பதிவு துறையில், ‘சமாதான் திட்டம்’ அறிவிப்பு….!

ebb0653d2ef307617c5a396745fb0b2a

படித்து பயன் அடையுங்கள்! பகிர்ந்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுங்கள்!

பதிவுத்துறையில் வழிகாட்டி மதிப்பு குளறுபடியால், நிலுவை வைக்கப்பட்ட, ஐந்து லட்சம் பத்திரங்களுக்கு தீர்வு காண, ஜூன் இல் இருந்து ‘சமாதான் திட்டம்’ நடைபெற்று வருகிறது.

சொத்து பரிமாற்ற பத்திரங்களை, அந்தந்த பகுதிக்கான வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், பதிவு செய்ய வேண்டும். அதற்கேற்றபடி, முத்திரைத் தீர்வை, பதிவு கட்டணம் போன்றவை முடிவு செய்யபடுகிறது.

ஆனால், வழிகாட்டி மதிப்பை விட, குறைந்த மதிப்புக்கு, சிலர் பத்திரங்களை பதிவு செய்வதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே, பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட குறைந்த மதிப்புக்கு உரிய காரணத்தை உறுதி செய்ய, பதிவு சட்டம், 47 – ஏ மற்றும், 19 – பி ஆகிய பிரிவுகளின் படி, மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும்.
விசாரணைக்கு அனுப்பப்படும் பத்திரங்கள், மாவட்ட பதிவாளர் களவிசாரனை மேற்கொண்டு உடனடியாக கோப்புகளை நகர்த்தாமல் நீண்ட காலமாக நிலுவையில் போடப்படுவதால், சொத்து வாங்கியோருக்கு, பத்திரம் கிடைக்காமல் போகிறது.

மேலும், பதிவுத்துறைக்கும், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதற்காக, மதிப்பு வேறுபாடு காரணமாக, மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணையில் நிலுவையில் உள்ள பத்திரங்களுக்கு தீர்வு காண, பதிவுத்துறை, ‘சமாதான்’ திட்டத்தை அறிவித்துள்ளது.

# பதிவுத்துறை தலைவர்,பிறப்பித்த உத்தரவு..!

l முத்திரை தாள் பிரிவுக்கான, மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு, 2017 ஜூன், 8 நிலவரப்படி நிலுவையில் உள்ள பத்திரங்கள், சமாதான் திட்டத்துக்கு தகுதி பெறும். கூடுதல் பதிவு கட்டணம், முத்திரை தீர்வையில், மூன்றில் இரண்டு பங்கு தொகையை செலுத்தினால் போதும்.

l இத்திட்டம், ஜனவரி 3ல் துவங்கி, ஏப்ரல் 2 வரை, அமலில் இருக்கும்.

l இத்திட்டத்தில் பயன்பெற பொதுமக்கள், சம்பந்தப்பட்ட சார் – பதிவாளர்களை நேரடியாக அணுக வேண்டும்
.
சந்தேகம் இருந்தால், மாவட்ட பதிவாளர்கள், பதிவுத்துறை, டி.ஐ.ஜி.,க்கள், பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவுத்துறையில், ஜூன், 8 நிலவரப்படி, ஐந்து லட்சம் பத்திரங்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்தினால், ஐந்து லட்சம் பேர், தங்கள் பத்திரங்களை பெற முடியும்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#பதிவுதுறை #விழிப்புணர்வு #முத்திரைதாள்  #சமாதான் #திட்டம் #register #department #stamppaper  #samadhan #act #land #program #goverment

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்