கடலூர் நிலத்தின் நலமறிய ஆவல் வழிகாட்டுதல் முகாம் வெற்றிகரமாக நடந்தது!
கடலூர் நிலத்தின் நலமறிய ஆவல் வழிகாட்டுதல் முகாம் வெற்றிகரமாக நடந்தது! 27.11.2021 அன்று கடலூர் புதுப்பாளையம் ஆருத்ரா அரங்கில் வழிகாட்டுதல் முகாம் நடத்த ஏற்பாடு செய்யபட்டு அறிவிக்கபட்டு விட்டது!இந்த நிலையில் தொடர் மழை அறிவிப்பு உள்ளபடியே பயனாளிகள் வருவார்களா என்ற லேசான தயக்கத்தை உருவாக்கி விட்டு இருந்தது ஆனால் நிகழ்ச்சி தொடர் மழை இருந்தாலும் வெற்றிகரமாக நடந்து விட்டது! இந்த நிகழ்வு காலையில் சிறிது தாமதமாக ஆரம்பித்து மதியம் ஒரு மணி வரை நில சிக்கல் என்று வருபவர்களுக்கு அவர்களின் சிக்கலை ஆவணப்படுத்துகிற வேலை நடந்தது அண்ணன் பாபநாசம் ஜெயகுமார் சோளிங்கர் மோகன் கிருஷ்ணகிரி முத்து ஒமலூர் தமிழ் ஆகியோர் முழு மூச்சாக ஆவணப்படுத்துகின்ற வேலையை செய்தார்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தம்பி அருண்குமார் அனைவருக்கும் தேனீர் மதிய உணவு ,முட்டை பிரியாணி தன் செலவிலேயே அனைவருக்கும் விருந்து வழங்கினார். அதன் பிறகு மதியம் மேடை மரியாதை நிகழ்ச்சி செய்ப்பட்டது நிதிகொடுத்தோர் உடல் உழைத்தோர் அனைவருக்கும் நன்றி நவிலபட்டது நினைவு கேடயம் வழங்கபட்டது பொன்னாடை போர்த்தபட்டது விருந்தினர்கள் திரு.பரமகுரு ,வளவனூர்...