Posts

Showing posts from August, 2021

கள்ளக்குறிச்சி முதல் திருவள்ளூர் வரை களப்பணி

Image
  சேலம் -ஓமலூர் பக்கம் சுற்றிகொண்டு இருக்கிறேன். பணி முடிந்ததும் அப்படியே கள்ளகுறிச்சி -திருக்கோவிலூர் -திருவண்ணாமலை-ஆரணி-சோளிங்கர் திருவள்ளுர் என இந்த வாரம் திட்டமிடுகிறேன் ! புதிய நபர்களை புதிய நில சிக்கல்களை பார்க்க தயாராய் உள்ளேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9962265834 #paranjothipandian #KallakurichiSouthDMK #Thiruvannamalai #aarani #sholinganallur #field #land #problem #issue #trainer #consulting #author #writer

தங்கள் நில சிக்கலை கூட தொகுத்து சொல்ல முடியாத மக்கள் பலர் இருக்கிறார்கள்!

Image
   தங்கள் நில சிக்கலை கூட தொகுத்து சொல்ல முடியாத மக்கள் பலர் இருக்கிறார்கள்! பெருமாள்-பெங்களூரில் கட்டிட தொழிலாளி , மாற்று திறனாளி கள்ள குறிச்சி பக்கம் ஒரு கிராமத்தில் தந்தை வாங்கிய ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் கூட்டு கிணறு பாத்யதை சிக்கல்கள் இருக்கிறது. அது அடிதடி போலிஸ் பஞ்சாய்த்து வரை போயிருக்கிறது. கடந்த மாதம் ரூ 1000 போட்டு வீடியோ கால் ஆலோசனை வந்து இருந்தார். அவரால் நில சிக்கலை சொல்லவே முடியவில்லை ! எதிர்மனுதாரர்களின் குணங்களையும் இப்படி சொல்றாங்க அப்படி சொல்றாங்க என்று பிரச்சனையை சுத்தி சுத்தி நடக்கிற விஷயங்களை சொல்கிறார் பிரச்சினையை சொல்ல தெரியவில்லை! ஆவணங்கள் மெயிலில் அனுப்ப சொன்னேன் அனைத்தையும் ஒரு டிடிபி சென்டரில் இருந்து அனுப்பினார் .ஒரு இரவு முழுவதும் படித்து எனக்கு தோன்றுகின்ற எழு வினாக்களையும் போனில் கேட்டேன் அப்பொழுதும் சொல்ல தெரியவில்லை! ஆனால் அவர் ஐயா!ஐயா! என்று புலம்பதான் செய்கிறார்.கள்ள குறிச்சியில் கருத்தரங்கம் திட்டமிட்டவுடன் பெருமாள அண்ணனுக்கு போன் செய்து பெங்களூரில் இருந்து வாருங்கள் என்று சொல்லி நேரடியாக களத்திற்கு சென்றேன்.அந்த இடத்திற்கு சென்றவ...