நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளை இனி மாவட்டந்தோறும் பயணம்!

 நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளை இனி மாவட்டந்தோறும் பயணம்!



நிறைய குக்கிராமங்களில் இருந்து நிலத்தை காணோம்!பட்டாவில் பெயரை காணோம்! உறவாடி மோசடி பத்திரம் போட்டுடாங்க! சமய நிறுவனங்கள் நோட்டீஸ் கொடுத்துட்டாங்க! காலம் காலமாக இருக்கிறோம் ஆனால் நிலத்தை அனாதீனம் ஆக்கிட்டாங்க என்றெல்லாம் மக்கள் போனிலும் முகநூல் வாட்ஸ்அப் டெலகிராம் கதைத்தலிலும் சொல்லும் பொழுது நேரடியாக கண்ணுக்கு கண் முகத்திற்கு முகம் பேசி பிரச்சினைகளின் தீர்வுகளை வழிகாட்டுதல்களை செய்வது போல வராது!
ஆலோசனை கட்டணம் அறிவித்தும் எனக்கு நிறைய அழைப்பு வருகிறது. இத்தனைக்கும் நான் முழுநேர ஆலோசகர் அல்ல! வீட்டுமனை வியாபரம், தொழில்முனைவோருக்கான சாபங்களுக்கான பரிகார வேலைகள்! அடுத்த தலைமுறைக்கு தகவல்களை கொண்டு சேர்க்க வேண்டிய எழுத்தாளர் கடமை!வியாபார உறவுகளை நட்புகளை டீம்களை அன்பு பேணுதல்! இவ்வளவு வேலைகளுக்கு மத்தியிலும் இரவு 2மணி வரை ஆவது தினமும் அன்றைய வேலைகள் முடிய ஆகிறது! அதனால் கிராம பகுதிகளுக்கு பிரத்தியோக நேரம் ஒதுக்க முடியாமல் தள்ளி போகிறது!
வெளிநாடுவாழ் மக்கள்! வியாபார பெருமக்கள் தனவந்தார்கள் நிறுவனங்கள்! அரசு நிறுவனங்கள் என அனைவரும் தொழில் ரீதியான ஆலோசனைகள் !சேவைகள் செய்து கொடுத்து கொண்டு இருக்கிறேன்!
ஆனால் இரண்டு மாடு வைத்து கொண்டு கொஞ்சம் காணி வைத்து கொண்டு தன் மகனையும் மகளையும் படிக்க வைத்துகொண்டு தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவனுக்கு இன்னொரு நபரால் மோசடி பத்திரம் போடும் பொழுது அவர் மனமுடைந்து போக அந்த வீட்டில் இருக்கும் மகள் யுடீயூப் பார்த்துவிட்டு தன் அப்பா மனநிலையும் வீட்டு நில சிக்கலையும் போனில் பேசுபவர்களுக்கு முழுமையான தீரவு கொடுக்க முடியவில்லை!
நான்கு பேர் சேர்ந்து கடல் தொழிலுக்கு சென்று அன்று வந்த 1500 ரூபாயை படகு பெட்ரோல் ,வலை பராமரிப்பு ,படகு என்ஜின் பராமரிப்புக்கு எடுத்து வைத்து மீத பணத்தை அந்த நால்வரும் பிரித்து கொண்டு வாழ்கிற மீனவருக்கு தன் வீட்டு கிராமநத்த பட்டா சிக்கலை சரி செய்ய தெரியாமல் அதற்கு தாலுகா ஆபிசிற்கு செல்வது பெரிய செலவு என்று இருக்கின்றார்கள்!
இன்னும் பல விவசாயிகள், கூலிகள், கம்பெனி ஊழியர்கள் தன் நில சிக்கலை கோர்வையாக எடுத்து சொல்ல கூட முடியாத நிலையில் இருக்கிறார்கள் இவர்களிடம் போனில் பேசினாலே முழு தன்மையும் புரிந்து விடாது அவர்களிடமே நாம் கேள்விகளால் போட்டு வாங்கி தகவல்கள் திரட்டுவது போனில் முடியாத காரியாமாக இருக்கிறது!
இப்படி இருக்கன்ற மூன்றாம் நான்காம் நகரங்களை சுற்றி இருக்கின்ற கிராம மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு என்று பிரத்தியோக நேரம் ஒதுக்கி நாம் தயாரித்து வைத்து இருக்கிற மொத்த நிலபிரச்சனையும் அதற்கான Things To do ,check list,பட்டியலும்,மாதிரி மனுக்களும் கொடுத்து அவர்களின் நில சிக்கல்களுக்கு உதவி செய்து அவர்களின் ஐஸ்வர்ய வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு வகையில் துணை நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாதந்தோறும் தமிழகத்தின் ஏதாவது ஒரு ரூரல் பகுதிகளில் சிறிய வாடகையில் மண்டபத்தை பிடித்து ஒரு கருத்தரங்கம் மற்றும் ஆலோசனை முகாம்களை நானும் என் தோழமைகளும் வைத்து வழங்கிவிடலாம் என்று திட்டமிட்டு முதல் கட்டமாக கள்ளகுறிச்சி நகரத்திற்கு பக்கத்தில் தென் கீரனூர் கிராமத்தில் ஒரு பயிற்சி முகாம் நடத்த முடிவு செய்து நானும் எனது அருமை நண்பரும் முத்து நயினாரும் அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை பார்த்து இருக்கறோம்!
இதேபோல் பயிற்சி முகாம் உங்கள் பகுதிகளில் நடந்த விருப்பமுள்ளவர்கள் நண்பர் முத்து நயினாரை (9750022261) தொடர்பு கொள்ளவும்! நான் ஒரு மாதம் முன்பே நேரடியாக நான் வந்து பார்த்து பயணத்தை தொடரலாம்!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்