நல்ல டீம் அமைவதெல்லாம் நல்லோர் பெற்ற வரம்!!!

நல்ல டீம் அமைவதெல்லாம்
நல்லோர் பெற்ற வரம்!!!
சைட்விசிட் என்று செலவில் buffer வைக்கும், கலெக்‌ஷனை ஒழுங்காக கட்டாமல் தன் கமிசனை தாண்டி எடுத்து சாப்பிடும், தான் செய்த மார்கெட்டிங் செலவுகளை கம்பெனிக்காக தான் செய்தேன் என்று தவறாமல் கணக்கு போட்டு வாங்கும் தன்மை, ஆனால் வந்து விழுந்த லீட்ஸ்கள் கம்பெனிக்கு தர மாட்டேன்  அது என் சொத்து என்று விவாதம்,
எந்த புரோமோஷன் ஸ்டால் போட்டாலும் எந்த பேப்பர் விளம்பரம் கோடுத்தாலும் அதன் விலை தெரியாத அதற்கு ஏற்ற உழைப்பு கொடுக்காத பிஸினஸுக்கு மெனகெடாத எந்தவித உடல்வேலைகள் செய்யாத இஸ்திரி கலையாமல் வந்து போகும் மார்கெட்டிங் டீம் .எதனையும் கற்று கொள்ளாமல் கொடுக்கின்ற நேரம் வெறும் டேபிள் தேய்ச்சிட்டு என் முன்னால் மட்டும் வேலை கடுமையாக செய்கின்ற பாவனை, சம்பளம் போனஸ் கடன் உதவி நல்லது கெட்டதுகளில் உறுதுணையாக இருந்தால் அலுவலக வேலை ஒழுங்காக செய்வார்கள் என்றால் என்று ஒபி வேலைகள் பாரத்துகிட்டு இருந்த அட்மின் டீம்!!

ஆனால் நானோ தூக்கம் இழந்து ஆகாரம் ஸகிப் ஆகி கோவை சென்னை நெல்லை என்று அடிக்கடி பயணம் மார்கெட்டிங் டீம் தள்ளி போடுகின்ற வீண்டிக்கிற இடங்களில் எல்லாம் நான் இறங்கி வேலை செய்வது நிர்வாக வேலையில் தினமும் நான் PA வாக இருந்து இருந்து இதை செய்யனும் மேம் அதை செய்யனும் மேம் என்று அட்மின்களுக்கு வேலைசெய்துவிட்டு ,
தற்குறிகளுக்கு எல்லாம் land tenure சொல்லி கொடுத்து மண்டையில் ஏறாமலேயே லூசாகவே சுற்றிகொண்டு இருப்பதால் அந்த வேலைகளும் நிலுவை ஆனால் அதனை இழுத்து போட்டு நான் செய்வது தேனி விழுப்புரம் மதுரை சின்ன சேலம் என்று பஸ் ஸ்டாண்டுகளில் படுத்து பப்ளிக் பாத்ரூமில் refresh பணத்தை மிச்சம் செய்து கூட இருப்பவர்களுக்கு கமிசன் போடலாம் சம்பளம் போடலாம் என்று நினைத்து உழைத்து இருக்கிறேன்.

ஆனால் வியாபர புற சூழல் மந்தமானதும் இழுத்து போட்டு எடுத்து போட்டு செய்யாமல் முதலிலேயே இடத்தை காலி செய்யற ஆளுங்க! நாம் ஏன் மெனக்கெடனும் என்ற நச்சு எண்ணம் உள்ள நபர்கள்! இடத்தை காலி செய்யாம இருந்துகிட்டே வேலை செய்யாத ஆளுங்க என்று உழைக்காமலே பிரச்சினைகள் தீர்க்க கூக்குரல் இடும் மேதைகளுடன் பயணப்பட்டு கொண்டு இருக்கிறேன்!!!

பேசாமல் நாடோடிகள் பட சசிகுமார் போல் விரட்டி விரட்டி கொல்லனும்ன்னு தோனுது இப்பொ தொழில் முனைவோர் பயணம் ஆரம்பிக்கும் நண்பர்களே!!
மனிதர்கள் வேலை செய்ய மாட்டார்கள்
அமைப்பு (System) தான் வேலைசெய்யும்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொடர் தொழில் முனைவர்
9962265834

சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்கலுக்கு தீர்வுக்காண தொடர்புகொள்ளுங்கள:9841665836

குறிப்பு:அன்பு வாசகரகளே!!நான் எழுதியுள்ள நிலம் உங்கள் எதிரகாலம் புத்தகத்தை வாங்கி என்னையும் என் டீமையும் ஊக்கபடுத்துமாறு வேண்டுகிறேன்.அதன்மூலம் இன்னும் பலரின் சொத்துகளை காப்பாற்றியும் வளரத்தும் கொடுக்க என்னாலும் என் குழுவினாலும் தொடர்ந்துசெயல்பட முடியும்-
புத்தகம வேண்டுவோர்:8344489222

#team #sitevisit #office #buffer #promotion #land #marketting #socialmedia

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்