முழு கிராம இனாம் எஸ்டேட் க்கும் Proprietary Inam estate கிராமத்திற்கும் வித்தியாசம் தெரியுமா?Proprietary Inam estate இல் விவசாயம் செய்கின்ற ரயத்துகளை எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேற்றலாமா?
- Get link
- X
- Other Apps
முழு கிராம இனாம் எஸ்டேட் க்கும்
Proprietary Inam estate கிராமத்திற்கும் வித்தியாசம் தெரியுமா?Proprietary Inam estate
இல் விவசாயம் செய்கின்ற ரயத்துகளை எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேற்றலாமா?
1)பிரிட்டிஷ் ஆட்சியில் Madras Presidency (மதராஸ் மாகாணத்திற்கு உட்பட்ட மிக முக்கியமான பிராந்தியங்களில் ஒன்று தான் Northern Circars (வடக்கு சர்கார்கள்) என்று சொல்லப்படுகின்ற வடக்கு பகுதி மாவட்டங்கள்.இது இன்றைய ஆந்திரப் பிரதேசம் – ஒடிசா கடற்கரைப் பகுதி முழுவதையும் கொண்ட ஒரு நீண்ட கடலோர ராயல் சீமா பகுதிகளை குறிக்கும். வடக்கே ஒரிசாவில் கஞ்சம் மாவட்டமும் ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் கிழக்கு கோதாவரி மேற்கு கோதாவரி கிருஷ்ணா குண்டூர் கர்னூல் பெல்லாரி அனந்தபூர் கடப்பா நெல்லூர் சித்தூர் என்று 12 மாவட்டங்கள் இருந்தன இவற்றை நாம் மெட்ராஸ் ராஜதானியின் வடக்கு பிராந்தியங்கள் என்று சொல்வார்கள்
2)இந்த பகுதி பிரிட்டிஷுக்கு அரசுக்கு மிகவும் முக்கியமான பகுதிகள் கடல் வர்த்தக மையமான மசூலிப்பட்டினம் விசாகப்பட்டினம் போன்ற பெரிய துறைமுகங்கள் துணி மசாலா உப்பு அரிசி துப்பாக்கி பொருட்கள் என இதெல்லாம் ஏற்றுமதி செய்யப்பட்ட பெரும் வியாபார தலமாக இருந்தது. மேலும்
இந்தப் பகுதியில் உள்ள கிருஷ்ணா – கோதாவரி டெல்டா பகுதிகளில் வளமான நெல் வயல்கள் இருக்கின்றன. தஞ்சாவூர் பள்ளத்தாக்கில் எப்படி காவிரி டெல்டா இருக்கிறதோ அதேபோல் கோதாவரி மற்றும் கிருஷ்ணா டெல்டா தஞ்சாவூர் டெல்டாவை விட பெரியது அதிக அளவில் நெல் உற்பத்தி செய்யப்படுகின்ற விவசாய நிலங்கள் இருக்கின்றன
3) ஐரோப்பியர்கள் வந்த பிறகு தான் தொழில் புரட்சி நகரங்கள் வளமான நகரங்கள் பண சுழற்சி உள்ள நகரங்கள் உருவாகின அதற்கு முன்பெல்லாம் விவசாயம் சார்ந்த கிராமங்கள் தான் பண சுழற்சி உள்ள வளமான பகுதிகளாக இருந்ததது. பெரும்பாலும் பிராமணர்கள் சமுதாயம் ஆற்றங்கரையை ஒட்டிய தங்களுடைய அக்ரகாரங்களை அமைத்துக் கொள்வார்கள் அக்ரஹாரம் என்றாலே அது ஒரு வகையான இனாம் அர்த்தம். இன்றும் ஈரோடு மாவட்டத்தில் பவானி கரையோரம் அக்ரஹாரம் என்ற பெயரிலேயே பல கிராமங்கள் இருக்கிறது
4) காவேரி கரை ஒட்டியே பல பிராமண கிராமங்களின் செட்டில்மெண்டுகள் இருப்பதை களப்பணி செய்யும் பொழுது பார்த்திருக்கிறேன். அதேபோல் தாமிரபரணி கரையோரமும் பிராமணர்களின் செட்டில்மெண்ட் அதிகமாக இருப்பதை பார்க்கலாம் இப்படியே தமிழகம் முழுக்க எங்கு சென்றாலும் தண்ணீர் வளமிக்க பகுதிகளில் அந்தத் தண்ணீரை முதலில் பயன்படுத்துகின்ற கிராமமாக பிராமணர்களின் செட்டில்மெண்ட் இருக்கும் அதற்கு பிறகு தான் அந்தத் தண்ணீர் மற்ற சமூகத்தினருக்கு செல்வதை பார்க்க முடியும்
5) இது போன்ற பகுதிகளை பிராமணர்கள் எல்லா காலத்திலும் அந்தந்த அரசர்களிடம் இனமாக பெற்று விடுகிறார்கள். இனாம் என்றால் அது மேல் வார உரிமை மட்டுமே
குடிவார உரிமை விவசாயிகளுக்கு என்று இதற்கு முந்தைய பல கட்டுரைகளில் நான் சொல்லி இருக்கிறேன். ஆனால் நிறைய பகுதிகளில் மேல் வாரம் மட்டுமல்லாமல் கிராமத்தின் அடி மண்ணும் சேர்த்து பிராமணர்களுக்கே இனாம் என்று அந்த காலத்து அரசர்கள் கொடுத்திருக்கிறார்கள் அதனை Proprietary Inam என்று சொல்வார்கள்
தமிழகத்தில் பாலாற்றங்கரை ஓரம் காஞ்சிபுரத்தில் இந்த வகை இனாம் இருக்கிறது.
6)அரசன் ஒரு கிராமத்தையோ அல்லது நிலத்தையோ மண் உரிமையுடன் (soil + ownership)முழுமையாக ஒருவருக்கு கொடுத்த இனாம். இனாம் ஒழிப்பு சட்டத்தில் அரசு எடுத்திருக்க மாட்டார்கள். இதனை மற்ற ஜமீன்களைப் போல ஜமீன் ஒழிப்பு சட்டத்தில் தான் (1948 சட்டத்தில் ) ரயத்துவாரிக்கு மாற்றி இருப்பார்கள். இப்படி ஒரு அக்ரஹார கிராமம்தான் கோர குண்டா அக்ரஹாரம்(Koragunta agraharam village) கிருஷ்ணா டெல்டாவில் இருக்கிறது. எந்த கிராமத்தை 1373 ம் ஆண்டு
ஸ்ரீ மதன வேம ரெட்டி என்ற ரெட்டி அரசர்
இவட்டூரி நாகநாராத்யுலு என்ற பிராமணருக்கு அந்த கிராமத்தையே இனமாக கொடுத்திருக்கிறார். உண்மையில் ரெட்டிய அரசர்கள் ரெட்டி அரசர்கள் 13 முதல் 15 ம் நூற்றாண்டு வரை அந்த பகுதிகளை ஆண்டு வந்து இருக்கின்றார்கள் அவர்கள் ஹிந்து சனாதன தர்மத்தை ஆதரித்து
பிரம்மணர்களுக்குப் பிரமண அக்ரஹாரம் மற்றும் நிலங்களை வழங்கினர். பிராமணர்களின் கல்வி, சமயப் பண்பாடு வளர்ச்சிக்கு ஆதரவு அளித்து இருக்கின்றனர்
7) மேற் சொன்னபடி இவட்டூரி நாகநாராத்யுலு
அவர்கள் Proprietary Inam உரிமையுடன் கைப்பற்றி சர்வ சுதந்திர பாத்தியமாய் மேல் வார உரிமையும் குடி வார உரிமையும் குடிவார மன்னுரிமையும் என முழுமையான அந்த கிராமத்தை ஆளுகை செய்து வந்திருக்கிறார்கள். இதனை ஓக்ஸ்[Oaks) என்ற கலெக்டர் 1768 இல் ஒரு வருவாய் பதிவேட்டினை உருவாக்கி இருக்கிறார் அதில் எந்தெந்த கிராமங்கள் எல்லாம் வரி கொடுக்கிறது எந்தெந்த கிராமங்கள் எல்லாம் இனாம் கிராமங்கள் என்பதையெல்லாம் பதிவு செய்திருக்கிறார்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1860களில்
டபிள்யூ. டீ பிளேயர் மற்றும் ஜி என் டெய்லர் ஆகிய இரு ICS அதிகாரிகள் இனாம் உங்களை வகைப்படுத்தி இனாம் தூய பதிவேட்டை (IFR) உருவாக்கினார்கள் என்று இதற்கு முந்தைய பல கட்டுரைகளில் சொல்லி இருக்கிறேன்
ஆனால் கிருஷ்ணா டெல்டாவில் 17 60களில் அதாவது GN tailor W. T blair
ஆகியோர்களுக்கு நூறாண்டுகளுக்கு முன்பே கலெக்டர் ஓக்ஸ் அவர்கள் அவரின்
மாவட்டத்தின் இனாம் கிராமங்களை வகைப்படுத்தி அதற்கான ஆதாரங்களை ஆராய்ந்து
அதைப்பற்றி தொகுத்து ஒரு பதிவேட்டினை வைத்திருந்தார். அதனை ஓக்ஸ் இனாம்
ரிஜிஸ்டர் என்று வருவாய் அதிகாரிகள் சொல்வார்கள். அந்த ஒர்க்ஸ் இனாம
ரெஜிஸ்டரில் தெளிவாக மேற் சொன்ன கோரகொண்டா கிராமம் " In the whole of
the agraharam village of Korragunta was granted by Sri Madana Vema
Reddy to Ivaturi Naganaradhyulu and had been enjoyed by his successors
in title for 429 years என்று ஆவணங்களை பார்வையிட்டு தன்னுடைய இனாம்
பதிவேட்டில் குறித்து வைத்திருக்கிறார்.
9) அதன் பிறகு 1802 ஆம் ஆண்டு 31-வது ரெகுலேஷன் சட்டத்தில் பிரிவு 15ன் படி
ஒவ்வொரு Zillah (ஜில்லா / மாவட்டம்) யிலும்,
முன்பு அரசுவரி (Revenue) செலுத்தாமல் வைத்திருந்த நிலங்கள் குறித்து
ஒரு தனி பதிவேடு (Register) வைத்திருக்க வேண்டும் என்று சட்டமாக நிர்ணயிக்கப்பட்டது.அந்த பதிவேட்டில் பின்வரும் விஷயங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும்:ஒவ்வொரு Inam grant (இனாம் கொடை / சனத்) இன் பெயர்
அந்த கொடையை கொடுத்த அரசர் யார்
அந்த கொடையை பெற்றவர் யார்
தற்போது அந்த நிலத்தை வைத்திருப்பவர் யார் இது போன்ற விவரங்களை தெளிவாக அந்த பதிவேட்டில் எழுதி வைக்க வேண்டும்
10) அதன்படி கலெக்டர் ஒக்ஸ் அவர்கள் என்ன குறித்து வைத்திருந்தார்களோ அதனையே ரெகுலேஷன் சட்ட ஆவணத்திலும் குறித்து வைத்திருக்கிறார்கள் அதன் பிறகு
1865 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மெட்ராஸ் சட்டம் VIII படி, இனாம்தாரர்கள் தங்கள் குத்தகைதாரர்களுடன் (tenants) எழுத்து மூலம் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் விதித்தது. மேலும் இந்த ஒப்பந்தத்தில், மேற்படி நிலத்தில் குத்தகைக்கு கொடுத்தால் அதனை முச்சலிக்கா என்று சொல்வார்கள் அதில் இனாம்தாரருக்கும் விவசாயம் செய்கின்ற நபருக்கும் எவ்வளவு வரி கொடுக்க வேண்டும், என்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டும் அதில் உள்ள விதிகளுக்கேற்ப நிலத்தைப் எவ்வளவு காலம் சாகுபடி செய்ய வேண்டும் என்று கூறும் ஒப்பந்தமாக அது இருக்க வேண்டும். ஆனால் மேற்படி பிராமணர்கள் தங்களுக்கு கீழே உள்ள சம்சாரிகளுக்கு முச்சலிக்கா செய்யும் பொழுது முசிலிகாக்களில்,
அவர்களுக்கு நிலம் எவ்வளவு காலத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,அவர்கள் “ஜெரோயாத்தி (zeroyati) உரிமை”, அதாவதுநிரந்தர குடியிருப்பு / நிரந்தர பயிர் உரிமை எதுவும் இல்லை என்பதை ஒப்புக்கொண்டிருந்தார்கள். இந்த ஜீரோயாத்தி என்பது தெலுங்கு வார்த்தை இந்த வார்த்தையை போடுவதன் மூலம் குடிவாரத்தில் இருப்பவர்கள் எந்தவித உரிமையும் நிலத்தில் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் குத்தகை காலம் முடிந்தவுடன் நிலத்தை காலி செய்து விடுவோம் என்றும் அவர்கள் உறுதி அளித்திருந்தார்கள். இப்படிப்பட்ட முச்சலிக்காவை அந்த பிராமண இனாம்தாரர்கள் அங்கு இருக்கின்ற சம்சாரிகளுக்கு சாகுபடி செய்பவர்களுக்கு உருவாக்கி வைத்திருந்தார்கள்
11) இந்த நிலையில் எஸ்டேட் ஆக்ட் 1 வது சட்டம் 19 08 பிரிட்டிஷ் அரசு அமல்படுத்தியவுடன் இனாம்தாரர்கள் யாரும் தங்களுக்கு குடிவாரத்தில் உழைக்கின்ற சம்சாரிகளை நிலத்தில் இருந்து வெளியேற்றக் கூடாது அவர்களுக்கு புழங்குரிமை(ocupancy rights )இருக்கிறது என்றவாறு சட்டம் அமல்படுத்தும் காலத்தில் அதற்கு முன்பே சட்டத்தின் வரைவுகளை எல்லாம் படித்துவிட்ட பிராமணர்கள் பங்கே இருக்கின்ற சம்சாரிகளை நிலத்தை விட்டு வெளியேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். அங்க இருக்கிற சம்சாரிகளும் தங்கள் சாகுபடி செய்த நிலங்களை விட்டு வெளியேறவில்லை தங்களுடைய தோட்டங்களையும் வீடுகளில் விட்டு வெளியேறவில்லை.
