பெருஞ்சிறப்பான திண்டுகல் நகரும்! வைரகல் மனிதன் ஹைதர் அலியும்

  பெருஞ்சிறப்பான திண்டுகல் நகரும்! வைரகல் மனதான் ஹைதர் அலியும்!!



அவுரங்க சீப் காலத்தில் அவரின் ஆட்சியின் கீழ் ஒரு மாகண தலைவர்களாக இருந்த ஆற்காடு நவாபு, ஹைதராபாத் நிஜாம் எல்லாம் 1707 களில் அவுரங்க சீப் மறைவிற்கு பிறகு தனி அரசுகளாக அறிவித்து கொண்டன. பெரிய கட்டமைப்போடு ஆட்சி கட்டிலில் இருந்த நவாபு நிஜாம் எல்லாம் வெள்ளையர்களோடு இணக்கமாகவே இருந்தனர். அதனால் இன்று வரை இளவரசர் பட்டத்தோடு அவர்களின் வாரிசுகள் போக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்

ஆனால் ஹைதர் அலி அவர்கள் நவாபு நிஜாம் போல மன்னர்குடி அல்ல! அவர் மக்களில் இருந்து வந்தவர். அவர்கள் தந்தையார் பாமினி சுல்தான்கள் படையில் போர் வீரர். இவர் மைசூர் கன்னட உடையார் அரசில் ஒரு காலாட் படை வீரா் அப்படியே பல போர்களில் பங்கெடுத்து படி படியாய் பெரிய தளபதியாகி பிறகு மைசூர் இராஜ்ஜியத்தையே தன் அரசாட்சியின் கீழ் கொண்டு வந்துவிட்டார்.

1750 இல் இருந்து 1800 வரை இந்தியா முழுதும் போர் போர் போர் என்று ஆளுவதற்காக அடித்து மாண்டு கொண்டார்கள். சினிமாவில் எப்படி கடைசி சண்டை காட்சி பிறகு சுபம் போடுவார்களோ. அதே போல இந்த கால கட்டங்களில் பிரெஞ்சு, பிரிட்டிஷ், மராத்தி, வ நவாபுகள், பாளையகாரர்கள், என்று ஒருவருக்கு ஒருவர் அடித்து கொண்டார்கள்.

அந்த காலகட்டத்தில் இருந்ததாலோ ஹைதர் அலி போர் சண்டை என்று வாழ் நாள் முழுதும் இருந்து இருக்கிறார். அப்படியே அப்பா ஹைதர் அலியை பார்த்து வளர்ந்த அவரது மகன் திப்புவும் போர் போர் என்றே இருந்து இருக்கிறார்கள்.

மராத்தியர்களில் சிவாஜி என்ற ஒரு ஹீரோவை தவிர மீதி ஆண்ட பேஷவாக்கள் எல்லாம் பக்கா நரிகளாகவே இருந்து இருக்கிறார்கள். அப்படி பட்ட நரிகளுக்கு இடையில் ஹைதர் மாட்டிகொண்டு விட்டார். பேசாமல் ஜரிகை குல்லா நவாபுகள் போல் வெள்ளையனுக்கு சொம்பு அடித்து இருந்தால் ஆவது அவரும் திப்புவும் அவரின் வாரிசுகளும் இளவரசர் பட்டத்தோடு இன்று வரை பெங்களூர் மைசூரில் இராஜ வாழ்க்கை வாழ்ந்து இருக்கலாம்.

சுக வாழ்வா வீர சாவா என்று கேட்டால் வீர சாவு என்ற வகையில் வருகின்றவர்கள் தான் ஹைதர் அலி! அன்னார் தமிழகத்தில் போர் புரிந்தது, வரி வசூல் செய்தது, ஆண்டது என்று தன் அடையாளத்தை திண்டுகல் நகரில் பதித்து விட்டு சென்று இருக்கிறார். அன்னாரின் திண்டுகல் கோட்டை சிறை மேலே இருக்கும் படம்

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்

9841665836/9962265834

#paranjothipandian #thippusulthan #hitharali #sivaji #field #dindukal #navb #prince #fort #author #trainer #writer #consulting

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்