வேலை என்றால் சோறும் போட்டு காசும் கொடுக்கிறது போல் இப்படிதான் இருக்க வேண்டும்!!

  வேலை என்றால் சோறும் போட்டு காசும் கொடுக்கிறது போல் இப்படிதான் இருக்க வேண்டும்!!

 

கலந்துரையாடல் வரும் நில சிக்கல் வாடிக்கையாளர்களிடம் முன் கூட்டியே சொல்லி விடுவேன் அண்ணே வேலைக்கான சேவைகட்டணம் கூட முன்னே பின்னே பார்த்துக்காலம் ! நல்ல சோறு நல்ல தூக்கம் எனக்கு முக்கியம் கடும் அலைச்சலில் வருவேன் சோறும் ரூமும் கொடுத்திடுங்க என்று
 
இதெல்லாம் முதலில் சொல்லாமல் இருந்த பொழுது அன்பு வாடிக்கையாளர்கள் என்னை பஸ் ஸ்டாண்டில் படுக்க வைத்து விடுவார்கள்! சுகாதாரமற்ற உணவுகளில் விட்டு விடுவார்கள் சில நேரங்களில் சோறும் கிடையாது அப்படியே விட்டு விடுவார்கள்
 
ஆனால் இப்பொழுது எல்லா வாடிக்கையாளரிடமும் கள பணிக்கு வந்தால் நமக்கு சோறுதான் முக்கியம் என்று சொல்லிவிடுவேன்! அதிலும் ஹோட்டலில் வாங்கி கொடுப்பார்கள் அதனை நான் மதிக்கிறேன்! ஆனால் வீட்டில் சமைக்கும் உணவில் ஒரு சுகாதாரம் இருக்கிறது அது எப்பொழுதாவது கிடைக்கும்
 
இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டிய ஆள் ஒருவர் இருக்கிறார் திரு .ரமணன் -நாகர் கோவில் அவர் வீட்டில் வாழை இலை விரித்து சோறு போட்டார். அதேபோல் இராமநாதபுரம் அடுத்த திருப்பாலைகுடி சேர்ந்த இரவிசந்திரன் அவர்கள் தன் வீட்டில் சுகாதரமான வயிற்றுக்கு கேடில்லாத நல்ல உணவை அளித்தார்
 
என்னுடன் வந்த இரவீந்திரன் சோறும் போட்டு பயண செலவும் கொடுத்து கம்பெனிக்கு சேவை கட்டணம் கொடுக்கிறார்கள். இதுதான் சமூக வியாபாராமா?என்றார்
 
இப்படிக்கு
 
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் -தொழில் முனைவர்
9962265834/9841665836
#paranjothipandian #author #trainer #writer #field #consulting #social_service #document #realestate #agent
 

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்