக்கு “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் மூலம் ஓரளவு தெரியப்படுத்தியிருக்கேன். இருந்தாலும் தமிழகத்தின் பல்வேறு நில சிக்கல்களுக்கு அடி நாதமாக இருப்பது அரசு இயந்திரத்தின் நில நிர்வாகம் ஆகும். 2.அரசு இயந்திரத்தில் நில நிர்வாகம் எங்கெல்லாம் தேங்கியிருக்கின்றது. எவையெல்லாம் சீர்திருத்தப்பட வேண்டும். என்பதை 23 அம்ச கோரிக்கைகளாக நான் உங்கள் முன் வைக்கிறேன். இதனை முகநூல் மற்றும் இணையதள விழிப்புணர்வு பிரச்சாரமாகவும் மனு போராட்டமாகவும், இயக்கமாகவும் இத

காலதாமதம் ஆகும் டிடிசிபி வரன்முறை படுத்துதல் அங்கீகாரம்!!

Image
     1.DTCP வரன்முறை  படுத்துதலுக்கு 7 இலட்சத்திற்கு மேல் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற பட்டு இருக்கிறது. சிஎம்டிஏ வரன்முறை படுத்துதலுக்கு 2 இலட்சம் மேல் மனுக்கள் பெறபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2.இன்னும் மனு செய்யபடாமல் அடுத்து எப்பொழுது ஆன்லைன் ஓபன் ஆகும். எப்பொழுது  வரன்முறைபடுத்துதலுக்கு மனு செய்யலாம் என்று  இன்னும் பல இலட்சம் மனுக்கள் மக்களிடையே காத்து இருக்கின்றன. 3.மனு செய்யபட்ட வரன்முறைபடுத்துதலில் ஒரு இலட்சத்திற்கும் குறைவாக தான் வரன்முறைபடுத்தபட்டு இருக்கிறது அதுவும் லேஅவுட் பிரமோட்டரகளின் வரன்முறைபடுத்துதல்தான் அதிக அளவில் டிடிசிபி அதிகாரிகள் செய்து முடித்து இருக்கிறார்கள். 4.பல வரன்முறை படுத்துதல் மனுக்கள்  அதிகாரிகளை நேரடியாக சந்தித்தால் மட்டுமே நடக்கிறது, இயல்பாகவே சராசரியாக  மூன்று மாவட்டத்திற்கு ஒரு டிடிசிபி அலுவலகம் போட்டு குறைவான ஊழியர்கள் போட்டு அதிகபடியான வேலைகளை செய்ய  முடியாமலும்  தவிக்கின்றன டிடிசிபி அலுவலகம். 5.கடந்த 20 ஆண்டுகளாக நடந்த பஞ்சாயத்து அங்கீகார மனைபிரிவுகளை மனைகளை ஒரு ஆறுமாதத்திற்குள் மனுசெய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏன்

தமிழ் இந்து நாளிதழில் வில்லங்கச் சான்றிதழ் (EC) பற்றிய எனது கட்டுரை வெளியாகி இருக்கிறது.

Image
தமிழ் இந்து நாளிதழின் புத்தக மதிப்புரை: நான் எழுதி நல்ல வரவேற்பை பெற்றுள்ள “நிலம் உங்கள் எதிர்காலம்” என்ற புத்தகத்தை தமிழ் இந்து நாளிதழ் மதிப்பீடு செய்தும், அதில் உள்ள ஒரு தலைப்பான வில்லங்கச் சான்றிதழ் பற்றியும்  வெளியிட்டு உள்ளது. நன்றி தமிழ் இந்து நாளிதழ்..! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன். எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர் 9962265834. (குறிப்பு) :சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) #இந்து #நாளிதழ் #வில்லங்கச்சான்றிதழ் #கட்டுரை #ec #paranjithipandian

எந்தெந்த கோர்டில் என்னென்ன வழக்கு விசாரிக்கிறாங்க? தெரிந்து கொள்ள வேண்டிய 20 தகவல்கள்!

Image
நிலம் சம்மந்தபட்ட சிக்கல்கள் பிரச்சனைகள் வரும்போது கோர்ட்டுக்கு போக வேண்டிய சூழல் ஏற்படும் போது வழக்கறிஞர்கள் சிட்டி சிவில் கோர்ட்,சப் கோரட்,முன்சிப் கோர்ட்,மேஜிஸ்ட்ரேட் கோரட்,ஹைகோரட் என்று பேசிகொள்ளும்போது  என்னை போல ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் சாதாரண பொதுமக்களுக்கு எந்த எந்த கோரட் எதற்கு என்று தெரியாது வக்கீல்களுக்குள் பேசிக்கொள்ளும் போது மலங்க மலங்க நிற்போம். இன்று தமிழ்நாடு பாண்டிசேரி பார்கவுன்சில் தலைவராக இருக்கும் அமல் அண்ணன் டீமில் சிவில் வழக்குகள் பார்க்கும் நல்ல திறமையானவழக்கறிஞர் திரு.அன்பழகன் அவர்கள் அவரின் சொந்த ஊரான தேவகோட்டை அருகில் நெல்வயல் கிராமத்திற்கு குடும்ப நிகழ்ச்சிக்காக என்னை அழைத்து சென்றார். அப்பொழுது ஒரு இரவு அவரிடம் எந்த எந்த கோர்ட் என்ன என்ன செய்கிறது என்று பாடம் எடுத்தார்.அதனை அப்பொழுது ஒரு 40 பக்க நோட்டு வாங்கி குறித்து கொண்டேன்.அதன்பிறகுநான் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது இப்பொழுதும் நிறைய பேர் என்னை போல வழக்கறிஞர் முன்னால் மலங்க மலங்க முழிப்பதை நான் பார்க்கிறேன்.அதனால் இந்த பதிவை சாமனிய மக்களுக்கு புரியும்படி எழுதுகிறேன் இந்த நேரத்தில் வழக்க

தெரிந்து கொள்ள வேண்டிய கட்டுமான ஒப்பந்தம்

Image
            1.சென்னை, திருச்சி , கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் பெருநகரங்களில் அடுக்குமாடி கட்டிடங்களில் வீடுகள் வாங்குவது சகஜமாக ஆகிவிட்டது என்பதை நாம் அறிவோம். அந்த வீடுகள் கட்டிமுடித்தபிறகு யாரும் வாங்குவதில்லை. 2.மேற்படி அடுக்குமாடி வீடுகளை கட்டிகொண்டிருக்கும் போதே கட்டுமானவர்கள் (Builders) அதனை சந்தைபடுத்த ஆரம்பித்துவிடுகின்றனர். மக்களும் மேற்படி சொத்தை வாங்கும்போது கட்டிமுடிப்பதற்கு முன்பே அதற்கு பணம் கொடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர். 3.அந்த நேரத்தில் Builders க்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குபவர்களுக்கும் இடையே கட்டப்படும் வீடு சம்பந்தமாகி ஒரு ஒப்பந்தம் போடப்படுகிறது. அந்த ஆவணத்தில் என்னென்ன   ஷரத்துகள் எல்லாம் இருக்க வேண்டும் என்பதனைப் பார்போம். 4.மேற்படி கட்டுமான அக்ரிமென்ட்டை 2012 க்கு முன்பு கட்டிட அக்ரிம்மென்ட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. 5.ஒரு ஆவணத்தை பதிவு செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக அசையா சொத்து கைமாறுதல் நடந்திருக்க வேண்டும். ஆனால் கட்டுமான ஒப்பந்தத்தில் அந்த நேரத்தில் எந்தவித சொத்து பரிமாற்றமும் நடக்கவில்லை.அதனால