இனாம் தூய பதிவேட்டில் உள்ள அளவை வைத்து அதனுடைய எல்லையை நிர்ணயிக்க முடியுமா?
இனாம் தூய பதிவேட்டில் உள்ள அளவை வைத்து அதனுடைய எல்லையை நிர்ணயிக்க முடியுமா?
1) இப்படி ஒரு வழக்கு 1920 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது அதனைப் பற்றி பார்ப்போம்
இந்த வழக்கை பொறுத்தவரை நில அளவை செய்து அத்து பார்க்க வேண்டியது ஒரு சர்வே நம்பருக்கும் இன்னொரு சர்வே நம்பருக்கும் இடைப்பட்ட எல்லையை அல்ல. இந்த வழக்கு இரண்டு கிராமங்களின் எல்லையை(Village Boundary) அளப்பது சம்பந்தப்பட்டதாகும்
2) அன்றைய சிவகங்கை ஜமீனில் தர்மசாசனம் கழனிவாசல் ( முழு இனாம் கிராமம் ) செக்கலகோட்டை ( ஜமீன் கிராமம்) என்று இரண்டு கிராமங்கள் பக்கத்து பக்கத்தில் இருந்தது இவர்களுக்கு தான் எல்லை சிக்கல், இனாம் கிராமத்தை பொருத்தவரை சர்வ மானியம் பெற்ற மஹா ஜனம் என்று அழைக்க படுகிற பிரமாண ர்களுக்கான கிராமம் செக்கல கோட்டை கிராமம் சிவகங்கை ஜமீனிற்கு கட்டு பாட்டில் உள்ள ஒரு ஜமீன் கிராமம். மேற்படி வழக்கு சர்வமானிய மகாஜனம் மற்றும் செக்கல கோட்டை கிராம சம்சாரிகளுக்கும் நடை பெற்றது.
3).சிவகங்கை சமஸ்தானம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மறவர் அரச குடும்பத்தின் ஒரு கிளையினரால் ஆளப்பட்டு வந்தது. இந்த ஆட்சி 1790 ஆம் ஆண்டு வரை ராணி வேலு நாச்சியார் அவர்களால் நடைபெற்றது.
அவரது மறைவுக்குப் பிறகு, மருது சகோதரர்கள் 1790 முதல் 1801 வரை சிவகங்கை சமஸ்தானம் ஆட்சி செய்தனர்.அதன் பிறகு
மருது சகோதரர்களின் மரணத்திற்குப் பின்னர், 1803 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அந்த சமஸ்தானத்தை ஒரு ஜமீந்தாரி (Zamindari) ஆட்சியாகக் குறைக்கப்பட்டு இருந்தது.
4)இனாம் கிராமத்தை பொருத்தவரை 1710 ம் ஆண்டு ராமநாதபுர சமஸ்தானம் 8வது ராஜா தாமிரபட்டயம் மூலமாக இனாம் பெற்றதாக நீதிமன்றத்தில் தாமிர பட்டயம்( Copper Plate) சமர்பித்து இருக்கிறார்கள்.செக்கல கோட்டை சம்சாரிகளுக்குக்கு 1866 ம் ஆண்டு சிவகங்கை ஜமீந்தாரிணி ராணி கதம்மா நாச்சியார் கௌல் (cowl)ஆக கொடுத்து இருக்கிறார்கள். ராமநாதபுரம் ராஜா கொடுத்த தாமிர பட்டய (Copper plate) ஆவணத்துக்கும் ஜமீந்தாரிணி கொடுத்த கௌல் ஆவணத்துக்கும் தான் பரப்பளவு எல்லை சிக்கல்.
5) 1863 மற்றும் 1877 ஆகிய ஆண்டுகளின் அந்த பகுதிகளில் சர்வே பணிகள் துணை சர்வே ஆணையராக இருந்த திரு. காம்பெர்ட்ஸ் (Mr. Gompertz) அவர்களால் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. (அந்த கால கட்டத்தில் இனாம் நில (IFR ) சர்வே நடந்து இருக்கிறது.அவர் அளந்து முடித்த பிறகுதான் சிவகங்கை ஜமீன்தாரிணி சம்சாரிகளுக்கு கௌல் பட்டா கொடுத்து இருக்கிறர்கள்.சம்சாரிகளும் அங்கு தோட்டங்களும் வீடுகளும் அமைத்து வாழ்ந்து வந்து இருக்கிறார்கள்
6)சர்வ மானிய மஹாஜனம் மக்களுக்கு தாமிர பட்டயத்தில் உள்ளபடி எங்களுக்கு சேர வேண்டிய பகுதி என்று வழக்கிடுகிறார்கள்
வழக்கை விசாரித்த நீதியரசர் ஸ்பென்சர் (திருச்சி கலெகடர் ஆகவும் இருந்து இருக்கிறார் ) 1860 ஆம் ஆண்டின் சட்டம் XXVIII (Act XXVIII of 1860) கீழ் சர்வே அதிகாரி (Survey Officer) வழங்கிய தீர்ப்பு இறுதியும் (final), கட்டாயமும் (binding) ஆகும் என்று நீதிமன்றம் தெளிவாகத் தீர்மானித்தது.
7)கிராம எல்லைத் தகராறு (boundary dispute) தொடர்பாகசர்வே அதிகாரிக்கு அந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகார வரம்பு (jurisdiction) முறையாக
பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும்,
அவர் எடுத்த முடிவு மூலம் அந்த எல்லைத் தகராறு முழுமையாகத் தீர்வு பெற்றதாகவும் நீதிமன்றம் கூறியது.
8)இனாம் நிலத்தை பொருத்தவரை பரப்பளவு அன்றய சர்வேயர் வைத்து அளந்து சர்வே சட்டப்படி இறுதி செய்யப்பட்டது. எனவே அதனை தான் நில அளவை சிக்கலு க்கு ஆவணமாக எடுத்து கொள்ள வேண்டும்.
(IN THE HIGH COURT OF MARAS Nachiyappan Alias Kirukan Versus Alagappa Chetty And Ors. Decided On : 9 March, 1920)
இப்படிக்கு
சா. மு பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல
அறக்கட்டளை
+91 86100 63410

Comments
Post a Comment