Posts

Showing posts from December, 2021

நான் குளித்து விளையாடிய வழுதரெட்டி ஏரிதான் இன்று விழுப்புரம் புது பஸ் ஸ்டாண்ட்!!!

Image
   நான் குளித்து விளையாடிய வழுதரெட்டி ஏரிதான் இன்று விழுப்புரம் புது பஸ் ஸ்டாண்ட்!!! பாண்டிசேரி -செந்தில் முருகன் பிறந்து வளர்ந்தது விழுப்புரம் நகரத்தில் செட்டில்ஆனது பாண்டிசேரியில் !அரசு ஊழியாராக இருந்து ஓய்வு பெற்றவர்! மிகவும் பக்குவபட்டவர்! மனிதர்களை கையாளுவதில் திறனாளர்விழுப்புரத்தில் நடந்த நிலத்தின் நலமறிய ஆவல் நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து கலந்து கொண்டவர் அதன்பிறகு என்னை இரண்டு மூன்று முறை சந்தித்து அன்பை பரிமாறிகொண்டோம்! அடுத்து கடலூரில் நடந்த வழிகாட்டுதல் முகாமிற்கு நேரடியாக வந்து தன்னார்வலாராக சிரம தானம் செய்தார் .நிகழ்ச்சிக்கு தேவையான சால்வைகள் நன்கொடையாக எடுத்து வந்தார்அன்னாருடன் ஒரு வேலையாக விழுப்புரம் பயணபடும் பொழது விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் தேனிர் அருந்தினோம். அப்பொழுது அவர் பேச்சு வாக்கில் பழைய விழுப்புரத்தை படம் பிடித்து காட்டினார்!விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட்,கலெக்டர் ஆபிஸ்,கோர்ட் என்று இருக்கின்ற இந்த பெரிய வளாகம் முழுதும் வழுதரெட்டி ஏரி இந்த ஏரியில் நான் குளித்து இருக்கிறேன்! இதோ நாம் இன்று டீ குடிக்கும் இந்த டிரெயினேஜ் பாதை ஒரு காலத்தில் வாய்க்கால்! இந்த ...

முருகம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள்!!!

Image
   முருகம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள் !!! அண்ணன் இர.கிளியப்பன் வழக்கறிஞர் அரசியலாளர் முருகம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக அந்த கிராம மக்களால் தேர்ந்து எடுக்கபட்டு இருக்கிறார்! அன்னாரை வாழ்த்தி சால்வையும் பரிசு கேடயமும் வழங்கினேன் கிளியப்பன் அந்த ஊரில் தவிர்க்க முடியாத ஆளுமை! Go Getter தனக்கு தேவையானதை தானே தேடி கொள்ளும் ஆற்றல் படைத்தவர் கிராமத்திற்கு நிறைய செய்ய வேண்டும்! தொண்டு நிறுவனங்கள் மற்றும் என்னுடைய வெளி தொடர்புகளை கிராமத்திற்கு அறிமுகபடுத்த கேட்டு கொண்டார்! நானும் கிராமத்தின் மொத்த ஜாதகத்தையும் சேகரித்து கொடுங்கள் நிறைய வேலைகள் செய்யலாம் என்று சொல்லி இருக்கிறேன் நீடித்த ஆயுளும் ஐஸ்வர்யமும் பெற்று தானும் நன்றாக இருந்து கிராமத்தையும் நன்றாக வைத்து இருக்க வாழ்த்துகிறேன் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9962265834 #paranjothipandian #writer #consulting #trainer #field #document #agent #realestate #village #agent

அருங்குணம் -ஊராட்சிமன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள்

Image
   அருங்குணம் -ஊராட்சிமன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள் மதுராந்தகம்-அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவராக திரு.வி.யோகேஷ் பாபு அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டதை வாழ்த்தி சால்வை மற்றும் அவர் பெயர் படம் பொறித்த வாழ்த்து கேடயம் நான் வழங்கினேன் திரு.யோகேஷ் பாபு இளைஞர்,வழக்கறிஞர் நல்ல வாசிப்பாளர். இந்த மழைகாலத்திலும் இரவு முழுதும் பஞ்சாயத்து அலுவலகத்தில் தங்கி களபணியாற்றும் தோழர்! ஒரு வகையில் எனக்கு தம்பி! நிச்சயம் சமூகத்தை அடுத்த கட்ட நகர்விற்கு கொண்டு செல்லும் தலைவர்களில் யோகேஷ் பாபுவும் ஒரு வருங்கால நம்பிக்கை அன்பை முன்வைத்து செய்யும் பக்குவம் அறிவை பின்பற்றும் நிதானம் இருக்கிறது! இன்னும் தன்னை ஆழமாக உணர்ந்து அதில் வேர்விட்டு கிளைத்து பலருக்கு நிழல் தர தன்னை தகுதி படுத்திக்கொள்ளும் களமாக ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் ஊராட்சியின் அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பயன்பட வாழ்த்துகிறேன் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #paranjothipandian #writer #consulting #trainer #field #document #agent #realestate #village #agent...

நிலத்தின் நலமறிய ஆவல் -4 தோழமைகளுக்கு நன்றி!!!

Image
 நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளையின் நிலத்தின் நலமறிய ஆவல் -4 வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்கு தங்கள் சமூக கடமை ஆற்றி உணர்ச்சி ரீதியான பலத்தை (Emotionally Strong) தோழமைகளுக்கு நன்றி!!!   இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9962265834 / 9841665836 #paranjothipandian   #author   #trainer   #writer   #consulting   #trust