மடாதிபதி, ஷெபைத், முத்தவல்லி எழுதி கொடுக்கின்ற ஆவணங்கள் மூலம் சொத்து உரிமை மாறுமா?
மடாதிபதி, ஷெபைத், முத்தவல்லி எழுதி கொடுக்கின்ற ஆவணங்கள் மூலம் சொத்து உரிமை மாறுமா?
1)“கோவில் நிலம்”, “மடம் நிலம்”, “வக்ஃப் நிலம்” என்று சொல்லப்படும் நிலங்களை,
மடாதிபதி, , ஷெபைத், முத்தவல்லி ஆகியோர்தங்களுக்குச் சொந்தமானது போல விற்றும், குத்தகைக்கும் கொடுத்து வருகிறார்கள். அதனால் அதனை வாங்கியவர்களுக்கும் நிறைய கேள்விகள் இருக்கிறது மடாதிபதி என்றால்,
நிலம் அவருக்கே சொந்தமா?” அவர் எழுதி கொடுத்தால் அது போதுமானது தானா?
என்ற சட்ட மயக்கம் சாமானியர்கள் மத்தியில் அதிக அளவில் நிலவுகின்றது அதற்காகத்தான் இந்த தீர்ப்பினை நாம் பார்ப்போம்
2)Vidya Varuthi Thirtha v. Balusami Ayyar என்ற வழக்கு முதலில் 05.03.1913 தேதியில் மதுரை சப் கோர்ட் (Subordinate Judge’s Court, Madura ) டில் ஒரு மடத்துக்குச் சொந்தமான மதுரை நகரத்திற்குள் இருக்கின்ற சில நிலங்களை குறித்து விளம்புகை உரிமை அறிவிப்பு பிரதிவாதிகள் வெளியேற்றம் (ejectment) கைப்பற்றல் வேண்டும் என்று பரிகாரம் கோரி மடாதிபதி தரப்பினர் வழக்கு தொடர்ந்தார்கள்
2)மதுரை நகரத்தில் உள்ள அந்த மட சொத்து “எந்த சர்வே நம்பர் / எந்த தெரு” என்று என்னிடம் கேட்காதீர்கள். அது சம்பந்தப்பட்ட விவரம் Privy Council தீர்ப்பில் இல்லை. இந்த தீர்ப்பு காலாவதி தோஷம் ( Limitation) டிரஸ்டி மடாதிபதி சம்பந்தப்பட்ட உரிமைகளை தீர்மானிக்கவே எழுதப்படுவதால் மதுரை சம்பந்தப்பட்ட சொத்து விவரம் இதில் குறிப்பிடப்படவில்லை ஆனால் கீழமை நீதிமன்ற வழக்கு ஆவணங்களில் தாவா சொத்தினை தெளிவாக காட்டியிருப்பார்கள்
3 )இந்த நிலம்மதுரை நாயக்கர் அரசர்கள் காலத்தில்மடத்துக்காக (religious endowment) தானமாக கொடுக்கப்பட்ட இனாம் நிலமாகும்
பின்னர் ஆங்கிலேயர்கள் Inam Register மூலம்
“இது மடத்துக்குச் சொந்தமான Revenue-free Religious Inam” என்று அங்கீகரித்தார்கள் சொத்து மதுரையில் இருந்தாலும் இதனை நிர்வாகம் செய்யும் மடம் மைசூரில் இருக்கிறது. 1891 ஆம் ஆண்டு
அந்த மடத்தின் மடாதிபதி ஸ்ரீநிவாசா என்ற பற்றற்ற சாமியார் தனது நெருங்கிய உறவினருக்கு இந்த மதுரை நிலத்தை
நிரந்தர குத்தகையாக (permanent lease) கொடுத்து விட்டார். லீஸ் தொகை முதன் முதலில் ஒரு முறை கொடுத்தால் போதும் அதனை புதுப்பிக்க தேவையில்லை. ஒருமுறை மட்டும் ரூ 24 பணம் பெற்றுக் கொண்டு நிரந்தரமாக குத்தகைக்கு வைத்துக் கொள்கின்ற மாதிரி நிலத்தை ஒப்படைத்து விட்டார்.
4)1902 க்கு பிறகு குத்தகை எடுத்தவர் வேறு சிலருக்கு அதில் ஒரு பகுதியை உள் குத்தகை 10 வருட காலத்திற்கு விடுகிறார். சீனிவாச மடாதிபதி குத்தகை கொடுத்த சில வருடங்களில் ஜீவ திசை அடைந்து விடுகிறார் அவருக்குப் பிறகு அடுத்த மடாதிபதி வருகிறார் அவரும் இந்த குத்தகைய ஒத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறார்.இந்த நிலையில் மைசூரில் இருக்கின்ற மட நிர்வாகம் மடாதிபதியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மைசூர் சமஸ்தானத்தின் திவான் கட்டுப்பாட்டிற்குள் 1906 ம் ஆண்டு சென்று விட்டது இந்த உள் குத்தகைதாரர்கள் நேரடியாக திவான் அவர்களை அணுகி 17 வருடம் ஒரு நேரடி குத்தகையை உருவாக்கிக் கொண்டார்கள்
5) இப்பொழுது வழக்கு மடாதிபதி மூலம் உரிமை பெற்று வந்தவர்கள் திவான் மூலம் ஒருவர் பெற்று வந்தவர்களை எதிர்த்து வழக்கு தொடுக்கிறார்கள். எங்களிடம் உள்குத்தகைய வந்து விட்டு அதன் பிறகு நேரடியாக போய் ஒரு குத்தகையை ஏற்படுத்திக் கொண்டது செல்லாது என்று கேட்டும் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கேட்டோம் வழக்கு மதுரை சப் கோர்ட்டில் நடந்தது. இதில் மடத்து நிர்வாகம் சார்பிலும் ஆஜரானார்கள் அவர்கள் முதலில் சீனிவாச சாமியார் மூலம் வந்தவர்களுக்கும் திவான் மூலம் வந்தவர்களுக்கும் உரிமை இல்லை அவர்கள் இருவரையும் வெளியேற்றுங்கள் என்று மடம் சொன்னது.
6) அதன் பிறகு வழக்கு மேல்முறையீடு HighCourt of Madras (மதராஸ் உயர்நீதிமன்றம் ) செல்கிறது அங்கு கீழ்க்கோர்ட் தீர்ப்பை மாற்றி,
Article 134 Limitation Act அடிப்படையில் முதலில் குத்தகை வந்தவருக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து மட த்து நிர்வாகம் ப்ரிவி கவுன்சிலில் லண்டனில் மேல்முறையீடு செய்தது அந்த மேல்முறையீட்டில் தான் மடாதிபதி trustee அல்ல; கோவில்/மட சொத்துக்கு Article 134 & 144 பொருந்தாது; மனுதாரர்களுக்கு உரிமை இல்லை. என்ற தீர்ப்பளித்தது அதன் விவரங்கள் பின்வருமாறு
7)ஒரு மடாதிபதி குத்தகை கொடுத்தால் தன் வாழ்நாளைத் தாண்டி குத்தகை உரிமை மற்றும் எந்த உரிமையும் உருவாக்க முடியாது.
ஸ்ரீனிவாச சாமியார் அவரது நெருங்கிய உறவினருக்கு கொடுத்த நிரந்தர குத்தகை செல்லவே செல்லாது என்றும் கடமை மீறல் (breach of duty). சொல்லியது. சாமானியனின் பார்வையில் மடாதிபதி கொடுத்துவிட்டால் சாஸ்வதமான ஒன்று என்று நம்பிக் கொண்டிருக்கிறது இந்த காலத்தில் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது
8)Valuable consideration” means real money, not nominal rent கோவில் நிலத்திற்கு ஜனாதிபதி வாங்கிய ரூ.24, போன்ற சிறிய வாடகை தொகை valuable consideration அல்ல அது ஒரு மோசடி என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டிருந்தது.
9)அவசியம் இல்லாமல் மடாதிபதி செய்த குத்தகை ஒப்பந்தம் அவர் இறந்தவுடன் இயல்பாகவே அது முடிவடைகிறது.
