சிறு இனாம்களும்(Minor Inams) புழங்கும் உரிமையும் (Occupancy Rights)
சிறு இனாம்களும்(Minor Inams) புழங்கும் உரிமையும் (Occupancy Rights) 1)ஒரு முழு கிராமமோ அல்லது பல கிராமங்கள் சேர்ந்து ஒரு இனாம்தாரருக்கு மானியமாக வழங்கப்பட்டு இருந்தால் அது மேஜர் இனாம் (Major Inam) என்று புரிந்து கொள்ளுங்கள்அதுவே ஒரு கிராமத்திற்குள் உள்ள குறிப்பிட்ட நிலப்பரப்புகள் மட்டும் அளவு சொல்லி வழங்கப்படுமாயின் அதனை சிறு இனாம்கள் (Minor Inams) ஆகும்( Gopisetti Narayanaswami v. Subrahmanyam(1916) 2 L.W. 683 மெட்ராஸ் உயர்நீதிமன்றம்) 2) மேலும் இந்த சிறு இனாம்கள்( Minor Inams ) இரண்டு வகையாக பிரிக்கலாம் 1. சாஸ்வத செட்டில்மெண்ட் 1802( Permenent Settlement)க்கு முன்பு வழங்கப்பட்ட இனாம்கள் இதனை ( Pre-Settlement Inams) 2. Settlementக்கு பின் வழங்கப்பட்ட இனாம்கள் (Post-Settlement Inams) என்று தீர்ப்புகளில் ஆவணப்படுத்தி வகைப்படுத்தி இருக்கின்றார்கள் 3)1802 ம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட இனாம்கள் தான் பண்டைய அரசர்களால் கொடுக்கப்பட்டிருக்கும் வெள்ளையர்கள் செட்டில்மெண்ட் (Settlement)க்கு பின் வழங்கப்பட்ட ஒரு சில வகைத்தான் அது 1802 க்கு பிறகு ஜமீன்கள் என்று அங்...