Posts

Showing posts from December 12, 2022

சூளகிரி தாலுகா!உத்தனபள்ளி அருகே நில சிக்கலுக்கான கள ஆய்வு !காலையிலே இயற்கை அன்னையை வியாபித்த அழகை இரசித்து இலயித்து நிற்கிறோம்.

Image
சூளகிரி தாலுகா ! உத்தனபள்ளி அருகே நில சிக்கலுக்கான கள ஆய்வு ! காலையிலே இயற்கை  அன்னையை வியாபித்த அழகை இரசித்து இலயித்து நிற்கிறோம் . இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவோர் 9841665836   #paranjothipandian   #realestate   #realestateagent   #training   #consultancy   #consultancyservices   #booksale   #tamilbooks #fieldwork #soolagiri   #uthanapalli

ஒரு முட்டை பிரச்சினைக்காக நீதிமன்றம் போனால் கோழியையே கொடுக்க வேண்டி வரும்

Image
ஒரு முட்டை பிரச்சினைக்காக நீதிமன்றம் போனால் கோழியையே கொடுக்க வேண்டி வரும் என்பது அய்யா செந்தமிழ் கிழார் பொன்மொழி அது போல நில மதிப்பைவிட அதிகம் செலவு செய்துவிட்டார்கள்! டிசி நில சிக்கலில் தம்பிக்கு நீதி கிடைத்திருக்க வேண்டும்.ஆனால் அவருக்கு எதிராக வந்துவிட்டது. நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது தீர்ப்பு தான் கிடைக்கும் அதற்கேற்றார்போல் இந்த நிலசிக்கல் விளையாட்டை விளையாட வேண்டும் என்று புரிய வைக்கவே வெகுநேரம் ஆகிறது! கடைசியாய் கிளம்பும் போது பேர்என்ன என்று கேட்டேன். "மனுநீதி"என்று சொன்னார். பேரை கேட்டாலே எனக்கு மண்டை காயுது! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவோர் 9841665836 #paranjothipandian   #realestate   #realestateagent   #training   #consultancy   #consultancyservices   #booksale   #tamilbooks #fieldwork #senthamil kizhar #moto #land value #   #justice #dc land #manu neethi

என்னய்யா செய்துகொண்டு இருக்கிறீர்கள் இவ்ளோபேர் இருந்தும் 10 ஆண்டுகளாக நிலசிக்கலை இழுத்து கொண்டு இருக்கிறீர்கள்

Image
என்னய்யா செய்துகொண்டு இருக்கிறீர்கள் இவ்ளோபேர் இருந்தும் 10 ஆண்டுகளாக நிலசிக்கலை இழுத்து கொண்டு இருக்கிறீர்கள்.ஈரை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்கி பெருமாளை பேயாக்கி வைத்து இருக்கிறீர்கள்.அரசு எந்திரத்தில் ஒரு வேலை என்றால் அதனை தொடர்ந்து காய் நகர்த்த வேண்டும்.அடுப்பில் சோறை பொங்கினால் தொடர்ந்து நெருப்பு கொடுக்க வேண்டும். 5 நிமிடம் நெருப்பு கொடுத்துவிட்டு 2 மணி நேரம் அணைச்சிவிட்டு வேறு வேலை பார்த்துவிட்டு மீண்டும் வந்து 5 நிமிடம் நெருப்பு கொடுத்தா மீண்டும் அணைச்சிவிட்டு இப்படியேதொடர்ந்தா சோறே வேகாது. அதுபோலதான் நிலசிக்கலும் நில சிக்கலுக்கு தொடர்ந்து சீரான இடைவெளியில் காய் நகர்த்தல் இருக்க வேண்டும். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவோர் 9841665836 #paranjothi_pandian #author #writer #trainer #consulting #people #fieldwork