இனாம் கிராமத்தில் பூமிக்கடியில் இருக்கும் கல்குவாரிகளுக்கு யார் உரிமையாளர்?
- Get link
- X
- Other Apps

1)இப்படி ஒரு வழக்கு 1916 ஆம் ஆண்டு நடந்தது வெள்ளையர்கள் 1800 களில் ஆட்சியில் அமர்வதற்கு முன்பிருந்த நவாப் அவர்கள் தாவா சொத்தான கிராமத்தை சீனிவாசாச்சாரியார் அவர்களின் முன்னோர்களுக்கு மேஜர் இனாமாக அதாவது ஏக்கரில் காணியில் அளவு சொல்லாமல் ஒரு பகுதியை குறிப்பிட்டு இனாமாக கொடுத்து விட்டார்கள்
2)அது கிழக்கு தொடர்ச்சி மலைச்சரிவுகளில் இருந்த கிராமம் என்பதால் நிறைய கற்கள் மண்ணுக்கு அடியில் உறங்கி கொண்டு இருந்தது அதன் பிறகு வெள்ளையர்கள் ஆட்சிக்கு வந்தும் அதனை மேஜர் இனாமாக தங்களுடைய கணக்கில் தொடர்ந்தார்கள்
3)அதன் பிறகு இனாம் கமிஷன் உருவாக்கி அனைத்து இனாம்களையும் கணக்கெடுக்கும் பொழுது இந்த இனாமையும் 1865 ஆம் ஆண்டு கணக்கெடுத்து தூய இனாம் பதிவேட்டில் TD நம்பர் கொடுக்கப்பட்டு இனாம் என்று ஆவணப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
4)சீனிவாசச்சாரியார் மூதாதையர்கள் ஏற்கனவே மெத்த படித்தவர்களாக இருந்த தாலும் இனாம் சம்பந்தப்பட்ட நடைமுறைகள் புரிந்து கொண்டிருந்ததாலும்
வெள்ளையர் ஆட்சியில் உள்ள இனாம் அலுவலர்களை பிடித்து இனாம் நடைமுறையில் இருந்து வெளிவருவதற்காக விடு வரியை (Quit-rent”) செலுத்தி அதனை ரயத்துவாரியாக மாற்றி இனாம்தார் என்ற பெயரில் ஒரு ஜமீன்தார் போல் வாழ்ந்து இருக்கின்றார்கள்
5)அதன் பிறகு கல்குவாரி அமைத்து முழு உரிமையோடு வாழத் தொடங்கினார்கள் வெள்ளையர் அரசுக்கும் கற்கள் தேவைப்பட்டதால் அவர்களும் அந்த கற்களை சீனிவாசாச்சாரியார் குடும்பத்தினரிடமிருந்து வாங்கிக் கொண்டார்கள். தொடர்ந்து ஒரு அரசு அவர்களிடமே வாங்குகின்ற நிலை வந்ததால் அரசு அந்த கிராமத்தில் ஒரு சிறு பகுதியை நில ஆர்ஜித சட்டப்படி நிலத்தை நஷ்ட ஈடு கொடுத்து கையகப்படுத்தி அந்த நிலத்திலிருந்தும் கல்குவாரி அமைத்து அரசு கற்களை எடுத்துக் கொண்டது
6) வெள்ளையர் ஆட்சியில் இருக்கின்ற அதிகாரிகளுக்கு இவ்வளவு கற்கள் இருக்கின்ற பகுதிகளில் முழுமையாக சீனிவாசாச்சாரியார் குடும்பத்திற்கு கொடுத்துவிட்டதால் அங்கலாப்பும் ஆதங்கமும் இருந்திருக்கிறது அதனால் அரசு கடிதம் அனுப்பியது.“உங்கள் நிலத்தில் இருந்து எடுக்கும் கற்களுக்கு உரிமை தொகை மற்றும் அரசு பங்குதொகை ( Royalty / Seigniorage fee) கொடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில்சொல்லப்பட்டிருந்தது
7) இதனை எதிர்த்து சீனிவாசாச்சரியார் நீதிமன்றம் சென்றார்.இது எங்கள் குடும்பத்திற்கு வழங்கிய இனாம் நிலம்.
அதற்கும் மேலாக…Quit-rent கொடுத்து
முழு உரிமையையும் வாங்கி வைத்திருக்கிறோம்.அப்படியிருக்க…
எப்படி அரசு பங்கு தொகை கேட்க முடியும்?”
என்று வாதிட்டார்கள்.அதற்கு
அரசு தனது வாதத்தில் இனாம்தார் (Inamdar )என்பது ஓர் ரயத்துவாரி உரிமை பெற்றவர்கள் ( ordinary ryotwari tenant) மாதிரி தான் விளைச்சலில் தான் பங்கு இருக்கிறதே தவிர கல், கனிமங்கலில் உரிமை இல்லை அந்த உரிமை முழுவதுமாக அரசையே சாரும் என்று சொல்லியது
அதற்கு நீதிமன்றம் ஆழமாக வரலாற்றையும்சட்ட ஆவணங்களையும் ஆராய்ந்தது. நீதிமன்றத்தின
Full Bench நீதிபதிகள்(Abdur Rahim, O.C.J.; Seshagiri Aiyar, J.; Phillips, J.) தீர்ப்பு வழங்கினார்கள் இனாம் நிலம் வழங்கப்பட்டபோது grant-இல் எதையும் அரசு தனக்காக வைத்துக் கொள்ளவில்லை.மேலும்
Enfranchisement பிறகு
Quit-rent மட்டும் பெற்றிருக்கிறார்கள். என்பதையெல்லாம் ஆராய்ந்தது.
9) நில உரிமை முழுவதும் inamdar-க்குதான் சொந்தம் அவர் Zamindar-க்கு சமமானவர்
Ryotwari tenant அல்ல.மேலும்
அரசு இதற்கு முன்னர் சீனிவாசச்சாரியார் குடும்பத்திடம் இழப்பீடு கொடுத்து தான் கற் குவாரி நடத்திஇருகிறது வருவாய் கழகத்தில் உள்ள ஆணைகளில் கறகள் எடுப்பதற்கான ராயல்டி பற்றி பேசப்படவில்லை என்று கூறியது இந்த நடவடிக்கை எல்லாம் ஏற்கனவே கற் குவாரிஉரிமை தமக்கில்லை என்பதை அரசே தானே ஒப்புக்கொண்ட சான்றுகள்”
என்று நீதிமன்றம் கூறியது.முடிவாக
இனாம்தார் (“Inamdar)-க்கு நிலத்தின் மீது
முழு உரிமை உண்டு.அரசு royalty / seigniorage
வசூலிக்க முடியாது.” என்றுஅரசின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.
(வழக்கு விவரம் : Secretary of State for India in Council v. Srinivasachariar & Others
Year: 1916
Court: Madras High Court (Full Bench)
Reporter: 08 MAD CK 0055
Indian Cases (Ind. Cas.) Reporter: 39 Ind. Cas. 337)
இப்படிக்கு
சா.மு பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
+91 86100 63410

See less
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment