Posts

Showing posts from July, 2021

பெருந்துறையில் சீனியர் ஆவண எழுத்தர் முருக பூபதி அவர்களின் ஆதரவுக்கு உளமாற நன்றிகள்!

Image
   பெருந்துறையில் சீனியர் ஆவண எழுத்தர் முருக பூபதி அவர்களின் ஆதரவுக்கு உளமாற நன்றிகள்! தொழில் முறை வழக்கறிஞர்கள்! ஆவண எழுத்தர்கள் பெரும்பாலும் சக தொழில் சகாக்களை எளிதில் அவகரிப்பதில்லை! ஆனால் அண்ணன் முருக பூபதி அவர்கள் பல ஆண்டுகளாக பெருந்துறை சார்பதிவகத்தில் ஆவண எழுத்தராக பத்திரம் பதிவுக்கு மக்களுக்கு உதவி புரிகின்ற வேலைகளை செய்து வருகிறார்! பெரிய அலுவலகம் நிறைய ஊழியர்கள் என்று பத்திர பதிவில் பிஸியாக இருப்பவர்! சில யுடியூப் வீடியோக்களை பார்த்து விட்டு என்னை மனமார அங்கீகரித்து 15 செட் புத்தகங்களை வாங்கி என்னை ஊக்கபடுத்தி இருக்கிறார்! அதனை அவரின் அலுவலகத்தில் வைத்து அவரின் முக்கிய வாடிக்கையாளருக்கு கொடுக்க விரும்பதாக சொன்னார்!முருக பூபதி போன்ற பக்குவப்பட்ட சீனியர் தொழில் முனைவர்களின் பாராட்டுகள் அதிக உழைப்பை கொடுக்க தூண்டுதலாக இருக்கிறது! சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9962265834 #document_writer #author #trainer #consulting #auditor #copy_of_the_document #nilam_ungal_ethirkalam

நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளை இனி மாவட்டந்தோறும் பயணம்!

Image
  நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளை இனி மாவட்டந்தோறும் பயணம்! நிறைய குக்கிராமங்களில் இருந்து நிலத்தை காணோம்!பட்டாவில் பெயரை காணோம்! உறவாடி மோசடி பத்திரம் போட்டுடாங்க! சமய நிறுவனங்கள் நோட்டீஸ் கொடுத்துட்டாங்க! காலம் காலமாக இருக்கிறோம் ஆனால் நிலத்தை அனாதீனம் ஆக்கிட்டாங்க என்றெல்லாம் மக்கள் போனிலும் முகநூல் வாட்ஸ்அப் டெலகிராம் கதைத்தலிலும் சொல்லும் பொழுது நேரடியாக கண்ணுக்கு கண் முகத்திற்கு முகம் பேசி பிரச்சினைகளின் தீர்வுகளை வழிகாட்டுதல்களை செய்வது போல வராது! ஆலோசனை கட்டணம் அறிவித்தும் எனக்கு நிறைய அழைப்பு வருகிறது. இத்தனைக்கும் நான் முழுநேர ஆலோசகர் அல்ல! வீட்டுமனை வியாபரம், தொழில்முனைவோருக்கான சாபங்களுக்கான பரிகார வேலைகள்! அடுத்த தலைமுறைக்கு தகவல்களை கொண்டு சேர்க்க வேண்டிய எழுத்தாளர் கடமை!வியாபார உறவுகளை நட்புகளை டீம்களை அன்பு பேணுதல்! இவ்வளவு வேலைகளுக்கு மத்தியிலும் இரவு 2மணி வரை ஆவது தினமும் அன்றைய வேலைகள் முடிய ஆகிறது! அதனால் கிராம பகுதிகளுக்கு பிரத்தியோக நேரம் ஒதுக்க முடியாமல் தள்ளி போகிறது! வெளிநாடுவாழ் மக்கள்! வியாபார பெருமக்கள் தனவந்தார்கள் நிறுவனங்கள்! அரசு நிறுவனங்கள் என அ...

பெருந்துறையில் இனாம்நில சிக்கல் சம்மந்தமாக கிராம முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை!!!

