ஜனாதிபதி மாளிகை – வரலாற்றுச் சுவடுகள் இன்றைய ஜனாதிபதி மாளிகை,


 ஜனாதிபதி மாளிகை – வரலாற்றுச் சுவடுகள் இன்றைய ஜனாதிபதி மாளிகை, முதலில் வைஸ்ராய் ஹவுஸ் என அழைக்கப்பட்டது. சுமார் 330 ஏக்கரில் பரந்து விரிந்த இம்மாளிகையில் 340 அறைகள் அமைந்துள்ளன. 1911-ஆம் ஆண்டு டெல்லி துர்பாரில், மன்னர் ஜார்ஜ் V இந்தியாவின் தலைநகரை கல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, புதிய தலைநகருக்கான மிகப்பெரிய அரச மாளிகை கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த மாளிகையை பிரிட்டிஷ் ஆற்கிடெக்ட் சர் எட்வின் லூட்டியன்ஸ் வடிவமைத்தார். 1912-இல் தொடங்கிய கட்டுமானம், சுமார் 17 ஆண்டுகள் எடுத்து 1929-இல் நிறைவுபெற்றது. 1931-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டிற்கு வந்தது. அருங்காட்சியகத்தில் எட்வின் லூட்டியன்ஸ் அவர்களின் படங்களும், அசல் ப்ளூ பிரிண்ட் வரைபாடுகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளத்தை நேரில் கண்டு மகிழ்ந்தேன்

Comments