இன்றைய சாமானியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியஇனாம் சம்பந்தப்பட்ட ஆரம்ப கால சட்டங்கள்!
- Get link
- X
- Other Apps

1) இன்றைக்கு இனாம் நில சிக்கலில் சிக்கியுள்ள சாமானியர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் இனாம் நிலம் தொடர்பாக பேசக்கூடிய சட்டங்களை ஓரளவாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்.அப்படி
முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சட்டம்: The Permanent Settlement Regulation (XXV of 1802) இதுவே, வெள்ளையர்கள் இந்தியாவில் நில நிர்வாகத்தை தங்கள் கையில் எடுத்த உடனே கொண்டு வந்த முக்கியமான சட்டமாகும்.
2)இந்த சட்டம் தான்:ஜமீன்தார்களுக்கு (Zamindars)நில வருவாயை (Land Revenue) நிரந்தரமாக (Permanent) உறுதி செய்து,
அதனை வெள்ளையர் அரசுக்கு செலுத்த வேண்டும் என்று நிர்ணயித்தது.மேலும், இந்த சட்டத்தின் மூலம் தான் ஜமீன்தார்களுக்கு நில நிர்வாகப் பொறுப்பு (Proprietorship) வழங்கப்பட்டது.அவர்கள் Revenue Collecting Agents (அரசின் வரி வசூலாளர்கள்) அல்ல,Landholders / Proprietors (நில உரிமையாளர்கள்) என அங்கீகரிக்கப்பட்டார்கள்.
3)இந்த சட்டத்தின் கீழ் ஜமீன்தார்களுக்கு விதிக்கப்பட்ட முக்கிய கடமைகள்:
ஜமீன்தார்கள் வெள்ளையர் அரசுக்கு நிரந்தர வரியை செலுத்த வேண்டும். தொடர்ந்து வரி செலுத்தத் தவறினால் (Revenue Default) அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.
விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும்.
சாகுபடியை (Cultivation) ஊக்குவிக்க வேண்டும்.வரி முறையாக செலுத்தப்படவில்லை என்றால்,
வெள்ளையர் அரசுக்கு அந்த ஜமீன் எஸ்டேட்டை ஏலத்திற்கு (Public Auction) கொண்டு வரும் அதிகாரம் வழங்கப்பட்டது.
அந்த ஏலத்தில் ஜமீனை வாங்குபவர்கள்:
புதிய ஜமீன்தார்களாக மாறுவார்கள்.
அவர்கள், பழைய ஜமீன்தார்களுக்கிருந்த கடமைகள் அனைத்தையும் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும்.இந்த நடைமுறைகள் அனைத்தையும் இந்த Permanent Settlement Regulation சட்டமே தெளிவாக கூறுகிறது.
4)இந்த சட்டத்தில், ஜமீன்தார்களுக்கு நில உரிமை (Proprietorship) வழங்கியபோது,
நில வருவாயை நிரந்தரமாக (Permanent Assessment) வசூல் செய்ய வேண்டும் என்று அவர்கள் மீது பொறுப்புகள் விதிக்கப்பட்டன.
அதே நேரத்தில், சில முக்கிய வருவாய் ஆதாரங்களை வெள்ளையர் அரசு தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டது.அவை அனைத்தும் இந்த சட்டத்தின் பிரிவு 4 (Section 4) இல் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
5)Section 4 – The Permanent Settlement Regulation (XXV of 1802):
> The Government, having reserved to itself the entire exercise of its discretion in continuing or abolishing, temporarily or permanently, the articles of revenue included, according to the custom and practice of the country, under the several heads of salt and saltpetre; of the sayar, or duties by sea or land; of the abkari, or tax on the sale of spirituous liquors and intoxicating drugs; of the excise on articles of consumption; of all taxes, personal and professional, as well as those derived from markets, fairs, and bazaars; of lakhiraj lands, or lands exempt from the payment of public revenue; and of all other lands paying only favourable quit-rents, the permanent assessment of the land tax shall be made exclusively of the said articles now recited.
6) இதன் பொருள்:
The Permanent Settlement Regulation என்பது நில வரியை நிரந்தரமாக நிர்ணயிப்பதற்காகவும் ஜமீன்களை நில உரிமையாளர்களாக மாற்றுவதற்காகவும் கொண்டுவரப்பட்ட சட்டம் ஆனால், Section 4 இல் குறிப்பிடப்பட்ட வருவாய் வகைகள்:
இந்த நிரந்தர நில வரி செட்டில்மெண்ட்டிற்கு உட்படாது என்று ஒதுக்கப்பட்டுள்ளன.
அவை:
உப்பு (Salt)
உப்புநைட்ரே (Saltpetre)
சையர் (Sayar) – கடல் வழி அல்லது நில வழி சுங்கத் தீர்வைகள்
அப்காரி (Abkari) – மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை மீதான வரி
நுகர்வுப் பொருட்களுக்கான Excise வரிகள்
தனிநபர் மற்றும் தொழில் சார்ந்த வரிகள் (Personal & Professional Taxes)
சந்தைகள், திருவிழாக்கள் மற்றும் பஜார்கள் மூலம் பெறப்படும் வரிகள்
லகீராஜ் நிலங்கள் (Lakhiraj Lands) – அரசு வரி செலுத்துவதிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்ட நிலங்கள்
மிகவும் குறைந்த சலுகை குவிட் ரெண்ட் (Favourable Quit-Rents) மட்டும் செலுத்தும் நிலங்கள்இவையனைத்தையும்:
தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ
தொடரவும் மாற்றவும்ரத்து செய்யவும்
முழுமையான அதிகாரம் வெள்ளை அரசுக்கே உரியது என்று அரசு தன் உரிமையை தக்க வைத்துக் கொண்டது.
7) இதில் வரும் வரிகள்:
> “of lakhiraj lands, or lands exempt from the payment of public revenue; and of all other lands paying only favourable quit-rents…”
இங்கு இனாம் நிலங்களை பற்றியே பேசப்படுகிறது.அந்த நிலங்களுக்கு:
நிரந்தர வரி மதிப்பீடு (Permanent Assessment) செய்யப்படவில்லை.வரியை உயர்த்தலாம்
குறைக்கலாம் நிறுத்தலாம்மீண்டும் விதிக்கலாம் இவற்றிற்கு எல்லாம் Permanent Settlement சட்டம் தடையாக இருக்காது என்று இந்த சட்டம் தெளிவாக கூறுகிறது.
இந்த சட்டத்தில் வரும்:Lakhiraj Lands
Quit-Rent போன்ற சட்ட வார்த்தைகள் அனைத்தும் பெரும்பாலும் இனாம் நிலங்களையே குறிக்கின்றன.அதனால், 1802 ஆம் ஆண்டு, வெள்ளையர்கள் ஜமீன்தார்களை அங்கீகரித்த போதும்,
அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த கிராமங்களில் உள்ள இனாம் நிலங்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை
வெள்ளையர் அரசு தன் கையிலேயே வைத்திருந்தது என்பதைஇந்த சட்டத்தின் Section 4 மூலம் நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
இதற்கு அடுத்த வரிசையில், இன்னும் பல முக்கியமான சட்டங்கள் உள்ளன.
அவற்றை வரும் தொடர்களில் விரிவாக காண்போம்.
சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம்” – மக்கள் நல அறக்கட்டளை
098416 65836

See less
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment