சோளிங்கர் முகாம் மறுநாளும் தொடர்ந்த கதை!

 சோளிங்கர் முகாம் மறுநாளும் தொடர்ந்த கதை!



நிலம் சம்மந்தபட்ட சந்தேகங்கள் சிக்கல்கள் வழிகாட்டுதல் முகாம் ஒரு நூலாசிரியராக பல்வேறு களபணிகள் பார்த்த அனுபவத்தில் வழிகாட்டுதல்களை முகாம் போட்டு சொல்லி கொடுத்து வருகிறோம்.
சோளிங்கர் முகாமில் வழிகாட்டுதல் முடிக்க முடியாதவர்கள் மறுநாள் தங்கும் அறைக்கு வாருங்கள் என்று சொல்லி இருந்தேன்!அதிகாலை ஆகும்பொழுதே உங்களை காண நிறைய பேர் காத்து இருக்கிறார்கள் என்று விடுதி வரவேற்பாளர் இன்டர் காமில் சொன்னார் !
அப்படியே பல்விளக்காமல் வேலையில் உட்கார்ந்தது தான் மாலை 4 மணிவரை 8 பேர் வரை ஆலோசனை வழிகாட்டுதல் வழங்கினேன்!
அண்ணன் பாட்டாளி மக்கள் கட்சி வேலுர் மாவட்ட இளைஞரணி திரு எம் ஆர் கே இராமகிருஷ்ணன் அவர்கள் என்ன மண்டைண்ணா இது சும்மா பேப்பர பார்த்துட்டு ரெஸ்ட் கொடுங்க என்று அன்பாக பிரியாணி உணவு கொண்டு வந்து இருக்கிறேன் என்று சொன்னவுடன் அட ஒரு மனுசன் பசியால் கஷ்டபடுவதை ஒரு நபராவது புரிந்து கொள்கிறாரே என்று மகிழ்சசி
பிறகு புத்துணர்ச்சியாகி உணவருந்து ஒய்வெடுத்து மாலை கள பணிக்காக சுற்றுவட்டாரம் சுற்றி வந்து சேர்ந்தோம்
அதன்பிறகு இருந்த ஆலோசனைகளை விடிய விடிய வாசித்து குறப்பு எழுதி விட்டு படுத்தோம்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9962265834/9841665836

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்