Posts

Showing posts from October 28, 2020

நிலசீர்திருத்தம் -முழுமையடையாத திட்டம்

Image
   நிலசீர்திருத்தம் -முழுமையடையாத திட்டம் நிலசீர்திருத்த துறையில் மூலம் அரசு உச்சவரம்பு தரிசாக்கி அதனை நிலமற்றவர்களுக்கு ஒப்படைக்கின்ற F பத்திர ஆணை நிலமற்ற மக்களுக்கு அரசு வழங்கியது. தமிழகத்தில் பலர் F பத்திர ஆணையை வைத்து இருக்கிறார்கள் தவிர நிலத்தை சுவாதீனம் எடுத்து கொள்ள முடியவில்லை. இப்படி பல இடங்களில் unfinished Task ஆக நில சீர்திருத்த துறை செயல்பாடுகள் இருந்து இருக்கின்றன.இப்படி நில ஒப்படையாக பேப்பரை மட்டும் பெற்று நிலத்தை பெறாத பயனாளிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் நிலங்களை பெறுவதற்கான வேலையை நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளையினர் மூலமாக செய்வோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் www.paranjothipandian.in

பழைய சிலபஸ் - தொழில் அலுவலகமும் அதன் பயனும்

Image
    பழைய சிலபஸ் தொழில் அலுவலகமும் அதன் பயனும் குடும்பம் வேறு வணிகம் வேறு இல்லாத காலத்தில் வீட்டோடு ஒட்டிய அலுவலகம் வீடு வியாபரம் குடும்பம் என்று அனைவரும் சேர்ந்து பங்களிக்கின்ற பாரக்கின்ற வாழ்க்கை அமைப்பு.இப்படி பழைய சிலபஸ் இல் இன்றும் வியாபாரத்தை பலர் நடத்திகொண்டு்இருக்கின்றார்கள். முன்பக்கம் வராந்தா அதில் நுழைந்தவுடன் பாய் விரிந்து வைத்து இருக்கும் அலுவலகம் அதன் உட்புரம் ஒரு அறையில் சரக்கு இருக்கும ஒரு குடோன்,அதன் பிறகு வீட்டிற்கான வரவேற்பரை அதன் பிறகு இல்வாழ்க்கைகான வீடு என்று ஒரு கட்டமைப்பு வியாபரத்தில் அதிக புற நெருக்கடிகள் திடீர் எதிரிகள் அந்த வியாபர தலைவரை ஆட்டும் பொழுது குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் அவருக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் எடுக்கின்ற முடிவுகளுக்கு அந்த வியாபார தலைவனின் உணர்ச்சிகள் (Emotion) மிக முக்கிய பங்கு வகிக்கிறது நல்ல தூக்கம், நல்ல உணவு, நல்ல செக்ஸ் தரமான அன்பு சூழ் குடும்பம் இருந்தால் வியாபார தலைவன் வெற்றி மேல் வெற்றி அடைவார்கள். மேற்சொன்ன பழைய சிலபஸில் இவையெல்லாம் இயல்பாகவே அமைந்து விடும். இப்பொழுது இருக்கின்ற பிஸ்னஸ் சூழல் அப்படி இருப்பது இல...

ரியல்எஸ்டேட் தொழில்முனைவோருக்கு பாடபுத்தமாக நிலம் உங்கள் எதிர்காலம்

Image
  ரியல்எஸ்டேட் தொழில்முனைவோருக்கு பாடபுத்தமாக நிலம் உங்கள் எதிர்காலம் நன்றி வாசகர்களே! நண்பர்களே! சென்ற வருடம் நிலம் உங்கள் எதிர்காலம் இண்டாவது பதிப்பு வெளியிட்டு இருந்தேன். முழுதும் உங்கள் அன்பால் விற்று தீர்ந்தது. என்னை போல ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்ற முகவர்களுக்கு ஒரு கோனார் விளக்க உரை போல பலருக்கு உதவி இருக்கிறது. புத்தகம் மூலம் தெளிவு கிடைத்து இருக்கிறது. நிறைய நிலம் சம்மந்தபட்ட முடிவுகள் உருப்படியாக எடுத்து இருக்கிறோம். அக்கறை எடுக்காமல் வைத்து இருந்த நிலங்களுக்கு இப்பொழுது தான் பட்டா வாங்கினேன் என்றெல்லாம் பின்னூட்டம் வரும்பொழுது ஒரு நல்ல வேலையை தொழிலில் செய்து கொண்டு இருக்கின்றோம் என்ற மனநிறைவு வந்துவிட்டது. இந்த ஆயுத பூஜையில் பாடபுத்தகங்களோடு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தையும் படைத்து இருக்கும்.திருநெல்வேலி ரியல்எஸ்டேட் தொழில்முனைவர் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு அன்பும் நன்றியும் இப்படிக்கு சா.மு.பஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் www.paranjothipandian.in