மடாதிபதி, ஷெபைத், முத்தவல்லி எழுதி கொடுக்கின்ற ஆவணங்கள் மூலம் சொத்து உரிமை மாறுமா?
மடாதிபதி, ஷெபைத், முத்தவல்லி எழுதி கொடுக்கின்ற ஆவணங்கள் மூலம் சொத்து உரிமை மாறுமா? 1)“கோவில் நிலம்”, “மடம் நிலம்”, “வக்ஃப் நிலம்” என்று சொல்லப்படும் நிலங்களை, மடாதிபதி, , ஷெபைத், முத்தவல்லி ஆகியோர்தங்களுக்குச் சொந்தமானது போல விற்றும், குத்தகைக்கும் கொடுத்து வருகிறார்கள். அதனால் அதனை வாங்கியவர்களுக்கும் நிறைய கேள்விகள் இருக்கிறது மடாதிபதி என்றால், நிலம் அவருக்கே சொந்தமா?” அவர் எழுதி கொடுத்தால் அது போதுமானது தானா? என்ற சட்ட மயக்கம் சாமானியர்கள் மத்தியில் அதிக அளவில் நிலவுகின்றது அதற்காகத்தான் இந்த தீர்ப்பினை நாம் பார்ப்போம் 2)Vidya Varuthi Thirtha v. Balusami Ayyar என்ற வழக்கு முதலில் 05.03.1913 தேதியில் மதுரை சப் கோர்ட் (Subordinate Judge’s Court, Madura ) டில் ஒரு மடத்துக்குச் சொந்தமான மதுரை நகரத்திற்குள் இருக்கின்ற சில நிலங்களை குறித்து விளம்புகை உரிமை அறிவிப்பு பிரதிவாதிகள் வெளியேற்றம் (ejectment) கைப்பற்றல் வேண்டும் என்று பரிகாரம் கோரி மடாதிபதி தரப்பினர் வழக்கு தொடர்ந்தார்கள் 2)மதுரை நகரத்தில் உள்ள அந்த மட சொத்து “எந்த சர்வே நம்பர் / எந்த தெரு” என்று எ...