Posts

Showing posts from November 4, 2020

சென்னை-எண்ணூர் அருகில் நந்தியம்பாக்கம் கிராமத்தில் ஆர்டிஐ 2j ஆய்வு

Image
  சென்னை-எண்ணூர் அருகில் நந்தியம்பாக்கம் கிராமத்தில் ஆர்டிஐ 2j ஆய்வு தாத்தா சொத்துக்களை அப்பா அம்மாக்கள் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். இடங்களுக்கு எந்த எந்த சர்வே எண்கள் எங்கு எங்கு இருக்கிறது போன்ற விவரங்கள் எதுவும் தெரியாது. மேற்படி கண்டுக்காமல் விட்ட இடங்கள் எல்லாம் புதிய ஆவணங்களை உருவாக்கி சம்மந்தமில்லாதவர்கள் ஆண்டு அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் என்ற நிலையில் தாத்தா பாட்டி பெயர்கள் அ பதிவேட்டில் இருக்கிறதா என்று தேடிபார்க்க RTI யில் 2j மனு போட்டு இருந்தோம் .இரண்டு மணி நேரம் முழு கணக்கையும் தீர பார்த்து நமக்கு தேவையான குறிப்புகளை எடுத்து கொண்டோம். இப்பொழுது இதிலிருந்து நூல்பிடித்துகொண்டே சென்றால் கிடைக்கும் உறுதியான தகவல்கள் அடிப்படையில் சொத்து மீட்கும் படலம் ஆரம்பித்துவிடும். இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர் தொழில்முனைவர், www.paranjothipandian.in. #rti #2j #vao #nanthiyambakkam #asset #சொத்துமீட்டல் # property

கருப்புசட்டை -தனித்து நிற்கும் வீரம்!!!

Image
 கருப்புசட்டை -தனித்து நிற்கும் வீரம் அண்ணன் திருநெல்வேலி இராமகிருஷணன் அர்பணிப்புள்ள ரியல்எஸ்டேட் தொழில்முனைவர் அடிக்கடி தொடர்பிலேயே இருப்பார். அனைத்து தொழில் சார்ந்த விஷயங்களை பகிரந்து கொள்வார். கருப்பு சட்டை பற்றியும் ஒரு வாட்ஸப் செய்து போட்டு இருந்தார். உங்களுக்கு கருப்பு சட்டை சிறப்பாகதான் இருக்கறது. கருப்பு சட்டை ஒரு தனி அடையாளம் பிஸினஸ் உலகில் ஸடீவ் ஜாப்ஸ் தன்னை கருப்பு சட்டையிலே காண்பிப்பார். ஆப்பிள் கம்பெனியில் கருப்பு வண்ணம் இல்லாமல் இருக்காது. கருப்பு richness மற்றும் stand alone, brave போன்ற தன்மைகளை பிரதிபலிக்கும். அதனால் தொடர்ந்து கருப்பணியுங்கள் தலைமைத்துவத்துடன் தொழில் செய்யுங்கள். இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் www.paranjothipandian.in

மனிதர்கள் பல விதம்!!!

Image
    மனிதர்கள் பல விதம் கடந்ந வாரம் கடலூருக்கு கீழே தஞ்சை பள்ளதாக்கில் அதிராம்பட்டினம் வரை சென்று வந்ததில் திரு. நாகேஸ்வரம் -கும்பகோணம் பகுதிகளில் சொத்து சிக்கலகளுக்காக களபணி செய்தேன் அனைவருமே நல் விருந்தோம்பி வழி அனுப்பி வைத்தனர்.சந்தித்த ஒவ்வொருவரும் சமூகத்தின் ஒவ்வொருவிதமான வார்ப்பு ஒவ்வொருவருக்கும் வேறு வேறு வகையான நில சிக்கல்கள், ஆனால் சிக்கலை அணுக தெரியாமல் உணர்ச்சி கொந்தளிப்புகளால் தங்கள் மனதை குழப்பிகொள்கின்றனர். மனிதர்களின் அடிப்படை பலவீனமான பண்புகள் அப்படியே இருக்கிறது. நிலசிக்கல் தாண்டி அவர்களின் மன தெளவிற்காகவும் பேச வேண்டி இருக்கிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் www.paranjothipandian.in #man #different #social #service