Posts

Showing posts from November, 2020

கிராமம்தோறும் இருக்கும் பூமிதான நிலங்களின் தகவல்கள் பெறும் முயற்சி!!

Image
கிராமம்தோறும் இருக்கும் பூமிதான நிலங்களின் தகவல்கள் பெறும் முயற்சி!! மக்களிடம் ஒப்படைக்கபடாத ஏழாயிரம் ஏக்கர் பூமிதான நிலங்களின் கிராமங்கள் அதன் சர்வே எண்கள் கேட்டு தகவல் பெறும் உரிமைசட்டத்தின் கீழ் அனைத்து மாவட்ட பூமிதான பிரிவிற்கும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளை சார்பாக தகவல்கள கேட்டு அனுப்பி உள்ளேன். முழு தகவல்கள் வந்த பிறகு விவசாயம் செய்ய விரும்பும் ஆயிரம் நபர்களுக்கு ஆளுக்கு ஒரு ஏக்கர் பூமி தானம் வேண்டி மொத்தமாக மனு செய்கிற முடிவில் இருக்கிறேன்.அரசிடம் இருக்கும் அனாதீனம் நிலங்களை கேட்பதை விட விவசாயத்திற்கு மட்டும் ஓதுக்கபட்டு இருக்கும் பூமிதான நிலங்களை பெற முயற்சிப்பது சீக்கிரம் பலித்துவிடும்.அந்த நிலங்களின் நோக்கமே நிலமற்றவர்களுக்கு பயிர் செய்ய நிலம் ஒப்படைப்பது ஆனால் அவை எங்கெங்கு இருக்கிறது என்ற தகவல்கள் தான் இல்லை அதற்கான முயற்சி தான் இந்த வேலை இந்த வேலைகளுக்கு எல்லாம் ஆகும் தபால் செலவுகள் மனு செலவுகள் எல்லாம் ஏற்றுகொண்டு உள்ள புருனே வாழ் அண்ணன் திலக்ராஜ் முன்னாள் இராணுவ வீரர் திரு ஆகியவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்...

வடக்கு பெங்களூர் தாலுகாவில் முதலீட்டிற்கான மனை விற்பனை!!

Image
 வடக்கு பெங்களூர் தாலுகாவில முதலீட்டிற்கான மனை விற்பனை!! முதலீட்டிற்கான மனை விற்பனைக்கு இருக்கிறது விற்பவர் எனக்கு நன்கு அறிமுகமானவர் ! விலை அந்த பகுதியில் என்ன போகிறதோ அதனை வியாபரம் பேசி வாங்கலாம். எனக்கு அங்கு என்ன விலைவாசி என்று தெரியவில்லை ! பெங்களூர் நட்புகள் உதவி செய்யவும் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர www.paranjothipandian.in 9841665836,9841665837,9962265834 #North. #banglore #plot #இலங்கா

நிலங்களை பற்றி Self learning செய்யும் இரயில்வே அதிகாரி!!

Image
 நிலங்களை பற்றி Self learning செய்யும் இரயில்வே அதிகாரி!! சேகர் சார் மெங்களூர் இராஜாஜி நகரில் வசிப்பவர் .பூர்வீகம் தமிழநாடு சோளிங்கர் பக்கம்.ஓய்வு பெற போகும் இரயில்வே அதிகாரி நிலம் சம்மந்தபட்ட பல கேள்விகளை ஒரு தாளில் எழுதி வைத்துகொண்டு ஒவ்வொன்றாக கேட்கிறார் நானும் ஒவ்வொன்றாக விடையை அழிக்கிறேன்.அவரும் அனைத்தையும் எழுத்தால் குறிப்பெடுத்து கொள்கிறார். ஓய்வு இரயில்வே அரசு அதிகாரி கூட நிலங்களை பற்றி கற்றுகொள்ள மெனக்கெடுகிறார் .ஆனால் இன்றைய இளைஞர்கள் நிலங்களை கற்றுக்கொள்ள பால்மாறுகிறார்கள். நட்புகளே கற்று கொண்டால்தான் பெற்று கொள்ள முடியும். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் www.paranjothipandian.in #learning  #education #realestate

நிலம் உங்கள் எதிர்காலம் best seller நோக்கி பயணிக்கிறது!

Image
 நிலம் உங்கள் எதிர்காலம் best seller  நோக்கி பயணிக்கிறது! சென்னையை சேர்ந்த நண்பர் அன்வர் கணியம் அறக்கட்டளை திரு.அன்வர் இந்த ஸ்கீரின் ஷாட்டை அனுப்பியிருந்தார். டெலகிராம் குழுக்களில் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் கிடைக்குமா என்று உங்கள் புத்தகம் தேடப்படுகிறது என்று. ஏற்கெனவே என்னிடம் சொல்லி இருந்தார் நிறைய பேர் டெலகிராம் குழுக்களில் கேட்கிறார்கள் என்று இப்பொழுது இந்த ஸ்கீரீன் ஷாட் பார்த்ததும் மண்டைக்குள் பட்டாம் பூச்சி பறக்குது Best Seller அந்தஸ்து சீக்கிரம் என் உழைப்பிற்கு கிடைத்துவிடும் என்ன நம்பிக்கை துளிர்விட்டு கொண்டு இலுக்கிறது   இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில முனைவர் www.paranjothipandian.in #bestseller #book #land #realestate #nilamudan # vaazhga # praptham

தரிசை பயிர் செய்யும் நிலமற்றவர் குடும்பம்!!!

Image
    நிலமற்றவர்கள் ஊரில் தரிசை தேடுங்கள் பயிர் செய்யுங்கள் கிராம நிர்வாக அதிகாரி அடங்கலில் நீங்கள் சாகுபடிசெய்கிறீர்கள் என்று குறிப்புகள் ஆகட்டும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படை பட்டாகேளுங்கள் என்று நான் எழுதியும் பேசியும் வருகிறேன். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரின் ஒதுக்குபுறமாக சும்மா இருந்த தரிசை ஒடுக்கபட்ட சமூக குடும்பம் விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டது. இப்பொழுது களத்தில் இறங்கி மனு கொடுக்கும் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.ஏற்கனவே நான் களத்தில் சென்று பார்த்த இடம் தான் இப்பொழுது தலையாரி இதெல்லாம் செய்யகூடாது என்று குரல் குடுக்க ஆரம்பித்து விட்டார் என்று என்னிடம் சொன்னார்கள்.பயிர் செய்ய வேண்டாம் என்று நோட்டீஸ் கொடுக்க சொல்லுங்க போனில் பேசி மிரட்டும் தொனியில் பேச வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று சொல்லியுள்ளேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் www.paranjothipandian.in #தரிசு #ஒப்படை #ஒடுக்கபட்டோர் #செங்கல்பட்டு #land #assignment

சென்னை-எண்ணூர் அருகில் நந்தியம்பாக்கம் கிராமத்தில் ஆர்டிஐ 2j ஆய்வு

Image
  சென்னை-எண்ணூர் அருகில் நந்தியம்பாக்கம் கிராமத்தில் ஆர்டிஐ 2j ஆய்வு தாத்தா சொத்துக்களை அப்பா அம்மாக்கள் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். இடங்களுக்கு எந்த எந்த சர்வே எண்கள் எங்கு எங்கு இருக்கிறது போன்ற விவரங்கள் எதுவும் தெரியாது. மேற்படி கண்டுக்காமல் விட்ட இடங்கள் எல்லாம் புதிய ஆவணங்களை உருவாக்கி சம்மந்தமில்லாதவர்கள் ஆண்டு அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் என்ற நிலையில் தாத்தா பாட்டி பெயர்கள் அ பதிவேட்டில் இருக்கிறதா என்று தேடிபார்க்க RTI யில் 2j மனு போட்டு இருந்தோம் .இரண்டு மணி நேரம் முழு கணக்கையும் தீர பார்த்து நமக்கு தேவையான குறிப்புகளை எடுத்து கொண்டோம். இப்பொழுது இதிலிருந்து நூல்பிடித்துகொண்டே சென்றால் கிடைக்கும் உறுதியான தகவல்கள் அடிப்படையில் சொத்து மீட்கும் படலம் ஆரம்பித்துவிடும். இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர் தொழில்முனைவர், www.paranjothipandian.in. #rti #2j #vao #nanthiyambakkam #asset #சொத்துமீட்டல் # property

கருப்புசட்டை -தனித்து நிற்கும் வீரம்!!!

Image
 கருப்புசட்டை -தனித்து நிற்கும் வீரம் அண்ணன் திருநெல்வேலி இராமகிருஷணன் அர்பணிப்புள்ள ரியல்எஸ்டேட் தொழில்முனைவர் அடிக்கடி தொடர்பிலேயே இருப்பார். அனைத்து தொழில் சார்ந்த விஷயங்களை பகிரந்து கொள்வார். கருப்பு சட்டை பற்றியும் ஒரு வாட்ஸப் செய்து போட்டு இருந்தார். உங்களுக்கு கருப்பு சட்டை சிறப்பாகதான் இருக்கறது. கருப்பு சட்டை ஒரு தனி அடையாளம் பிஸினஸ் உலகில் ஸடீவ் ஜாப்ஸ் தன்னை கருப்பு சட்டையிலே காண்பிப்பார். ஆப்பிள் கம்பெனியில் கருப்பு வண்ணம் இல்லாமல் இருக்காது. கருப்பு richness மற்றும் stand alone, brave போன்ற தன்மைகளை பிரதிபலிக்கும். அதனால் தொடர்ந்து கருப்பணியுங்கள் தலைமைத்துவத்துடன் தொழில் செய்யுங்கள். இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் www.paranjothipandian.in

மனிதர்கள் பல விதம்!!!

Image
    மனிதர்கள் பல விதம் கடந்ந வாரம் கடலூருக்கு கீழே தஞ்சை பள்ளதாக்கில் அதிராம்பட்டினம் வரை சென்று வந்ததில் திரு. நாகேஸ்வரம் -கும்பகோணம் பகுதிகளில் சொத்து சிக்கலகளுக்காக களபணி செய்தேன் அனைவருமே நல் விருந்தோம்பி வழி அனுப்பி வைத்தனர்.சந்தித்த ஒவ்வொருவரும் சமூகத்தின் ஒவ்வொருவிதமான வார்ப்பு ஒவ்வொருவருக்கும் வேறு வேறு வகையான நில சிக்கல்கள், ஆனால் சிக்கலை அணுக தெரியாமல் உணர்ச்சி கொந்தளிப்புகளால் தங்கள் மனதை குழப்பிகொள்கின்றனர். மனிதர்களின் அடிப்படை பலவீனமான பண்புகள் அப்படியே இருக்கிறது. நிலசிக்கல் தாண்டி அவர்களின் மன தெளவிற்காகவும் பேச வேண்டி இருக்கிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் www.paranjothipandian.in #man #different #social #service