திருவண்ணாமலை மாவட்ட நல் நூலகர் திரு.வெங்கடேசன் அவர்களுடன் இனிய சந்திப்பு!!!

திருவண்ணாமலை மாவட்ட நல் நூலகர் திரு.வெங்கடேசன் அவர்களுடன் இனிய சந்திப்பு!!! திரு.வெங்கடேசன் திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட நூலகத்தின் நூலகர்! பழகுதற்கு இனியவர். வா கண்ணு போ கண்ணு வா ராஜா போ ராஜா என்று அழைத்து தன்னை சுற்றி இருக்கின்ற உதவியாளர் பணியாளர்களை அழைத்து நூலக காரியங்களை நகர்த்தி விடுகிறார். என்னுடைய நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை தமிழக அரசின் நூலக துறை தேர்வு செய்து அவரின் மாவட்ட நூலகத்திற்கு அனுப்பி வைத்தது. அதனை எடுத்து அடுக்கி வைக்கும் பொழுது படித்து பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து பாராட்டு மழை பொழுந்தார். நகை எல்லாம் அடமானம் வைத்து சேமிப்பு எல்லாம் சேர்த்து வைத்து சொத்து வாங்குகிறோம். நிலம் வாங்கும் பொழுது இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று அறியாமலேயே இருக்கிறோம். மக்களுக்கு தேவையானதை எழுதி இருக்கிறீர்கள் என்று உளமார பாராட்டினார் சில நாட்கள் கழித்து நான் எழுதி கொண்டு இருக்கும் புத்தகத்திற்கு எனக்கு தேவையான reference புத்தகம் ஆன்லைனிலும் சென்னை பாண்டிசேரி நூலகங்களிலும் கிடைக்கவில்லை. தேடி பார்த்து தேடி பார்த்து கொஞ்சம் அலுத்து விட்டேன். அதன் பிறுகு அண்ணனுக்க...