இனாம் நிலங்களுக்கு இனாம் கமிஷனர் என்று ஒருவர் இருந்தார் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!
இனாம் நிலங்களுக்கு இனாம் கமிஷனர் என்று ஒருவர் இருந்தார் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்! 1) இனாம் நிலங்களுக்கு வரி கொடுக்க தேவையில்லை ஒரு சில இடங்களில் சிறிய அளவில் மட்டுமே வரிகள் விதித்தி ருப்பார்கள். இதனைப் பயன்படுத்தி இந்த நாட்டில் இருந்த பல நிலக்கிழார்கள் எங்களது நிலமும் இனாம் நிலம் தான் அதனால் நாங்களும் வரி கொடுக்க மாட்டோம் என்று வெள்ளையர்களிடம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு ஏற்றவாறு அந்த காலத்து கரணங்களும் அதாவது அந்த காலத்து கிராம நிர்வாக அதிகாரிகளும் அந்த இனாம்தாரர்களின் சொந்தக்காரர்களாக இருப்பதால் இனாம் இல்லாத நிலங்களையும் இனாம் நிலங்கள் என்று கணக்கு எழுத ஆரம்பித்து விட்டனர். இதனால் அதிக அளவில் வருவாய் கசிவு ஏற்படுவதை உணர்ந்த வெள்ளையர்கள் இனாம் நிலங்களை கணக்கெடுக்க ஆரம்பித்து விட்டனர். 2) அப்படி கணக்கெடுப்பதற்கும் அது இனாம் நிலம் தான் என்று உறுதிப்படுத்துவதற்கும் அரசின் சார்பில் ஒரு அதிகாரி தேவைப்பட்டார் அந்த அதிகாரியை தான் இனாம் கமிஷனர் என்கிறோம். இனாம் கமிஷனர் என்பவர் ஒரு நீதிபதி அல்ல ஆனால் அரசின் முழு பிரதிநிதி ஆவார். 3)இனாம...