காலதாமதம் ஆகும் டிடிசிபி வரன்முறை படுத்துதல் அங்கீகாரம்!!

    

1.DTCP வரன்முறை  படுத்துதலுக்கு 7 இலட்சத்திற்கு மேல் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற பட்டு இருக்கிறது. சிஎம்டிஏ வரன்முறை படுத்துதலுக்கு 2 இலட்சம் மேல் மனுக்கள் பெறபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2.இன்னும் மனு செய்யபடாமல் அடுத்து எப்பொழுது ஆன்லைன் ஓபன் ஆகும். எப்பொழுது  வரன்முறைபடுத்துதலுக்கு மனு செய்யலாம் என்று  இன்னும் பல இலட்சம் மனுக்கள் மக்களிடையே காத்து இருக்கின்றன.

3.மனு செய்யபட்ட வரன்முறைபடுத்துதலில் ஒரு இலட்சத்திற்கும் குறைவாக தான் வரன்முறைபடுத்தபட்டு இருக்கிறது அதுவும் லேஅவுட் பிரமோட்டரகளின் வரன்முறைபடுத்துதல்தான் அதிக அளவில் டிடிசிபி அதிகாரிகள் செய்து முடித்து இருக்கிறார்கள்.

4.பல வரன்முறை படுத்துதல் மனுக்கள்  அதிகாரிகளை நேரடியாக சந்தித்தால் மட்டுமே நடக்கிறது, இயல்பாகவே சராசரியாக  மூன்று மாவட்டத்திற்கு ஒரு டிடிசிபி அலுவலகம் போட்டு குறைவான ஊழியர்கள் போட்டு அதிகபடியான வேலைகளை செய்ய  முடியாமலும்  தவிக்கின்றன டிடிசிபி அலுவலகம்.

5.கடந்த 20 ஆண்டுகளாக நடந்த பஞ்சாயத்து அங்கீகார மனைபிரிவுகளை மனைகளை ஒரு ஆறுமாதத்திற்குள் மனுசெய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏன் என்று புரியவில்லை. வந்து வரன்முறைபடுத்தினால் தான் பதிவு என்று சொல்லி விட்டாலே அனைவரும் தங்களுக்கு தேவைபடும் நேரத்தில் வரன்முறைபடுத்தி கொள்வார்கள்.

6.1998 இல் போடபட்ட நகர்புற நில உச்சவரம்பு வரன்முறை படுத்துதலே இன்னும் 20 ஆண்டுகளாக வரன்முறைபடுத்திகொண்டு  இருக்கின்றனர் அதுவும் இன்னும் முடிந்தபாடில்லை ஆக இது தான் அரசு எந்திரத்தின் performance என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

7.கால தாமதமான மனுவுக்கெல்லாம் ஏற்கெனவே 10 சதவீதம் 25 சதவீதம் 50 சதவீதம் என்று தண்ட கட்டணம் வசூல் செய்துவிட்டு தற்போது காலதாமதம் பல மாதங்களாக அரசால் நடக்கின்றன. அரசு எந்திரத்தின் தாமதத்தால் திருமணம் வீடுகட்டுதல் போன்ற செலவுக்கு மனையை விற்க முடியாமல் காத்து இருக்கின்றனர்.

8.ஏற்கெனவே பல இலட்சம் மனுக்கள் நிலுவை மனு செய்யாமல் பல இலட்சம் மனுக்கள் இருக்கிறது  எப்படிபார்த்தாலும் பல்லாயிரம் கோடிக்கு வருமானம் எதிர்காலத்தில் டிடிசிபியில் சி எம் டி ஏ வில் இருக்கிறது.

9.எனவே டிடிசிபி அலுவலகமும் வட்டம் தோறும் அல்லது கோட்டம் தோறுமாவது ஒரு டிடிசிபி அலுவலகத்தை திறந்து நல்ல அதிகாரிகளை நியமித்து வரன்முறை படுத்துதல் அங்கீகாரமும் அதன் பிறகு எதிர்காலத்தில் வரும் புதிய ரெகுலர் அங்கீகாரமும் என தொடர்ந்து பணிகளை செய்யலாம்,தாலுகா ஆபிஸ் பத்திர ஆபிஸ் போல அப்ரூவ்டு ஆபிஸ் என்றும் ஒன்று இருக்கின்றது என்று மக்கள் மனதில் பதிந்துவிடும்.

10.வரன்முறைக்கு மனு செய்யாமல் இருக்கின்ற   மனைபிரிவுகளுக்கு மனைகளுக்கு ஆன்லைனில் மனு செய்ய மீண்டும் ஏற்பாடு  செய்யுமாறு வேண்டுகிறோம்.கால அவகாசம் எல்லாம் நிர்ணயிக்காமல் பட்டா மாறுதலுக்கு எப்படி மனு செய்யபடுகிறதோ அதேபோல நடைமுறையை கடைபிடித்தால் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுவர்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்
தொழில்முனைவர்.
9841665836

#dtcp #approved #layout #online #cmda #petition #registeroffice #promotters #panjayat #district #taluk #time-delay #landceiling #plot #realtors #realestate #paranjothipandian #வரன்முறை #சிஎம்டிஏ #நகர்புறநிலஉச்சவரம்பு #மனு #பஞ்சாயத்து #அங்கீகாரம் #மனை #வட்டம் #மாவட்டம் #அலுவலகம் #அப்ரூவ்டு

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்