கூட்டுறவு மூலம் வீட்டுமனை புரட்சியில் கரம் கோர்ப்பீர்!!




நடுத்தர அடிதட்டு மக்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் ரியல் எஸ்டேட் விலைவாசியில் ஒரு வீட்டு தேவைக்காக உங்களுடைய பொருளாதார வாழக்கையை இழக்க வேண்டிய நிலைதான் எதிர்காலத்தில் வரும். பல பன்னாட்டு நிறுவனங்கள் ரியல் எஸ்டேட்டில் வீடுகள் சந்தையில் இறங்கி விட்டன. அவர்களுக்கு வங்கிகளும் ஏன் அரசே கூட உதவிகள் செய்யும் .அப்படி பன்னாட்டு ரியல் எஸ்டேட் வியாபரிகள் விரிக்கிற மாயவலையில் சிக்கி உங்கள் சேமிப்பை இழக்காமல் இருக்கவும் (பெங்களூரு சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த போலி விலைஉயர்வால் பலர் இன்னும் கடன் கட்டி கொண்டு இருக்கிறார்கள்) விலை உயரும் என்ற நீர்குமிழிகளில் பல முதலீடுகள் உங்கள் மீது திணிக்கப்பட்டு விற்கப்பட்டு இருக்கின்றன. இவற்றை எல்லாம் சரி செய்ய முடியாது. ஆனால் விவரம் தெரிந்தவர்கள் இதில் இருந்து எதிர்காலத்தில் தப்பித்து கொள்ளலாம் என்னாலும் என் அனுபவத்தினாலும் இதற்கு வழிகாட்டலாம்.அதற்கான life boat தான் நாம் உருவாக்க போகும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம். மேலும் தற்சார்புடைய நமக்கு நாமே கரம் கோர்த்து கூட்டுறவு முறையில் வீட்டு மனைகளை உருவாக்கி கொள்ளவும் வீட்டு மனை விலை உயர்வில் இருந்து உங்களை காத்து கொள்ளவும் பல மாநில கூட்டுறவு சங்கம் தேவை!!

கூட்டுறவு சங்கம் என்பது அரசும் தனியாரும் இணைந்த உறவு ஆகும். அரசிடம் நிறைய Resources இருக்கும் .கடுமையாகவும் இலட்சியத்துடன் உழைக்க தலைமை பண்பு உள்ள டீம் இருக்காது. கூரியர் நிறுவனங்களுக்கு சந்தை ஏற்படுத்தி கொடுத்து அரசு அஞ்சலக நிறுவனத்தை வீணடிப்பது போல அரசு நிறுவனஊழியர்கள் சொங்கியாக இருப்பார்கள். இந்த குறையை போக்க அரசின் resources வும் பொது பணத்தின் காவலையும் பாதுகாப்பும் தனியாரின் உழைப்பும் அர்பணிப்பும் தலைமை பண்பையும் இனைந்து ஒரு நிறுவனம் வேன்டுமென்றால் கூட்டுறவு நிறுவனமே சிறப்பானது.

எனவே நமக்கு நாமே மத்திய மாநில அரசின் அங்கீகாரத்துடன் பல மாநில கூட்டுறவு சங்கம் உருவாக்கி கொள்வது மட்டும் அல்லாமல் வீடு கட்ட தேவையான அரசின் மானியங்கள், சலுகைகள் அரசின் திட்டங்கள் அனைத்தும் பயன்படுத்திக்கொள்ள முடியும். நீங்கள் போடுகின்ற முதலீடுகளை  கண்காணிக்க காவல்அரணாக காக்க அரசும் துணை நிற்கும் மேலும் என்னை போல ரியல் எஸ்டேட்டில் ஊறி பல அடிகள் வாங்கி நொந்து புடம்போடபட்டு பக்குவபட்ட அனுபவமும் உற்சாகமும் தலைமை பண்புள்ள நானும் என்னுடைய டீமும் இணைந்தால் வீட்டுவசதி கூட்டுறவு சங்கம் வெற்றிகரமாக இயங்கும்.

அதற்காக நிலம் உங்கள் எதிர்காலம் பன்மாநில கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் ஆரம்பிக்கவிருக்கிறோம். அதற்கு 100 நபர்கள் தமிழ்நாட்டிலும் 100 நபர்கள் பாண்டிச்சேரி மாநிலத்திலும் founder member களாக தேவைபடுகிறது. எத்தனை பேர் வேண்டுமானாலும்  உறுப்பினர்கள் ஆகலாம் அவர்கள் எல்லாம் சொசைட்டியின் பிராஜக்ட்களை வாங்கி கொள்ளலாம்.  ஆனால் founder member களுக்குதான் சொசைட்டியின் இலாபத்தில் dividends எதிர்காலத்தில் கிடைக்கும். மேலும் உறுப்பினர்களை தெரிந்தவர் தெரியாதவர் என்று பார்த்து பார்த்து சேர்ப்பது இல்லை. முதல் 100 நபர்கள் சேர்ந்துவிட்டால் அதன்பிறகு founder member  உறுப்பினர் சேர்க்கை நிறுத்தபட்டுவிடும். மேற்படி உறுப்பினர்களின் விவரங்களையும் தீர்மானங்களை போட்டு எடுத்துகொண்டு டெல்லிக்கு சென்று பதிவு செய்தல் வேண்டும். பதிந்துவிட்ட பிறகு எவ்வளவு உறுப்பினர்கள் வேண்டுமானாலும் சேரலாம்.

