பதிவு துறையில், ‘சமாதான் திட்டம்’ அறிவிப்பு….!
படித்து பயன் அடையுங்கள்! பகிர்ந்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுங்கள்! பதிவுத்துறையில் வழிகாட்டி மதிப்பு குளறுபடியால், நிலுவை வைக்கப்பட்ட, ஐந்து லட்சம் பத்திரங்களுக்கு தீர்வு காண, ஜூன் இல் இருந்து ‘சமாதான் திட்டம்’ நடைபெற்று வருகிறது. சொத்து பரிமாற்ற பத்திரங்களை, அந்தந்த பகுதிக்கான வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், பதிவு செய்ய வேண்டும். அதற்கேற்றபடி, முத்திரைத் தீர்வை, பதிவு கட்டணம் போன்றவை முடிவு செய்யபடுகிறது. ஆனால், வழிகாட்டி மதிப்பை விட, குறைந்த மதிப்புக்கு, சிலர் பத்திரங்களை பதிவு செய்வதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட குறைந்த மதிப்புக்கு உரிய காரணத்தை உறுதி செய்ய, பதிவு சட்டம், 47 – ஏ மற்றும், 19 – பி ஆகிய பிரிவுகளின் படி, மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும். விசாரணைக்கு அனுப்பப்படும் பத்திரங்கள், மாவட்ட பதிவாளர் களவிசாரனை மேற்கொண்டு உடனடியாக கோப்புகளை நகர்த்தாமல் நீண்ட காலமாக நிலுவையில் போடப்படுவதால், சொத்து வாங்கியோருக்கு, பத்திரம் கிடைக்காமல் போகிறது. மேலும், பதிவுத்துறைக்கும், வருவா...