Posts

Showing posts from December, 2020

இருப்பதற்கு நன்றியுணர்வு கொள்வோம்!!

Image
  இருப்பதற்கு நன்றியுணர்வு கொள்வோம்!! திரு.குணசேகரன் மாதவரம் மாற்று திறனாளி! ஆழந்த சிந்தனையாளர்,சொத்து வாங்க வழிகாட்டுதல் வேண்டி சந்தித்தோம். புத்தக எடிட்டிங் வேலைக்காக 20 நாட்களுக்கு மேல் வடசென்னை கொளத்தூரில் தங்கிக் கொள்ள நல்ல ரூம் பரிந்துரையுங்கள் ஆன்லைனில் oyo வில் விலை அதிகமாக இருக்கறது என்றேன். ஆனால் அவரே தன் நண்பருடன் கொளத்தூரில் சுற்றி அலைந்து அசோக் விடுதியை புக்செய்து கொடுத்தார் நம் நண்பர்கள் பலர் உடல் கைகால்கள் நன்றாக இருந்தும் முடி கொட்டுது, உயரம் கம்மி ன்னு புலம்பிகிட்டு இருக்காங்க! இருக்கின்ற உடலுக்கு நன்றியுணர்வோடு இல்லாமல் !அப்படி இல்லாததை பற்றி நினைத்துக்கொண்டு இருக்கும் எதிர்மறை அரை கிறுக்கன்கள் நம்ம குணசேகரன் அண்ணனுடன் ஒரு தேநீர் சாப்பிடுங்கள். பேசாமலேயே நிறையப் பாடம் சொல்லிக் கொடுப்பார் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் www.paranjothipandian.in #paranjothi_pandian   #author   #writer   #trainer   #consulting   #book   #editing   #work   #thanks_giving

பத்திரம் உருவாக்கல் என்பது தேர்ந்த கலை- சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

Image

தமிழக நூலகத்துறையே ! கொஞ்சம் கண்ணைத் திறந்துப் பாரப்பா!!

Image
   தமிழக நூலகத்துறையே ! கொஞ்சம் கண்ணைத் திறந்துப் பாரப்பா!! தமிழக அரசின் நூலகத்திற்கு எனது நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 பாகம் 2 என இரண்டு புத்தகத்தையும் தமிழக அரசின் நூலகத்துறையில் வைப்பதற்கு மாதிரிகளை அனுப்பியுள்ளேன். டெல்லி, கல்கத்தா, மும்பை, சென்னை, கன்னிமாரா போன்ற நூலகங்களுக்கு ஒரு மாதிரி புத்தகத்தைத் தபாலில் அனுப்பி இரண்டுப் படிவங்கள் நிரப்பி ரூபாய் 100 கட்டணமாகக் கட்டி புத்தகத்தின் soft copy ஐ சிடியில் வைத்து ஒப்படைக்கச் சொல்லி இருந்தார்கள்.அனைத்தையும் செவ்வனே செய்து முடித்துவிட்டேன். நூலகமே இனி உன் கடமைதான் ! நீ நூலகத்திற்காகப் புத்தகங்களை வாங்கினால் நிலத்தை பற்றிய அறிவு இன்னும் பலரிடம் சென்று சேரும்! நண்பர்கள் யாராவது நூலக ஆர்டர் பெற்றுக் கொடுக்க உதவினாலும் பேருதவியாக இருக்கும். நூலகத் துறையே நல்ல செய்திக்காகக் காத்து இருக்கிறேன் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழிலமுனைவர் www.paranjothipandian.in #tamil #library #order #book #department #Nilam_ungal_ethirkalam #paranjothi_pandian #author #writer #trainer #consulting

சொத்துசிக்கல்களில் பயன்படுத்தி கொள்ளவேண்டிய இலவச நீதிமன்றம் சமரச மையங்கள...

Image

பஞ்சாயத்து நீங்க ஏன்ல வேட்டிய அவுக்குறீங்க!!!