சரி Founder Member ஆவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்:
1) இப்பொழுது சேர்க்கபடும் உறுப்பினர் தேர்வு கூட்டுறவு சங்கம் ஆரம்பிப்பதற்காக என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
2) பல மாநில கூட்டுறவு தான் மிக தரமான வலுவான அரசின் அதிகபட்ச கண்காணிப்புள்ள கூட்டுறவு அமைப்பு.
3) தமிழ்நாடு மாநிலத்தில் founder member 100 பேரும் பாண்டிச்சேரி மாநிலத்தில் வேண்டும்.
4) உறுப்பினர் ஆவதற்கு மனிதர்களை பிரிக்கும் சைக் எண்ணங்களான சாதி மதங்கள் தடையில்லை.
5) தேவையான உறுப்பினர்கள் சேரும் வரை இந்த உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் நடைபெறும்.
6) உறுப்பினர் ஆக விரும்புபவர்கள் தங்கள் பெயர் முகவரி ஆதார் எண் விவரங்கள் (https://forms.gle/B8DS9FSUnLRZaU7X7 ) லிங்கில் உள்ள google  படிவத்தில் நிரப்ப வேண்டும்.
7) உறுப்பினர் கட்டணமாக ரூபாய் 100/-ம்  பங்கு தொகையாக ரூபாய் 1000/- தற்சமயம் என்னுடைய வங்கி கணக்கில் போட வேண்டும்  (வங்கி கணக்கு விவரம்)
ACCOUNT NAME     - S.M.PARANJOTHIPANDIAN
ACCOUNT NUMBER -  261100007121980
BRANCH                     - KUTHUKKALVALASAI
BANK                         - TMB
IFSC CODE               - TMBL0000261

( Googlepay - 9962265834 )



8) தேவையான உறுப்பினர் சேர்க்கை முடிந்து கூட்டுறவு சங்கம் டெல்லிக்கு சென்று பதிவு செய்ய குறைந்தது ஆறுமாதங்களாவது ஆகும் .அதுவரை உறுப்பினர்களுக்கு மட்டும் face book இல் secret group இல் அனைத்து நடைமுறைகளும் வெளிப்படையாக தெரிவிக்கப்படும்.
9) பதிவு செய்யப்படும் காலத்திற்குள் கூட்டுறவில் இருந்து விலக விரும்புவர்களுக்கு பங்கு தொகை ரூபாய் 1000/-  திருப்பிதரப்படும்.
10) மேற்படி அனைவரின் பங்கு தொகையும் கூட்டுறவு பதிவு செய்து விட்டு ஆரம்பிக்கபடும் வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்படும்.
11) தேவைபடும் உறுப்பினர் சேர்க்கை முடிந்தவுடன் மீட்டிங் சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் நடைபெற்று தீர்மானம் நடைபெறும்
12) கூட்டுறவு ஆரம்பிப்பதற்கான நிர்வாக செலவு பிரச்சாரசெலவு மீட்டிங் செலவு டெல்லிக்கு போய்வரும் செலவு என்னுடையது பதிவு வேலை முடிந்தவுடன் கணக்கு ஒப்படைத்து பிறகு அனைவரும் பிரித்து கொள்ள வேண்டியது.
13) பல்மாநில கூட்டுறவு சம்மந்தமாக நிபுணர்கள் அனுபவம் உள்ளவர்கள் டெல்லி விவசாய துறை (கிருஷி பவனில்) தொடர்பு உடையவர்கள் அறிவும் ஆலோசனையும் வரவேற்கபடுகிறது.
14) இது சம்மந்தமாக என்னை தொடர்பு கொள்ள என்னுடைய தனி செயலர்: மீனாட்சி இசக்கிராஜா  9962265834 தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு,
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்,
எழுத்தாளர்-ரியல்எஸ்டேட்தொழில் முனைவர்

#housing-socity #realestate #paranjothipandian #founder #member #கூட்டுறவு #ரியல்எஸ்டேட் #வீட்டுமனை #வீட்டுவசதி #பாண்டிச்சேரி  #சொசைட்டி #நிறுவனம் #பாண்டிச்சேரி #முதலீடுகள் #உறுப்பினர்


Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்