அன்பு இணையதள வாசிப்பாளர்களே!!




என் ரியல் எஸ்டேட் தொழிலில் கடைநிலை ஏஜெண்டாக இன்று வரை களபணிஆற்றி வருகிறேன்.சிறிய வயதில் இருந்தே வாசிப்பு பழக்கம் இருந்து வருகிறது சில வழிகாட்டிகள்  உங்களிடம் நிறைய செய்திகள் இருக்கிறது. .அதனால் இணையத்தில் தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கபடுத்தியதன் விளைவாக நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து எழுத ஆரம்பித்து பதிவிட ஆரம்பித்தேன். அனைவரிடமும் நல்ல வரவேற்பும் ஊக்கமும் கிடைக்க நானும் தொடர்ந்து  எழுதுகறேன்.

ஒரு கட்டுரை எழுதுவது என்பது அதற்கு நேரம் கொடுப்பது சிந்தனை ஓட்டத்தை செம்மைபடுத்தி மனதால் தொகுப்பது பிறகு தொகுத்ததை எழுதுவது எழுதுவதை மேம்படுத்துவது மேம்படுத்திவதை இறுதி படுத்துவது தகவல்களை உறுதி செய்வது பிறகுதான் ஆன்லைனில் வெயிடுவது.மேலும் என் எழுத்துக்களை இன்றைய தலைமுறையினருக்கு புரிவது போல எழுதுவது பேசுவது என செய்கிறேன். அதனை இணையதள சமூக ஊடக நண்பர்கள் எடுத்து அவர்கள் பக்கங்களில் பதிவிடுகன்றனர்.

பதிவிடுவது பலர் அதனை தெரிந்து கொள்வது மிக பயனுள்ள விஷயம் ஆனால் என் உழைப்புக்கு கொஞ்சம் ஊக்கமும் மரியாதையும் கொடுத்து நன்றி பரஞ்சோதி பாண்டியன் என்று சொன்னால் மிக மகிழ்ச்சி அடைவேன்.ஆனால் வழக்கறிஞர் ஆவண எழுத்தர் ரியல்எஸ்டேட் தொழில்முனைவர் என்ற டைட்டிலில் இருப்பவர்கள் இதனை அப்படியே எடுத்து அவர்கள் பெயரை எழுதியவர் என்று குறிப்பிட்டு போடும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஏதோ ஒன்னு இரண்டு என்றாலும் பரவாயில்லை கிட்டதட்ட 50க்கும் மேற்பட்ட பதிவுகள் இப்படி இருக்கிறது.என்னால் அனைத்தையும் எடுத்து இந்த கட்டுரையில் சொல்லவும் நேரம் இல்லை  7 பதிவுகள் மட்டும் எடுத்தேன் அதனை இந்த லிங்கில் வைத்துள்ளேன்.
 ( https://photos.app.goo.gl/mDr98TVCMbDk99Nu9 )

Copy and Paste செய்யும் நண்பரகளே..!!
அவர்கள் பெயரை போடவும் .எனக்கு விருப்பம் இல்லை.இனி எழுத்துக்களை copy and paste செய்யும் அன்பு  நண்பர்கள் இதுபோல் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள். என் எழுத்துகளை எடுத்து போடுங்கள் ஆனால் நன்றி பரஞ்சோதிபாண்டியன் என்று சொன்னால் போதுமானது!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர்
www.paranjothipandian.in
9841665836


#ரியல்எஸ்டேட் #இனையதளம் #வாசிப்பாளர்கள் #writter #copy #paste #artical #photo #paranjothipandian #realestate #enturpurner


Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்