நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளை இனி மாவட்டந்தோறும் பயணம்!

நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளை இனி மாவட்டந்தோறும் பயணம்! நிறைய குக்கிராமங்களில் இருந்து நிலத்தை காணோம்!பட்டாவில் பெயரை காணோம்! உறவாடி மோசடி பத்திரம் போட்டுடாங்க! சமய நிறுவனங்கள் நோட்டீஸ் கொடுத்துட்டாங்க! காலம் காலமாக இருக்கிறோம் ஆனால் நிலத்தை அனாதீனம் ஆக்கிட்டாங்க என்றெல்லாம் மக்கள் போனிலும் முகநூல் வாட்ஸ்அப் டெலகிராம் கதைத்தலிலும் சொல்லும் பொழுது நேரடியாக கண்ணுக்கு கண் முகத்திற்கு முகம் பேசி பிரச்சினைகளின் தீர்வுகளை வழிகாட்டுதல்களை செய்வது போல வராது! ஆலோசனை கட்டணம் அறிவித்தும் எனக்கு நிறைய அழைப்பு வருகிறது. இத்தனைக்கும் நான் முழுநேர ஆலோசகர் அல்ல! வீட்டுமனை வியாபரம், தொழில்முனைவோருக்கான சாபங்களுக்கான பரிகார வேலைகள்! அடுத்த தலைமுறைக்கு தகவல்களை கொண்டு சேர்க்க வேண்டிய எழுத்தாளர் கடமை!வியாபார உறவுகளை நட்புகளை டீம்களை அன்பு பேணுதல்! இவ்வளவு வேலைகளுக்கு மத்தியிலும் இரவு 2மணி வரை ஆவது தினமும் அன்றைய வேலைகள் முடிய ஆகிறது! அதனால் கிராம பகுதிகளுக்கு பிரத்தியோக நேரம் ஒதுக்க முடியாமல் தள்ளி போகிறது! வெளிநாடுவாழ் மக்கள்! வியாபார பெருமக்கள் தனவந்தார்கள் நிறுவனங்கள்! அரசு நிறுவனங்கள் என அ...