
உளமாற நன்றி IOV புதுச்சேரி !! அக்டோபர் 2 -சொத்து மதிப்பீட்டாளர்கள் தினத்தில் இன்ஸ்டியூசன் ஆப் வாலயுவர்ஸ்(IOV) -புதுச்சேரி உறுப்பினர்களிளிடையே zoom மூலமாக நடந்த விழாவில் சிறப்பு பேச்சாளாராக நிலம் சம்மந்தபட்ட தலைப்பில் நீண்ட உரையாற்றினேன்.பங்கேற்பாளர்கள் அனைவரும் தொழில்முறையில் அனுபவமும் பக்குவமும் உடையவர்கள்.அறிவுஜீவிகள் சிந்தனையாளர்கள் அவரகள் மத்தியில் பேசியது எனக்கான அங்கீகாரமாகவே நான் நினைக்கிறேன்.மறுநாள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அண்ணன் அன்பழகன் அவர்கள் பங்கேற்பாளர்கள் அனைவ ரும் நல்ல feedback கொடுத்தார்கள் என்று என்னை மீண்டும் ஊக்கபடுத்தினார் இன்று IOV பாண்டிசேரியில் இருந்து இளமுருகன் அண்ணன் பரிசுகேடயமும் என்னுடைய நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை வாங்கி கொள்வதற்காகவும் சிறு தோகை காசோலையும் அனுப்பி வைக்கிறோம் என்று சொன்னார்.(அடடா அங்கீகாரமும் பாராட்டும் எவ்வளவு உள்ள ஊக்கத்தை தருகிறது)அதற்கு நான் அனுப்பி வைக்க வேண்டாம் என் குழுவினரை பாண்டிசேரியல் வந்து வாங்கி கொள்கிறேன் என்று சொல்லி என் நண்பர் பாரதிதாசன் அவர்களை அனுப்பி பரிசு கேடயம் மற்றும் காசோலையை பெற்று கொண்டேன். இப்படி ஒரு ...