Image
   பெருந்துறையில் இனாம்நில சிக்கல் சம்மந்தமாக கிராம முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை!!! பெருந்துறை அருகில் ஒரு கிராமத்தில் பல பேருக்கு இனாம் நில சிக்கல் பழைய நில நிர்வாக வரலாறு தெரியாமல் பிரச்சனை அடிநாதம் தெரியாமல் இதை சாப்பிட்டால் ஜுரம் நிற்கும் அதை சாப்பிட்டால் ஜுரம் நிற்கும் என்று ஆளாளுக்கு ஒன்று சொல்ல அதனை எல்லாம் செய்து பார்ப்பவர்கள் போல் எல்லா உபாயங்களையும் செய்து கொண்டு இருந்தனர். நண்பர்கள் மூலம் கிராமத்தின் முக்கியஸதர்கள் அனைவரும் என்னை பெருந்துறையில் ஒரு விடுதியில் என்னை சந்தித்தனர்! பலவிதமான சந்தேகங்கள் பலவிதமான கேள்விகள் என்று ஒவ்வொருவரும் கேட்டனர்! அனைத்து கேள்விகளுக்கும் நிதானமாக புரியும் வகையில் பதிலளித்து எப்படி போகனும் என்று ரூட் போட்டு கொடுத்தேன். அனைவரின் கண்களிலும் மன நிறைவு! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #land #issue #problem #field #asset #sales #doubt #realestate #service #author #trainer #writer #consulting

திருப்பூர்-அனுப்பர் பாளையத்தில் நில சிக்கல் களபணி!!

Image
   திருப்பூர்-அனுப்பர் பாளையத்தில் நில சிக்கல் களபணி!! திருப்பூர் -அனுப்பர் பாளையம் அருகில் நில சிக்கல் சம்மந்தமாக இரண்டு மணி நேரம் சிக்கலையும் அதற்கான தீர்வையும் மக்களின் மொழியில் கற்பிதம் செய்துவிட்டு ஒருநாள் தங்கி அவர்களின் அனைத்து ஆவணங்களையும் வாசித்து அதனை வரிசைபடுத்தி சொத்து வந்த வழி வரலாறை எழுதி கொடுத்து அதன் பிறகு என்னென்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் செலவு குறைவாக வேலை நிறைவாக இருக்க என்னென்ன உத்தியை கையாள வேண்டும் என்று எழுதி கொடுத்துவிட்டு கிளம்பி வந்தேன் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #land #Problme #issue #field #author #trainer #wrtier #consulting #thiruppur #anuppar #paalayam

 சிங்காநல்லூரில் தம்பதி தொழில்முனைவர்கள்!

Image
   சிங்காநல்லூரில் தம்பதி தொழில்முனைவர்கள்! திரு&திருமதி.வாஞ்சிமுத்து இருவரும் கோவை-சிங்காநல்லூரில் ஆன்லைன் தொழில்முனைவர்கள்!நமது யூடூப் சேனலை பார்த்து விட்டு நிலம் சம்மந்தபட்ட தகவல்களால் கவரபட்டு நிலம் உங்கள் எதிர்காலம் கிண்டில் எடிசன் வாங்கி படித்து இருக்கிறார். தன் மனைவியின் பிறந்தநாளுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் பாகம 1 மற்றும் 2 வாங்கி காதல் பரிசளித்து இருக்கிறார். ஆவண எழுத்தர் 3 நாள் ஆன்லைன் வகுப்பிலும் சேர்ந்து பயிற்சி எடுத்தார். ஆவண எழுதவதில் தாக்கல் செய்வதில் இருந்த சிறுசிறு மனதடைகளை என்னுடன் பேசும் பொழுது தகர்த்து விட்டார். தற்பொழுது முதன் முதலில் ஒரு வாடிக்கையாளருக்காக பத்திரம் பதிவு வேலைகளை செய்து முடித்து இருக்கிறார். என்னிடம் எப்பொழுது போனில் பேசினாலும் என்னை உயரே வைத்தே பேசுவார் !அதனால் அவரை நேரில் சந்திந்து நான் கால் தரையில் இருக்கும் உங்கள் சக நட்பு தான் என்னை சாதாரண நட்பாகவே பாருங்கள் என்று அவரின் அலுவலகம் சென்று சந்தித்து இல்லறமும் தொழிலறமும் சிறக்க வாழ்த்திவிட்டு வந்தேன் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் 9841665836/996226583...