மதுரை-திருப்பரங்குன்றத்தில் ரத்து ஆகும் அனுபந்த பட்டாக்கள்
மதுரைதிருப்பரங்குன்றத்தில் 25 வருடத்துக்கு முன்பு 4.50 ஹெக்டேர் நிலத்தை நத்தமாக வகைபடுத்தி 500 க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளாக பிரித்து கூலிதொழிலாளர்களுக்கு (அனைத்து சாதியினருக்கும்) ஒப்படை பட்டா (அனுபந்த பட்டாகொடுத்து இருக்கின்றனர்)அதில் 150 பேர்கள் மட்டும் வீடு கட்டி அதில் வாழ்ந்து வருகின்றனர். 350 பேர் பெயர் கிராம கணக்கில் இருக்கிறது.ஆனால் அவர்களின் ஆளோ முகவரியொ தெரியாமல் கொஞ்சம் பேரும், கொஞ்சம் பேர் அதை பிறத்தியாருக்கு கிரயமும் செய்துவிட்டனர்.அப்படி கிரயம் வாங்கியவர்கள் சிலர் வீடு கட்டி இருக்கின்றனர்.சிலர் அப்படியே காலி நிலமாக போட்டு இருக்கின்றனர். ஒருசிலர் உண்மையான பயனாளிகள் வராததை கண்டு போலி ஆவணங்கள் உருவாக்கி இடங்களை விற்று கொண்டும் இருந்தனர்.இதனை எல்லாம் கவனித்த வருவாய்துறை களவிசாரணை மேற்கொண்டு உண்மையான பயனாளிகள் யார் வீடு கட்டி இருக்கிறார்களோ அவர்களை தவிர்த்து அனைத்து பட்டாக்களையும் இரத்து செய்கின்ற வேலையை செய்கின்றது. அவ அவன் 2செண்டு இடத்துக்காக தூங்காம கொள்ளாமா என்னென்ன பாடா படுறான். இந்த தூங்கா நகர மக்கள் மேற்படி இடத்தை அக்கறையின்மை...