சிறு இனாம்களும்(Minor Inams) புழங்கும் உரிமையும் (Occupancy Rights)
சிறு இனாம்களும்(Minor Inams) புழங்கும் உரிமையும் (Occupancy Rights)
1)ஒரு முழு கிராமமோ அல்லது பல கிராமங்கள் சேர்ந்து ஒரு இனாம்தாரருக்கு மானியமாக வழங்கப்பட்டு இருந்தால் அது மேஜர் இனாம் (Major Inam) என்று புரிந்து கொள்ளுங்கள்அதுவே ஒரு கிராமத்திற்குள் உள்ள குறிப்பிட்ட நிலப்பரப்புகள் மட்டும் அளவு சொல்லி வழங்கப்படுமாயின் அதனை சிறு இனாம்கள் (Minor Inams) ஆகும்( Gopisetti Narayanaswami v. Subrahmanyam(1916) 2 L.W. 683 மெட்ராஸ் உயர்நீதிமன்றம்)
2) மேலும் இந்த சிறு இனாம்கள்( Minor Inams ) இரண்டு வகையாக பிரிக்கலாம் 1. சாஸ்வத செட்டில்மெண்ட் 1802( Permenent Settlement)க்கு முன்பு வழங்கப்பட்ட இனாம்கள் இதனை ( Pre-Settlement Inams)
2. Settlementக்கு பின் வழங்கப்பட்ட இனாம்கள் (Post-Settlement Inams) என்று தீர்ப்புகளில் ஆவணப்படுத்தி வகைப்படுத்தி இருக்கின்றார்கள்
3)1802 ம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட இனாம்கள் தான் பண்டைய அரசர்களால் கொடுக்கப்பட்டிருக்கும் வெள்ளையர்கள் செட்டில்மெண்ட் (Settlement)க்கு பின் வழங்கப்பட்ட ஒரு சில வகைத்தான் அது 1802 க்கு பிறகு ஜமீன்கள் என்று அங்கீகரிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு கீழ் பணியாற்றுகின்ற குடும்பத்தினருக்கு கொடுத்து இருந்தால் அது தர்மிலா இனாம்கள்(Darmilla Inams ), அதேபோல் கிறித்தவ சர்ச்களுக்கு ஒரு சில இடங்களில் கொடுத்திருக்கிறார்கள்
4) இந்த இனாம்களின் மேல் வாரம் குடிவாரம் என்ற ஒரு உரிமை முறை இருக்கிறது அதில் இந்த தர்மிலா இனாம் மட்டும் மேல் வாரம் இனாம் குடிவார இனாம் என்று இரண்டாக பிரித்துக் கொள்ளலாம். மேல் வாரம் மட்டும் சிறு இனாமாக வழங்கபட்டு இருக்கும். உதாரணமாக சென்னையில் இன்றய ஐ டி ஹைவேயில் இருக்கும் தாழம்பூர், நாவலுர், நத்தம் ஆகிய கிராமங்களில் தர்மிளா இனாம் ரத்னகிரி ஜமீந்தாரால்(ரெட்டியார் தெலுகு ஜமீன்) தனது மகளின் வெத்தலை பாக்கு செவவுக்காக வழங்ககப்பட்டதாக சொல்லுவார்கள். அது முழுக்க முழுக்க மேல் வார தர்மிளா இனாம் ஆகும்.அதேபோல் தர்மிளா இனாம் மேல் வாரம், குடிவாரம் இரண்டும் சேர்த்து கொடுப்பார்கள்.
5) சிறு இனாம் (Minor Inam) மேல்வாரம் (Melvaram) மட்டும் கொண்டதாக இருந்தால்,
அந்த நிலத்தில் பயிரிடும் நபருக்கு (cultivating tenant) புழங்கும் உரிமையும் (சில பகுதிகளில் (உழவடை பாத்தியம் ) Occupancy Rights உண்டு.நிலத்தில் விவசாயம் செய்து வரும் குடியிருப்பாளரைInamdar வெளியேற்ற முடியாது (cannot eject)என்பது நிலைநிறுத்தப்பட்ட சட்ட நிலைப்பாடாகும்.
மேலும் நீதிமன்றங்கள் தொடர்ந்து,
“Minor Inams என்றாலே இரு வாரங்களும் வழங்கப்பட்டதாகமுன்உறுதி கொள்ள முடியாது”என்று தீர்ப்பளித்துள்ளன.
அதாவது ஒரு சிறு இனாம் மேல்வாரம் குடிவாரம் ரெண்டும் சேர்ந்து தான் எப்பொழுதும் இருக்கும் என்று தானாகவே கருத முடியாது.ஒவ்வொரு வழக்கும்:
ஆவணங்கள்,இனாம் வழங்கப்பட்ட விதம்
சேவை நிபந்தனைகள்,நிலத்தின் பயிரிடல் வரலாறுஎன்பவற்றின் அடிப்படையில் தான் நீதி மன்றத்தில் தீர்மானிக்கப்பட வேண்டும்.
6)1908 ம் ஆண்டு Madras Estates Land Act, 1908
என்ற சட்டத்தை அரசு கொண்டு வந்தது அது
ஜமீன் உரிமை தொடர்பான விஷயங்களை
ஒழுங்குபடுத்துவதற்காகவே கொண்டு வரப்பட்டது.. இந்த கிராமங்களில் இருக்கும் சிறு இனாம் சாகுபடிதாரருக்கு (cultivating tenant-)க்கு Occupancy Rights கிடையாது என்ற வாதம் இன்றும் இருக்கிறது மேற் சொன்ன சட்டம் “Estates” தொடர்பான நில உரிமைகளை பேசுகிறது. இந்த கிராமங்களில் இருக்கும் உழவடை பாத்திய உரிமை நீதிமன்றங்கள் தான் இறுதி செய்ய முடியும்
இப்படிக்கு
சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல
அறக்கட்டளை
See less

Comments
Post a Comment