Image
   பஞ்சாயத்து நீங்க ஏன்ல வேட்டிய அவுக்குறீங்க!!!   அப்ரூவ்டு மேட்டர் தான் டிடிசிபி க்கு போயிடுச்சே இனி என்ன ஜோலி ரியல்எஸ்டேட் காரங்ககிட்ட வீட்டு மனை உருவாக்கும் தொழிலில் வட்டிக்கு முதல் திரட்டி மனைப்பிரிவுகள் விற்பனை செய்து நாலு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அயராது உழைக்கின்ற ரியல்எஸ்டேட் தொழில் முனைவோர்களின்வழிப்பறி செய்வது போல் செய்யலாமா! கடந்த 20 வருடமாக உங்களிடம் பஞ்சாயத்து தலைவர்கள் வார்டு மெம்பர்கள் என்று ஒவ்வொருவருக்கும் கப்பம் கட்டித் தானே பஞ்சாயத்து NOC மனைகளைப் போட்டோம் அப்பொழுது அங்கீகாரம் பற்றி அரசே ஒழுங்கா கொள்கை முடிவு எடுக்கவில்லை! அப்பொழுது உருவாக்கிய மனைகளை இன்று விதி மீறல்கள் ஏன் போர்டு வைக்கிறீர்கள்! இப்பொழுது டிடிசிபி வரன்முறை படுத்துதல் அங்கீகாரம் வாங்க ஓலை அனுப்பி இருக்கிறார்கள்!! அதற்கு அவர்களுக்கு கப்பம் கட்டத் தானே நாங்கள் கடன் வாங்கி பணம் பிரட்டிக் கொண்டு இருக்கிறோம். வேலை புராசாஸ்ல இருக்கும்பொழுதே நீங்கள் அறிவிப்பு போர்டு வைத்து பொதுமக்களை பயமுறுத்தலாமா!! டிடிசிபியில் அங்கீகாரம் அரசுக் கட்டணம் மட்டும் கட்டச் சொல்லி வேலையை ஒரு வருடம் இழுக்காமல் இருந்தால் தான்

புளியமர சாலைகளில் இனியத் தொழில் பயணம்!!

Image
  புளியமர சாலைகளில் இனியத் தொழில் பயணம்!!   ரியல்எஸ்டேட் களப் பணிக்காக பழைய வேட்டவலம் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த ஆலம்பாடி கிராமத்திற்குச் சென்று இருந்தேன்.  விழுப்புரம் டூ திருக்கோயிலூர் சாலை டூ வீலர் பயணத்திற்கு ஏற்ற அழகான சாலை சாலையின் இருபக்கத்தில் பெரியப் பெரிய குடைப்போல் நிழல் விரித்து இருக்கும் புளியமரங்கள் மரங்கள், இப்படி மரங்கள் இருப்பதால் வெயில் தெரியாதப் பயணம் செய்தேன். இதுபோல 1970 களில் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் பல புளியமர சாலைகள் எல்லாம் இப்பொழுது சாலை விரிவாக்கத்தில் பிய்த்து எடுத்துவிட்டார்கள். இப்பொழுது அருகி போய் இருக்கும் புளியமர நிழற்சாலைகளில் விழுப்புரம் -திருக்கோயிலூர் சிறப்பான சாலை.இனிவருங்காலங்களில் சாலை விரிவாக்கம் செய்தால் புளியமரத்தில் கை வைக்காமல் இருக்க விழுப்புரம் மாவட்டத்தினர் காவலாக இருக்க வேண்டிகிறேன்   இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் www.paranjothipandian.in   #jameen   #realstate   #field   #paranjothi_pandian   #viluppuram   #Tamarind_Tree

எனக்கானப் போதிமரம் இந்த கடல் மங்கை!!

Image
  என்னுடைய போதிமரம்! கடந்த 18 ஆண்டுகளின் தொழில்முனைவு பயணங்களில் எனக்குள் நடக்கின்ற பல்வேறு மன போராட்டங்களுக்கு விடைகளை இந்த கடல்தாயிடம் வந்து அமரந்து அதனுடன் பேசி முடிவு எடுத்துகொள்வேன். பல்வேறு நபர்களுக்கு நான் ஆறுதல், ஹீலர், உந்துசக்தி, ஆனல் எனக்கு வலி தொய்வு களைப்பு போன்றவை ஏற்படும் பொழுது எல்லாம் அழகான கடல்தான் இளைப்பாறுதல்! தெளிவற்று இருக்கும் பொழுது இந்தக் கடலின் இரைச்சல் அனைத்தையும் சீராக்கிவிடும். ஒன்றே ஒன்றுதான் எனக்குப் பாடம் அலைகள் ஓய்வதில்லை நீயும் ஓயாமல் உழைத்துக்கொண்டு இரு!! இந்த கடலில் உன் அஸ்தி கரைக்கும் வரை!! எனக்கானப் போதிமரம் இந்த கடல் மங்கை!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர்   #கடல்   #போதி   #அலைகள்   #ஆறுதல் #ரியல்எஸ்டேட்   #பிசினஸ்   #பிராப்தம்  

கிஸ்தி பேஷ்குஷ் வித்தியாசம் என்ன ? சா.மு.பரஞ்சோதிபாண்டியன்

Image

தெரிந்துகொள்ள வேண்டிய 56 ஏர்உழவர்கள் கூட்டுறவு சங்க நிலங்கள்-சா.மு.பரஞ்ச...

Image

ஊத்தங்கரையில் மலர்ந்து நிற்கும் ஒரு ஆடிட்டர் !!!

Image
   ஊத்தங்கரையில் மலர்ந்து நிற்கும் ஒரு ஆடிட்டர் !!! பன்னாட்டு நிறுவனத்தில் இலட்சங்களில் ஊதியம் சென்னை பெங்களூர் என்று சம்பாத்தியம் வாழ்க்கை என்று இருந்த ஆடிட்டருக்கு சொந்த ஊரில் அவருடைய உணர்வின் வேர்கள் ஆழமாக ஊடுருவி இருந்ததால். ஊரில் தொழில் செய்யத் தன்னுடைய அலுவலகத்தை ஊத்தங்கரை ரவுண்டானாவில் லோகநாதன் சேகர் ஆடிட்டர் என்ற முத்திரையுடன் திறந்துவிட்டார். எனக்கு பல ஆண்டுகள் முகநூல் நண்பர்,ஒரு சில விஷயங்களில் எனது நிறுவனத்திற்கு உறுதுணையாக இருக்கிறார். ரியல்எஸ்டேட் களப்பணிக்காக பெங்களூர் சென்றப் பொழுது நன்றி நிமித்தமாக ஊத்தங்கரையில் ஆடிட்டரை சந்தித்துவிட முடிவுசெய்து அவரை சந்தித்தேன். நிறைய விஷயங்களில் எனக்கும் அவருக்கும் கருத்தொற்றுமை இருக்கிறது. வருங்காலங்களில் நம்முடன் அதிகம் பயணிக்கும் உறுதுணை ஆடிட்டர்.தொழில் முனைவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய மனிதர். நான் பயனடைந்து இருக்கிறேன் அதனால் பரிந்துரைக்கிறேன். பயன்படுத்திகொள்ளுங்கள்! தொழில் வாழ்வில் வெற்றிக் கொள்ளுங்கள்!!! இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் www.paranjothipandian.in 9841665836,9841665837 #ஊத்தங்கர

புதுச்சேரி தொல்காப்பியர் இலஞ்ச ஒழிப்பு படையினருடன் சந்திப்பு!!!

