Posts

Showing posts from December 18, 2022

தற்பொழுது புதிய உதயம் !

Image
குடியிருப்பு சங்கத்தில் நிலம் சம்மந்தபட்ட சிக்கல்கள் வரும்பொழுது ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் பயிற்சி கொடுத்தலும் அவசியமாகிறது. அப்படி பல்வேறு குடியிருப்பு சங்ககளுடன் தொடர்ந்து களபணிஆற்றி கொண்டுள்ளேன். தற்பொழுது புதிய உதயம் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் 9841665836 #paranjothipandian   #realestate   #realestateagent   #training   #consultancy   #consultancyservices   #booksale   #tamilbooks # newland   # குடியிருப்புசங்கம் #fieldwork

புதிய நிலநிர்வாகத்தை புதிய செட்டில்மெண்டை தமிழக அரசு கொண்டுவரவேண்டும்!

Image
புதிய நிலநிர்வாகத்தை புதிய செட்டில்மெண்டை தமிழக அரசு கொண்டுவரவேண்டும் !   தமிழ்நாட்டின் பழைய செட்டில்மெண்டு கணக்குபடி நீலகிரி ஆகிய மாவட்டங்களை தவிர மீதி மாவட்டங்களை கணக்கிட்டு பார்த்தால் சராசரி 2 கோடி 60 இலட்சம் ஏக்கர் சாகுபடி நிலம் உள்ள்து . சுமார் சாகுபடிக்கு லாய்க்கான 5 இலட்சம் ஏக்கர் தரிசு உள்ளது . ஆனால் அடிதட்டு நடுத்தர மக்களான SC,ST,MBC, மக்களுக்கு BC,FC யில் கடைநிலை ஏழைகளுக்கு நிலம் இறங்கவே இல்லை ! ST யில் நீலகிரியில் கோத்தருக்கும் தோடருக்கும் வெள்ளைகாரன் செட்டில்மெண்டு கொடுத்ததால் அவர்களுக்கு நிலம் இறங்கி இருக்கிறது . ஆனால் அதனையும் பிற சமூகத்தினர் அனுபவிக்கிறார்கள் . தேவேந்திர குலத்தார்களும் , வன்னியர்களும் பிராமணர்களின் இனாம் கிராமங்களில் பிராமண மிராசுகளின் கீழ் உழவு , நடுவு , அறுவடை போன்ற உழைப்புகளை கொடுத்து கொண்டு இருந்து கொண்டு இருந்தார்கள் . 1960 களில் பிராமண எதிர்ப்பு பிரசாரத்தால் கிராமங்களை விட்டு மும்பை சென்னை போன்ற நகரங்களுக்கு நகர்ந்துவிட்டதால் செட்டில்மெண்டு கணக்கில் வன்னியர்கள் தேவேந்திரர்களுக்கு நிலங்கள் இறங்கி இருக்கிறது . ஆக பிராமண இனாம் கிராமம் தவிர்