12)அதனால் பிராமண இனாம்தார்கள்முதன்தொடுத்த இடம்:
District Munsif Court, Gudivada மாண்பமை குடிவாடா மாவட்ட முன்சீப் நீதிமன்றம்
(இன்றைய ஆந்திரப் பிரதேசம் – கிருஷ்ணா மாவட்டம், குடிவாடா)1909-ஆம் ஆண்டு
விவசாயிகளை (பிரதிவாதிகளை) வெளியேற்றக் கோரி (ejectment suits) வழக்கு போட்டார்கள். இந்த வழக்கில் பிராமண இனம் தாரர்கள் வெற்றி பெற்றார்கள். அதனை எதிர்த்து கிருஷ்ணா மாவட்ட நீதிமன்றத்திற்கு சம்சாரிகள் மேல்முறையீடு செய்தார்கள்
“13) அதற்கு கிருஷ்ணா மாவட்ட நீதிமன்றம் கொர்ரகுண்டா அக்ரஹாரம் ஒரு ‘Estate’
(Madras Estates Land Act, 1908 – Section 3(2)(d)) தான்.”இது Estate கிராமம் என்பதால்
விவசாயிகள் மீது இனாம்தார்கள் போட்ட ejectment suits செல்லாது என்றும்
ஆகவே Munsif கொடுத்த தீர்ப்பு ரத்து என்றும் தீர்ப்பு சொல்லி விட்டது அதன் பிறகு பிராமண இனாம்தாரர்கள்
சென்னை உயர்நீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்தார்கள் அதில்:
“கொர்ரகுண்டா அக்ரஹாரம் ஒரு Estate.
அதனால் Civil Court-க்கு அதிகாரம் இல்லை.
இந்த suits Revenue Court-க்கு போக வேண்டும். என்றும் குடிவாடா கோரட்டில் போட்ட வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு revenue நீதிமன்றத்திற்கு செல்லுமாறு தீர்ப்பு அளித்தார்கள். இதனால் மனமுடைந்த இனாம்தாரர்கள் லண்டனில் உள்ள பிரவி கவுன்சிலுக்கு இதுதான் மிக முக்கியமான வரலாற்று தீர்ப்பாக அமைந்திருக்கிறது அதனை கீழே பார்ப்போம்
14)Privy Council தீர்ப்பை கிருஷ்ணா மாவட்ட கோர்ட் சொன்னதையும் சென்னை உயர்நீதிமன்றம் சொன்னதையும் ஏற்றுக்கொள்ளாமல் அப்படியே மாற்றி குடிவாடா கோர்டில் சொன்ன தீர்ப்பு செல்லும் என்று சொல்லிவிட்டார்கள். அதாவது
Madras High Court “Inam என்றால் அரசனின் வரி பங்கு மட்டும்.அதனால் இது Estate.” என்று சொல்லியிருந்தது ஆனால்
Privy Council இது தவறான சட்ட ஊகம்.என்று சொல்லியது அதற்கான விளக்கத்தை
Privy Council பின வருமாறு தெரிவித்தது
15) கிருஷ்ணா மாவட்ட நீதிபதி (District Judge) முந்தைய குடிவாடா முன்சிப் நீதிமன்றத்தின் (Munsif) தீர்ப்புகளை ரத்து செய்து வழக்குகளைத் தள்ளுபடி செய்தார். அதேபோல் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளும் அந்தத் தீர்ப்புகளை உறுதிப்படுத்தினார்கள். மேற்சொன்ன இரண்டு நீதிபதிகளும் இனாம் கிராமம் என்பதால் “சட்ட ஊகம் (presumption of law)” என்ற ஒன்றை அடிப்படையாக வைத்து தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள் . அதாவது
ஒரு இனாம்தார் (Inamdar) தனது இனாம் வழங்கப்பட்ட ஆவணத்தை (Inam grant) நீதிமன்றத்தில் காட்ட முடியாவிட்டால், அவர்களுக்கு கொடுக்கப்பட்டது நிலத்தின் முழு உரிமை அல்ல; அரசுக்குரிய வருவாய் (royal share of revenue) மட்டும் தான் கொடுக்கப்பட்டது என்று கருத வேண்டும் என்பதாகும்.இந்த கருத்தை அவர்கள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் சில தீர்ப்புகளிலிருந்து எடுத்ததாகக் சொல்லி இருக்கின்றார்கள்
அதாவது இது பிரிட்டிஷ் அரசின் காலத்தில், அரசன் (Crown) அல்லது அரசின் பெயரில் ஒரு கிராமம் இனாமாக கொடுக்கப்பட்டிருந்தால், அந்த கிராமத்தில் ஏற்கனவே விவசாயிகள் (cultivators / raiyats) பெற்றிருந்த குடியிருப்பு உரிமை அல்லது பயிரிடும் உரிமை (rights of occupancy) இருந்தால், அவை தொடரும் என்றே சட்டம் ஊகிக்கும்.அதாவது,
இனாம் கொடுத்தாலும், அப்போது நிலத்தில் உழைத்துக் கொண்டிருந்த விவசாயிகளின் குடிவார உரிமைகள் அழிக்கப்படாது. இந்தத் தீர்ப்பை தான் மாவட்ட நீதிபதியும் சென்னை உயர்நீதிமன்றமும் கடை பிடித்திருக்கின்றது
16)ஆனால், பிரிவி கவுன்சில் அந்த தீர்ப்புகளை நன்கு ஆராய்ந்து பார்த்திருக்கின்றது மேற் சொன்ன சட்ட ஊகத்தை ப்ரிவி கவுன்சில் ஆதரிக்கவே இல்லை. அவை Oakes Inam Register இல்
ஸ்ரீ மாதன்னா வேம ரெட்டி அவர்கள் 1373 ஆம் ஆண்டு மனுதாரருடைய முன்னோர்களுக்கு முழு கிராமத்தையும் அடிமண் உரிமையோடு கொடுத்திருக்கிறார் என்ற குறிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியும்
அதனால் இது Revenue Inam அல்ல என்று சொல்லி விட்டது மட்டுமல்லாமல் இது
Proprietary Inam. என்றும் பிரீவி கவுன்சில் அறிவித்தது
17) மேலும் Dumbalas (பழைய அரசாணைகள்)
பழைய sanad ஒன்ற ஆவணங்களை பார்வையிடும் பொழுது இந்த முழு கிராமத்தையும் முழு உரிமையோடு அந்த பிராமணர்கள் ஆளுகை செய்து இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது
மேலும் 429 ஆண்டுகள் Inamdar நிர்வாகம் செய்து கொண்டு இருக்கிறார்கள். பிரிட்டிஷ் அரசு ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பிருந்த அந்த கிராமம் இனாமாக இருக்கிறது. அதனை அதற்கு முந்தைய அரசர்கள் கொடுத்திருக்கிறார்கள் அப்படி அரசர்கள் கொடுத்ததை அடுத்து வந்த பிரிட்டிஷ் அரசு பழைய அரசு உத்தரவுக்கு மதிக்க வேண்டும் மேலும் பிராமணர்கள 429 வருடங்களுக்கு முன்பு அரசர்களிடம் இனாம் பெற்றதை நிரூபித்து இருக்கின்றார்கள் ஆனால் அதே நேரத்தில் குடிகார உரிமையில் 429 ஆண்டுகளுக்கு முன்பு மற்றும் அதன் பின்பு பிரதிவாதிகள் குடிவார உரிமையில்இருந்தார்கள் என்பதை நிரூபிக்க முடியவில்லை எனவே கோர குண்டா அக்ரஹார கிராமம் ஒரு Proprietary Inam. என்பதால் அது estate அல்ல அதனால்Inamdar தான் முழு owner போல நடந்து கொண்டிருக்கின்றார்
Civil Court தீர்ப்பே சரி.” என்று சொல்லி அங்கு இருக்கின்ற சம்சாரிகளை வெளியேற சொல்லியிருக்கிறது
இந்தத் தீர்ப்பினை
மாண்புமிகு அட்கின்சன், மாண்புமிகு ஜான் எட்ஜி, மாண்புமிகு வால்டர் பில்லிமோர் மாண்புமிகு பார்ட் ஜேஜே ஆகியோர்கள் அளித்திருக்கிறார்கள் Suryanarayana and others vs pattana and others decided on 01.07.1918 before the privy Council
இப்படிக்கு
சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
தொடர்புக்கு +91 86100 63410

See less
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment