புளியமர சாலைகளில் இனியத் தொழில் பயணம்!!

  புளியமர சாலைகளில் இனியத் தொழில் பயணம்!!

 

ரியல்எஸ்டேட் களப் பணிக்காக பழைய வேட்டவலம் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த ஆலம்பாடி கிராமத்திற்குச் சென்று இருந்தேன். 
விழுப்புரம் டூ திருக்கோயிலூர் சாலை டூ வீலர் பயணத்திற்கு ஏற்ற அழகான சாலை
சாலையின் இருபக்கத்தில் பெரியப் பெரிய குடைப்போல் நிழல் விரித்து இருக்கும் புளியமரங்கள் மரங்கள், இப்படி மரங்கள் இருப்பதால் வெயில் தெரியாதப் பயணம் செய்தேன்.
இதுபோல 1970 களில் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் பல புளியமர சாலைகள் எல்லாம் இப்பொழுது சாலை விரிவாக்கத்தில் பிய்த்து எடுத்துவிட்டார்கள்.
இப்பொழுது அருகி போய் இருக்கும் புளியமர நிழற்சாலைகளில் விழுப்புரம் -திருக்கோயிலூர் சிறப்பான சாலை.இனிவருங்காலங்களில் சாலை விரிவாக்கம் செய்தால் புளியமரத்தில் கை வைக்காமல் இருக்க விழுப்புரம் மாவட்டத்தினர் காவலாக இருக்க வேண்டிகிறேன்
 
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
www.paranjothipandian.in
 
#jameen #realstate #field #paranjothi_pandian #viluppuram #Tamarind_Tree

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்