Image
  புதுச்சேரி தொல்காப்பியர் இலஞ்ச ஒழிப்பு படையினருடன் சந்திப்பு!!!   ஓய்வு பெற்ற புதுச்சேரி காவல்துறை ஆய்வாளரால் உருவாக்கபட்டு புதுவை புலனாய்வு என்ற பெயரில் அரசின் இலஞ்ச ஊழல்களை வெளிகொணருகின்ற வேலைகளை செய்கின்றார்கள். நில சிக்கலில் அவர்களுக்கு பல்வேறு புதிர்கள் இருந்து இருக்கிறது. அத்தனை முடிச்சுகளையும் அவிழ்க்க ரூம் போட்டு பாண்டிசேரி வரவழைத்துவிட்டனர். நான்கு மணிநேர இடைவிடாத உரையாடல் அனைத்துக்கும் விடை கிடைத்து கிளம்பி சென்றனர் இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் www.paranjothipandian.in #bribery   #pondicherry   #meeting   #paranjothi_pandian   #consulting   #writer   #author   #trainer      

நத்தமும் புன்செய்யும் ஒட்டியுள்ள பகுதிகளில் நிலம் வாங்கும் பொழுது கவனம்!...

Image
https://youtu.be/weaqmUxEjQo

பாண்டிசேரி மாநில கதாஸ்ட்ரல் ரிக்கார்டு என்றால் என்ன?-சா.மு.பரஞ்சோதி பாண்...

Image
பாண்டிசேரி மாநில கதாஸ்ட்ரல் ரிக்கார்டு என்றால் என்ன?-சா.மு.பரஞ்சோதி பாண்டியன் #pondicherry #kadhaastral_record #paranjothi_pandian #land #iconsaltancy #trainer #author #writer

மூன்றடுக்கு நில நிர்வாக முறை-பாண்டிசேரி மாநில நில நிர்வாக வரலாறு பாகம்-6

Image

எப்படி இருந்த ராயப்பா நகர் எப்படி ஆயிடுச்சி மக்களே!!

Image
  எப்படி இருந்த ராயப்பா நகர் எப்படி ஆயிடுச்சி மக்களே!! தாம்பரம் -வரதராஜபுரம் இராயப்பா நகர் 2004 களில் பல வியாபரங்கள் செய்து இருக்கிறேன். சோழிங்க நல்லூரில் இருந்து தாம்பரம் வந்து அங்கிருந்து முடிச்சூர் ரோடில் அட்டை கம்பெனி என்று பஸ் ஸ்டாப்பில் இறங்கி இராயப்பா நகர் என்ற பெரிய மனை பிரிவிற்குள் முள்ளும் புதருமாக man vs wild இல் செல்லும் பியர் கில்ஸ் போல முள்ளு மரங்களுக்கு இடையில் புகுந்து புகுந்து குனிந்து சில இடங்களில் ஊர்ந்து சென்று இருக்கிறேன். அப்படி எல்லாம் சென்று மனைகளின் கற்களை பார்த்து இருப்பேன் என்று நினைத்திட வேண்டாம் . இப்பொழுது இராயப்பா நகரின் கிழக்கு பக்கத்தில் தென்வடலாக போடபட்டு இருக்கும் மீஞ்சூர் பைபாஸ் அப்பொழுது highways நில எடுப்பிறகாக ஆர்ஜிதம் செய்ய மார்க் செய்யபட்ட கற்கள் அப்போதைய மனை பிரிவில் நட்டு இருந்தார்கள். அதனை தேடிதான் அப்பொழுது முள்ளுக்குள் செல்வேன். வாடிக்கையாளர் வாங்கிய மனைகள் வாங்க போகும் மனைகள் நில எடுப்பிற்குள் வருகிறதா என்று நேரடியாக ஆராய்ந்து பார்த்து சொல்வேன்.அவ்வளவு முட்புதராக மண்டி இருக்கும் மனை பிரிவு கடந்த சில வருடங்களில் மேக்கப் போட்ட புது பெண்ணாக

பிரெஞ்சு-ஆங்கிலோ அதிகார சண்டை-பாண்டிசேரி நில நிர்வாக வரலாறு-தொடர்ச்சி பா...

Image
https://youtu.be/jd6KS6snrY8