Posts

Showing posts from November 9, 2020

நிலம் உங்கள் எதிர்காலம் best seller நோக்கி பயணிக்கிறது!

Image
 நிலம் உங்கள் எதிர்காலம் best seller  நோக்கி பயணிக்கிறது! சென்னையை சேர்ந்த நண்பர் அன்வர் கணியம் அறக்கட்டளை திரு.அன்வர் இந்த ஸ்கீரின் ஷாட்டை அனுப்பியிருந்தார். டெலகிராம் குழுக்களில் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் கிடைக்குமா என்று உங்கள் புத்தகம் தேடப்படுகிறது என்று. ஏற்கெனவே என்னிடம் சொல்லி இருந்தார் நிறைய பேர் டெலகிராம் குழுக்களில் கேட்கிறார்கள் என்று இப்பொழுது இந்த ஸ்கீரீன் ஷாட் பார்த்ததும் மண்டைக்குள் பட்டாம் பூச்சி பறக்குது Best Seller அந்தஸ்து சீக்கிரம் என் உழைப்பிற்கு கிடைத்துவிடும் என்ன நம்பிக்கை துளிர்விட்டு கொண்டு இலுக்கிறது   இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில முனைவர் www.paranjothipandian.in #bestseller #book #land #realestate #nilamudan # vaazhga # praptham

தரிசை பயிர் செய்யும் நிலமற்றவர் குடும்பம்!!!

Image
    நிலமற்றவர்கள் ஊரில் தரிசை தேடுங்கள் பயிர் செய்யுங்கள் கிராம நிர்வாக அதிகாரி அடங்கலில் நீங்கள் சாகுபடிசெய்கிறீர்கள் என்று குறிப்புகள் ஆகட்டும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படை பட்டாகேளுங்கள் என்று நான் எழுதியும் பேசியும் வருகிறேன். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரின் ஒதுக்குபுறமாக சும்மா இருந்த தரிசை ஒடுக்கபட்ட சமூக குடும்பம் விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டது. இப்பொழுது களத்தில் இறங்கி மனு கொடுக்கும் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.ஏற்கனவே நான் களத்தில் சென்று பார்த்த இடம் தான் இப்பொழுது தலையாரி இதெல்லாம் செய்யகூடாது என்று குரல் குடுக்க ஆரம்பித்து விட்டார் என்று என்னிடம் சொன்னார்கள்.பயிர் செய்ய வேண்டாம் என்று நோட்டீஸ் கொடுக்க சொல்லுங்க போனில் பேசி மிரட்டும் தொனியில் பேச வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று சொல்லியுள்ளேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் www.paranjothipandian.in #தரிசு #ஒப்படை #ஒடுக்கபட்டோர் #செங்கல்பட்டு #land #assignment