(Alienation without necessity is void beyond his life)
சீனிவாச மடாதிபதி இறந்த பிறகு அடுத்த புதிய மடாதிபதி வந்தவுடன் குத்தகை மீண்டும் புதுப்பிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டும் அதிலிருந்து காலக்கெடு புதியதாக உருவாகிறது அதனால் கால கணக்கு (limitation) மீண்டும் ஆரம்பிக்கிறது
10)English law வில் உள்ள trustee போல மடாதிபதியை புரிந்து கொள்ளக் கூடாது Hindu law-ல் “trust” என்ற கருத்தே இல்லை.
English law-ல் உள்ள டிரஸ்ட்டீ Hindu endowment-க்கு பொருந்தாது. ஆனால் விசாரணை செய்த கீழமை நீதிமன்றங்கள்
இந்திய மத நிறுவனங்களை ஆங்கில அறக்கட்டளை சட்டங்களோடு பார்த்திருக்கின்றன (Indian Courts borrowed English trust ideas wrongly.”) அது தவறான ஒன்று என்று மிக முக்கியமான ஒரு பார்வையை பிரிவி கவுன்சில் கொடுத்திருந்தது
11)மடாதிபதி எப்பொழுதும் மடத்து சொத்துக்களின் உரிமையாளர் அல்ல அதே போல் மடத்து சொத்துகளுக்கு ட்ரஸ்டீயும் மடாதிபதி வாழ்நாள் முழுக்க மடத்து சொத்துகளில் வாடகைக்கு இருப்பவர்தான். அவர் ஒரு சொத்துகளை காப்பாற்றி கொடுக்கின்ற அதே நேரத்தில் சொத்துக்களை பயன்படுத்தி கொள்கின்ற ஒரு மேனேஜர் (Tenant (Life tenant / Manager with beneficial enjoyment) என்றுதான் தீர்ப்பு சொல்கின்றது
12)Trust என்றால்: சொத்து ஒருவரிடம் இருந்து trust க்கு கைமாற வேண்டும் வேண்டும். அதன் பிறகு அந்த டிரஸ்ட் டிரஸ்ட் நிர்வாகம் செய்யலாம் ஆனால்:கோவில் சொத்து, மட சொத்து எல்லாம் நேரடியாக கடவுள் பெயருக்கே வந்து விட்டது. அதாவது
கடவுள் (Idol / Deity) என்பது“Juristic Person” — சட்டப்படி ஒரு நபர். அவருக்கு நேரடியாக சொத்து அரசர்களால
கொடுக்கப்பட்டிருக்கிறது. அது இன்னும் எந்தவித டிரஸ்ட் ஆகவும் மாறவில்லை. முழுக்க முழுக்க கடவுளின் தனிநபர் சொத்தாகும் கடவுள் மடாதிபதிகளுக்கு அந்த சொத்தை முழுமையாக எங்கேயும் ஒப்படைக்கவில்லை அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு மடாதிபதி தன் வாழ்நாளை தாண்டி ஒருவருக்கு உரிமையை மாற்றி கொடுப்பதற்கு எந்தவித அதிகாரமும் இல்லை அது செல்லவும் செல்லாது
13)கோவில் வருமானம்,மட சொத்து வருமானம் இவற்றில்வாழ்வதற்கும்
சீடர்களை பராமரிக்கவும்சில தொகையை பயன்படுத்தலாம்.இது தான் அவருடைய ஆயுள் பரியந்த உரிமை (“life interest”.) என்று நீதிமன்றம் மடாதிபதிகளின் அதிகாரத்தை தெளிவாக விளக்கி இருக்கிறது.இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியவர்கள்:
லார்ட் பக்மாஸ்டர் (Lord Buckmaster)
லார்ட் டனிடின் (Lord Dunedin)
லார்ட் ஷா (Lord Shaw of Dunfermline)
லார்ட் அமீர் அலி (Lord Ameer Ali) ஆகியோர்கள் ஆவார்கள். இந்தப் பிரிவி கவுன்சில் தீர்ப்பு Vidya Varuthi Thirtha v. Balusami Ayyar & OthersPrivy Council – 05 July 1921Reported in:(1921) L.R. 48 I.A. 302
AIR 1922 P.C. 123
இப்படிக்கு
சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
தொடர்புக்கு +91 86100 63410
See less

Comments
Post a Comment