தமிழகத்தில் நத்தம் நிலவரித் திட்டம் நடக்காத கிராமங்கள்!


 

தமிழகத்தில் நத்தம் நிலவரித் திட்டம் நடக்காத கிராமங்கள்!

1)தமிழக முழுவதும் நத்தம் நிலவரித் திட்டம் நில அளவை நடந்த பொழுதும் சில பகுதிகளில் சில கிராமங்களில் நத்தம் நில அளவை நடக்கவே இல்லை. அதனை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலமாக தகவல்கள் கேட்டதில் பல மாவட்டங்களில் இருந்து தகவல்கள் வந்தன ஒரு சில மாவட்டங்களில் இருந்து தகவல்கள் வரவில்லை அப்படி வந்ததிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களை இந்த கட்டுரையில் பகிர்கிறேன். அனைத்து இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பில் அண்ணன் ஹென்றி அவர்களின் வழிகாட்டுதலபடி நத்தம் நிலவரித் திட்டம் நடக்காத கிராமங்களில் நத்தம் நிலவரித் திட்டம் நடக்க வேண்டும் என்று சமீபத்தில் நடந்த மாநாட்டில் கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றினோம் அதில் இந்த தகவல்களை எல்லாம் தீர்மானமாக வைத்திருக்கிறோம்.

2)திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாவட்ட நில அளவை அலுவலகம் தொழில்நுட்ப மேலாளர் பொது தகவல் அலுவலர் என் சாந்தகுமாரி அவர்கள் த அ உ.ச மனு எண்-418/2020/ஈ 2/நாள்9.11.2022 தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது திருப்பூர் மாவட்டத்தில் 9 வருவாய் வட்டங்களில் 347 வருவாய் கிராமங்களிலும் நத்தம் சர்வே நடந்துள்ளது ஆனால் கிராம எண் 42 பழையபாளையம் கிராம எண் 54 கிருஷ்ணாபுரம் கிராம எண் 46 அரசு ஆகிய 3 கிராமங்களில் நத்தம் நில அளவை என்பது குடியிருப்பு பகுதி இல்லாத காரணத்தால் நத்தம் நிலவரித் திட்ட பணிகள் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது

3)அதேபோல் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாவட்ட நில அளவை அலுவலகம் பொது தகவல் அலுவலர் மற்றும் தொழில்நுட்ப மேலாளர் 31 10 2020 தேதியில் கொடுத்த தகவல் பெறும் உரிமை சட்டம் மனு ந. க. ஈ 2/3283/2020 என்ற கடிதத்தின் படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம் தாலுகாவில் அரக்கோணம் மற்றும் சுகாபுரம் ஆகிய கிராமங்களில் நத்தம் நிலவரித் திட்டம் நடக்கவில்லை அதேபோல் ஆற்காடு வட்டத்தில் ஆற்காடு மணப்பாக்கம் தென் பொன்னம்பலம் ஆகிய கிராமங்களில் நத்தம் நிலவரித் திட்டம் நடக்கவில்லை அதேபோல் வாலாஜா வட்டத்தில் வாலாஜாபேட்டை நவலாக் தோட்டம், பிஞ்சி காட்டேரி ஆகிய கிராமங்களில் நத்தம் நிலவரித் திட்டம் நடக்கவில்லை

4)மேலும் வேலூர் வட்டத்தில் வேலூர் வடக்கு வேலூர் தெற்கு காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் ஆகிய கிராமங்களில் நத்தம் நிலவரி திட்டம் நடக்கவில்லை பேரணாம்பட்டு தாலுகாவில் வாசனாம்பல்லி கிராமத்திலும் குடியாத்தம் தாலுகாவில் குடியாத்தம் நகரத்திலும் நத்தம் நிலவரித் திட்டம் நடக்கவில்லை

5)அதேபோல் ஆம்பூர் தாலுகாவில் ஆம்பூர் நகரம் சானாங்குப்பம் மேல் கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில் நத்தம் நிலவரித் திட்டம் நடக்கவில்லை வாணியம்பாடி தாலுகாவில் கொடுகுமணி பட்டடை வாணியம்பாடி நகரம் ஆகிய கிராமத்தில் நத்தம் நிலவரித் திட்டம் நடக்கவில்லை நெமிலி தாலுகாவில் உள்ள 77 கிராமங்களும் மொத்தமும் சர்வே செய்யப்பட்டு விட்டது அணைக்கட்டு தாலுகாவில் 61 கிராமங்கள் முழுவதும் நத்தம் சர்வே செய்யப்பட்டு விட்டது. திருப்பத்தூரில் உள்ள 62 கிராமங்கள் மற்றும் நாட்றம்பள்ளி தாலுகாவில் உள்ள 30 தாலுகாக்கள் என அனைத்துமே ஒரு கிராமம் விடாமல் நத்தம் நிலவரித் திட்டம் நடந்து விட்டது

6)ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை பொருத்தவரை நத்தம் நில அளவைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கிராமங்களில் 222 என்றால் அது 19 கிராமங்கள் நத்தம் நில அளவை நடக்காமல் இருக்கிறது என்று தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

7)ஒருங்கிணைந்த திருநெல்வேலி தென்காசி மாவட்டத்தில் 29 10 2020 ஆம் தேதி தகவல் பெறும் உரிமை சட்ட மனு 192 மற்றும் 193/ 2020 என்ற மனுவிற்கு பொதுத் தகவல் அலுவலர் மற்றும் தொழில்நுட்ப மேலாளர் மாவட்ட நில அளவை அலுவலகம் திருநெல்வேலி மாவட்டத்தில் பெ.கணேசன் அவர்கள் கொடுத்த தகவலின் படி திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி வட்டத்தில் 1) துவரசி 2) ராமலிங்கனேரி 3) மேகமுடையார் குளம் 4) உதயநேரி 5) சிவகுருநாதன் திரட்டு 6) கரை இருப்பு 7) சேர்ந்து மங்கலம் 😎 பிரையன் குளம் 9) அழக நேரி, 10) திருநெல்வேலி 11) தச்சநல்லூர் 12) மேல் வீரராகவபுரம் 13) தென்பத்து 14) நரசிங்கநல்லூர்15) வைகை குளம் 16) கருவேலன் குளம் 17) மணி மூர்த்தி சரம் 18) சிந்து பூந்துறை19) பேட்டை20 சமூக ரங்கையன் கட்டளை 21) கண்டியா பேரி 22) பிள்ளையான் கட்டளை 23) சத்திரம் புது குளம் ஆகிய 23 கிராமங்களில் நத்தம் நிலவரித் திட்ட நில அளவை நடக்கவில்லை என்று பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது

8)அதேபோல் பாளையங்கோட்டை தாலுகாவில் 1)கங்கை ஆண்டர்குளம் 2)பாளையங்கோட்டை3) மேலப்பாளையம் 4)குலவணிகர்புரம் 5)கீழ வீரராகவபுரம் 6)விஜயராகவ முதலியார் சத்திரம் 7)ராஜகோபாலபுரம் 8)சிவனடியார் குளம் 9)பனையன்குளம் 10) நடுக்காமுடையார் 11)வெங்கழுநீர் சமுத்திரம் 12) கொக்காட்டி குளம் 13) மேலநத்தம் 14) கருப்பன் துறை15) விலாசம் 16) திருவனந்தபுரம்17) திம்மராஜபுரம்18) வெள்ளகோவில் ஆகிய கிராமங்களில் நத்தம் நிலவரித் திட்டம் நடைபெறவில்லை
அம்பாசமுத்திரம் தாலுகாவில் ஈசான மடம் மனார் மங்கலம் ஆகிய இரு கிராமங்களிலும் நத்தம் நிலவரித் திட்டம் நடைபெறவில்லை சேரன்மாதேவி தாலுகாவில் வீற்றிருந்தான் குளம் உமயம்மாள் புரம் ஆகிய இரு கிராமங்களிலும் நத்தம் நிலவரித் திட்டம் நடைபெறவில்லை ராதாபுரம் தாலுகாவில் சடையனேரி என்ற கிராமத்தில் நத்தம் நிலவரித் திட்டம் நடைபெறவில்லை தென்காசி தாலுகாவில் மின்னடிச்சேரி மேல கடையம் தென்காசி புலியூர் ஆகிய கிராமங்களில் நத்தம் நிலவரித் திட்டம் நடைபெறவில்லை ஆலங்குளம் தாலுகாவில் காசிக்கு வைத்தான் கிராமத்தில் நத்தம் நிலவரித் திட்டம் நடைபெறவில்லை செங்கோட்டை தாலுகாவில் செங்கோட்டை 1)இலத்தூர் 2)மேக்கரை 3)குன்னக்குடி 4)நாகல்காடு 5)புதூர் 6)புளியரை 7)கார்க்குடி ஆகிய கிராமங்களில் நத்தம் நிலவரித் திட்டம் நடைபெறவில்லை, சங்கரன்கோவில் தாலுகாவில் சங்கரன்கோவிலும் திருவேங்கடம் தாலுகாவில் சுப்பையாபுரம் எ மதுராபுறை ஆகிய கிராமங்களில் நத்தம் நிலவரித் திட்டம் நடைபெறவில்லை கடையநல்லூர் தாலுகாவில் 1) கிழான் காடு 2) ஆய்க்குடி 3) சாம்பவர் வடகரை4) அச்சன் புதூர் 5) சிந்தாமணி6) புளியங்குடி7) மேல புளியங்குடி 😎 திருமலை நாயக்கன் புதுக்குடி 9) வைரவன் குலம் 10) கிருஷ்ணாபுரம் 11) கடையநல்லூர் ஆகிய கிராமங்களில் நத்தம் நிலவரித் திட்டம் நடைபெறவில்லை

9)அதேபோல் மானுர், நாங்குநேரி, திசையன்விளை வீரகேரளம் புதூர், சிவகிரி ஆகிய தாலுகாக்களில் அனைத்து கிராமங்களுக்கும் நத்தம் நிலவரித் திட்டம் நடைபெற்று விட்டது என்று தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது

10)உதகமண்டலம் மாவட்டத்தில் பொது தகவல் அலுவலரும் தலைமை வரவையாளர் மாவட்ட நில அளவை அலுவலகம் உதகமண்டலம் அவர்கள் 22 11 2020 ஆம் தேதியில் ந.க. எண் 1/3760/2020 என்ற கடிதத்தில் நீலகிரி மாவட்டத்தில் 1)நந்திபுரம் 2)கடின மலை 3)நிலாக்கோட்டை4) முதுமலை 5) ஓவலி ஆகிய ஐந்து கிராமங்களில் நத்தம் நிலவரித் திட்டம் நடக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்

11)திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொது தகவல் அலுவலரும் ஆய்வாளர் நில அளவை பதிவேடுகள் துறை திருச்சிராப்பள்ளி என்பவர் கொடுத்த த அ உ.ச மனு எண் 252/2020 07.01.2021 தேதி இட்ட கடிதத்தில்
1. வெங்கடாசலபுரம் வடக்கு2. ஆவாரவல்லி
3. சங்கம்பட்டி கோம்பை | 4. சங்கம்பட்டி கோம்பை ||5. காரப்புடையான்பட்டி
6.கோட்டப்பாளையம் மேற்கு
7. புளியஞ்சோலை கோம்பை
8. பொங்கலாய கோம்பை9. தாராநல்லூர்
10. தேவதானம்11. சிந்தாமணி
12. தாமலவாருபயம்13. திருச்சிராப்பள்ளி டவுன்14. வரகனேரி15. கொட்டப்பட்டு
16. செங்குளம்17.மேலூர்
18. வெள்ளித்திருமுத்தம்19. ஜம்புகேஸ்வரம்
20. செவலூர்21. கொண்டயம் பேட்டை
22. திம்மராயசமுத்திரம் ஆகிய 22 கிராமங்கள் சர்வே செய்யப்படவில்லை என்றும் மொத்த கிராமங்கள் 502 அதில் 480 கிராமங்கள் சர்வீஸ் செய்யப்பட்டு விட்டது என்றும் தகவல்கள் கொடுத்து இருக்கிறார்கள்

12)கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகாவில்
1)ஹளேகிருஷ்ணாபுரம் 2)பிச்சுகொண்டப்பள்ளி 3)குள்ளம்பட்டி
4)படதாசம்பட்டி5)தாதிநாயக்கன்பட்டி 6)தாசம்பட்டி 7)பாப்பிசெட்டிப்பட்டி 8)கழுதைப்பட்டி 9)பச்சனம்பட்டி 10)வண்ணான்பட்டி 11)காட்டனூர்
12)சொரக்காப்பட்டி 13)வேலம்பட்டி
14)காட்டுசிங்கிரிப்பட்டி15)ஊமைகவுண்டன்பட்டி,16கிட்டம்பட்டி 17) மன்னாடிபட்டி 18) பொன்னகர பட்டி ஆகிய கிராமங்கள் நத்தம் நிலவரித் திட்டத்தில் சர்வே செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

13(அதேபோல் ஊத்தங்கரை தாலுகாவில் 1)தாதனூர் 2)தண்ணீர்பந்தல்
3)பூர்சம்பட்டி 4)முருங்கிப்பட்டி 5)பூவம்பட்டி
6)ஆண்டிப்பட்டி 7) கல்லூகானூர்
9)குருபரவலசை10) ரெண்டாத்தம்பட்டி 11)கெடகாரனூர் 12)குங்கிலிப்பட்டி
13)புதூர் 14)கொல்லனூர் 15)தீர்த்தகிரிவலசை
16)புளியம்பட்டி 17) புங்கணி ஆகிய கிராமங்களில் நத்தம் நிலவரித் திட்டம் நடக்கவில்லை

14)மேலும் சூளகிரி தாலுகாவில்
1)கரிகாலுப்பள்ளி 2) முத்துராயன்புதூர்
3)சுப்பகிரி 4)அகரம் 5)அக்ரஹாரம்
6)போடூர் 7) சூளகிரி 😎 9)புக்கநாயக்கனப்பள்ளி
10)|சின்னபாலி நாயனப்பள்ளி
11)தொட்டூர் 12)குண்டலப்பள்ளி
13)மல்லன்கொத்தூர்
14)மேட்டுபந்தனப்பள்ளி 15)குடுசால பள்ளி 16) பொப்ளாபுரம் 17)இடிப்பள்ளி 18)பிச்சுகொண்டப்பள்ளி
19)கதிரிகானதின்னா
20ஜோதிகலசாமனப்பள்ளி
21)ஒட்டப்பள்ளி தின்னா ஆகிய கிராமங்கள் நத்தம் நிலவரி கிட்ட சர்வே செய்யப்படவில்லை

15)அதேபோல் ஓசூர் தாலுகாவில்1) கள்ளி அக்ரஹாரம்,2) அட்டூ,ர் 3)நஞ்சாபுரம்
4)கள்ளிபுரம் 5)அனுமேப்பள்ளி
6)கரிபாசனபுரம் 7)ரங்கோபண்டிதஅக்ரஹாரம் ஆகிய கிராமங்களும் நத்தம் நிலவரித் திட்ட சர்வே செய்யப்படவில்லை தேன்கனிக்கோட்டை தாலுகாவில்சங்கீத அக்ரஹாரம் நாகப்பன் அக்ரஹாரம் ஆகிய இரு கிராமங்களிலும் நத்தம் நிலவரித் திட்ட சர்வே செய்யப்படவில்லை.

16)சிவகங்கை மாவட்டத்தை பொருத்தவரை சிவகங்கை மாவட்ட நில அளவை அலுவலகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மனு எண் ஆ3/3452/2020, தேதி 9. 11.2020 தேதியில் கிடைக்கப்பெற்ற தகவலின் படி சிவகங்கை தாலுகாவில் திராணிவேந்தல் கிராமத்திலும் காளையார் கோவில் தாலுகாவில் பிரண்டை குளம் கிராமத்திலும் இளையான்குடி தாலுகாவில் மேல பிடாரி சேரி கிராமத்திலும் மானாமதுரை தாலுகாவில் காட்டுற அணி கிராமத்திலும் நத்தம் நில அளவை நடக்கவில்லை

17)நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் மாவட்ட நில அளவை பதிவு அலுவலகத்தின் பொதுத்த தகவல் அலுவலர் என்றும் ஆய்வாளர் த.அ. உ ச ம எண் 48/2020 உ (3) நாள் 2020 17 11 2020 ஆம் தேதி கொடுத்த தகவலின் பேரில் ராசிபுரம் தாலுகாவில்
1.33.பச்சாகவுண்டம்பாளையம்
2.74.அண்ணாமலைப்பட்டி
3.88.சின்னக்காபாளையம்
4. 97.மூலக்காடு ஆகிய நான்கு கிராமங்களும் நாமக்கல் தாலுகாவில்
1. 8.தத்தாத்ரிபுரம் கரடிப்பட்டி
2. 9.கரடிப்பட்டி தானத்தம்பட்டி
3. 22.ஜக்கல்நாயக்கன்பட்டி ஆகிய மூன்று கிராமங்களும்
சேந்தமங்கலம் தாலுகாவில்
1. 73.கெஜகோம்பை
2. 98.சிங்களக்கோம்பை
3.106.தோட்டமுடையாம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களும்
பரமத்திவேலூர் தாலுகாவில்
1.7.கோதூர்அக்ரஹாரம் என்ற ஒரு கிராமத்திலும்
கொல்லிமலை தாலுகாவில்
1.1.பெரக்கரைநாடு
2.2.பைல்நாடு
3.3.சித்தூர்நாடு
4. 4.எடப்புளிநாடு
5. 5.திருப்புளிநாடு
6. 6.பெலாப்பாடிநாடு
7. 7.ஆலத்தூர்நாடு
8. 8.அடக்கம்புதுக்கோம்பை
9.9.குண்டுனிநாடு
10.10.குண்டூர்நாடு
11.11.வழப்பூர்நாடு
12.12.ஆரியூர்நாடு
13.13.வாழவந்திநாடு
14.14.தின்னனூர்நாடு
15.15.தேவனூர்நாடு
16.16.சேனூர்நாடு ஆகிய 16 கிராமங்களிலும் நத்தம் நிலவரித் திட்டம் நடக்கவில்லை

18)தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட நில அளவை அலுவலகத்தில் பொது தகவல் அலுவலரும் தொழில்நுட்ப மேலாளருமான திரு பிரசாத் குமரன் அவர்கள் மூ மு அ 1/ த அ உ ச மனு 91/20 -6(3) நாள் 3 11 2020 என்ற தேதியில் கொடுத்த தகவலின் படி விளாத்திகுளம் வட்டத்தில் குமார சக்கனாபுரம் சுப்ரமணியபுரம் சிவபெருங்குன்றம் கிராமத்திலும் கோவில்பட்டி வட்டத்தில் உட் கிராமம் மூப்பன்பட்டி கிராமத்திலும், எட்டயபுரம் தாலுகாவில் ரண சூர எட்டு நாயக்கம்பட்டி, கயத்தாறு கிராமத்தில் கோவிந்தபட்டி கிராமத்திலும் சாத்தான்குளம் வட்டத்தில் சித்தி இருப்பு கிராமத்திலும் திருச்செந்தூர் வட்டத்தில் காயல்பட்டினம் வடக்கு மற்றும் நந்தகுளம் ஆகிய கிராமத்தில் நத்தம் நிலவரித் திட்ட பணிகள் நடக்கவில்லை

19)சேலம் மாவட்டத்தில் சேலம் மாவட்ட நில அளவை அலுவலகத்தில் ஆய்வாளரும் பொது தகவல் அலுவலருமான டி ராஜா அவர்கள் ந. க. த. அ. உ. ச. எண் 85/2020(A3) நாள் 7 11 2020 என்ற தேவையற்ற கடிதத்தின் படி சேலம் மாவட்டத்தில் நத்தம் நிலவரித் திட்டம் அனைத்து கிராமங்களிலும் நடந்திருக்கிறது நடக்காத கிராமங்கள் எதுவுமில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது அதேபோல் கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை தொழில்நுட்ப மேலாளர் மற்றும் பொது தகவல் அலுவலர் ( தகவல் பெற உரிமை சட்டம் மனு ஈ 2,/4222/2020( ம. எ. 33/20 நாள். 06.11.2020 ) என்ற கடிதம் மூலம்கொடுத்த தகவலின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களில் 834 கிராமங்களும் நத்தம் நிலவரித் திட்டம் செய்யப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

20)திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை மற்றும் பொது தகவல் அலுவலர் மகேஸ்வரி அவர்கள் 28 10 2020 ஆம் தேதி ந. க. இ 1/ 23 74/ 2020 என்ற கடிதத்தின் படி திருவள்ளூர் மாவட்டத்தில் நத்தம் நிலவரித் திட்டம் நடக்காத கிராமங்கள் ஏதுமில்லை என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது

21)அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட நில அளவை அலுவலகத்தில் தொழில்நுட்ப மேலாளரும் பொது தகவல் அலுவலருமான திரு கனகராஜ் அப்பன் அவர்கள் த.அ. உ.ச. எண் 9/ 142 / 2020 தேதி 14 10 2020 கொடுத்த கடிதம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நத்தம் நிலவரித் திட்டம் நடக்காத வருவாய் கிராமங்கள் ஏதுமில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

22)மேலும் அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட நில அளவை அலுவலகம் தலைமை வரவைவாளர் மற்றும் பொது தகவல் அலுவலர் திருசா நடராஜன் அவர்கள் கொடுத்த ந. க. ஆ 1 த. அ. உ. ச. மனு 85/2020 /20 11 2020 என்ற கடிதத்தின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் நத்தம் நிலவரித் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களும் நில அளவை செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

23)இன்னும் சில மாவட்டங்களில் தகவல்களை கேட்டிருந்த பொழுது அவர்கள் அந்தந்த பகுதி வட்டாட்சியர்களுக்கு தகவல் பெறும் உரிமை சட்டம் 6(3) கீழ் முன் அனுப்பி விட்டிருந்தார்கள் அதன்படி விருதுநகர் மாவட்ட திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் அவர்களின் த அ உ ச ந. க. எண் அ 2/4413/2020 நாள் 25.11.2020 என்ற தேதியிட்ட கடிதத்தின் படி விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டத்திற்குட்பட்ட 150 வருவாய் கிராமங்களிலும் அடியில் கண்ட அட்டவணைப்படி தகவல்களை கொடுத்திருக்கிறார்கள் அதில் சர்வே செய்த கிராமங்களின் விவரமும் அதில் எந்தப் புல எண்ணில் சர்வே செய்யப்பட்டு இருக்கிறது எந்த புல எண் நத்தம் சர்வேயில் விடுபட்டு போயிருக்கிறது என்பதை பட்டியலாக கொடுத்திருக்கிறார்கள்

( அட்டவணை வரவேண்டும் )

24)அதேபோல் கள்ளக்குறிச்சி தாலுகாவில் தலைமை இடத்து துணை வட்டாட்சியரும் பொது தகவல் அலுவலரர் தகவல் பெறும் உரிமை சட்டம் 2005/ சி ப. 317/2020 நாள்09.11.2020 என்ற கடிதத்தின் படி கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள 93 கிராமங்களில் குரூர்( வடக்கு )கிராமம் தவிர்த்து 92 கிராமங்களில் நத்தம் நிலவரி திட்டம் நடைபெற்றுள்ளது என்று தகவல் கொடுத்திருக்கிறார்கள்

25)அதேபோல் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் மற்றும் பொது தகவல் அலுவலரின் தா அ உ.ச. ம. எண் 83/2020 நாள்28.10.2020 தேவையிட்ட கடிதத்தின் படி கண்டாச்சிபுரம் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நத்தம் நிலவரித் திட்டம் நடைபெற்றுள்ளன என்ற தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது

26)அதேபோல் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் மற்றும் பொது தகவல் அலுவலர் அவர்களின் கடித எண் ந. க. அ 3/4117/2020 என்ற கடிதத்தின்படி ஆலத்தூர் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் நத்தம் நிலவுத் திட்ட நடக்காத கிராமங்களே இல்லை என்ற தகவல் கொடுக்கப்படுகிறது

27)விருதுநகர் மாவட்டம் விருதுநகர் வட்டம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமை இடத்து துணை வட்டாட்சியரும் பொது தகவல் அலுவலர் அவர்கள் கொடுத்த த. அ உ ச 142/20 ந. க. டி 2/5761/2020 நாள் 30.11.2020 என்ற கடிதத்தின் படி விருதுநகர் வட்டத்தில் கலங்கா பேரி பாச்சா குளம் மற்றும் செட்டியபட்டி கிராமங்களை தவிர மற்ற அனைத்து வருவாய் கிராமங்களிலும் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் சர்வீஸ் செய்யப்பட்டு இருக்கிறது என்ற தகவலை கொடுத்திருக்கிறார்கள்

28)பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தலைமை இடத்து துணை வட்டாட்சியர் மற்றும் பொது தகவல் அலுவலர் கொடுத்த ப. மு. அ 4/6141/2020 நாள் 12.11.2020 என்ற கடிதத்தின் படி வேப்பந்தட்டை தாலுக்கா பூலாம்பாடி மேற்கு பசும்பலூர் வடக்கு ஆகிய இரண்டு கிராமங்களில் மட்டும் நத்தம் நில அளவை பணி நடைபெறவில்லை என்ற தகவலை கொடுத்திருக்கிறார்கள்

29)உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் மற்றும் பொது தகவல் அலுவல
ர் கொடுத்த ந. க எண் 1/8207/2020 நாள் 24.11.2020 என்ற கடிதத்தின் படி உத்தமபாளையம் வட்டத்தை நத்தம் நிலவரி திட்டம் நடக்காத கிராமங்களே இல்லை என்று தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது அதேபோல் பெரியகுளம் வட்டம் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் மற்றும் பொது தகவல் அலுவலர் அவர்கள் கொடுத்த ந. க எண் 5433/2020/எஸ் 1 நாள் 9/11/2020 என்ற தேதியிட்ட கடிதத்தின் படி பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நத்தம் நிலவரித் திட்டம் நடக்காத கிராமங்களை இல்லை என்ற தகவல் தரப்பட்டிருக்கிறது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் மற்றும் பொது தகவல் அலுவலர் கொடுத்த ந. க. எண் 1/6703/2020/S1 நாள் 28.11.2020 என்ற கடிதத்தின் படி ஆண்டிப்பட்டி வட்டத்தில் நத்தம் நிலவரித் திட்ட பணி மேற்கொள்ளாத கிராமங்கள் ஏதுமில்லை என்ற தகவல் கொடுத்திருக்கிறார்கள் மேலும் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட துணை ஆய்வாளரும் பொது தகவல் அலுவலர் கொடுத்த கடிதத்தில் மூ. மு எண் 4020/2020/எஸ் நாள் 23 11 2020 என்ற கடிதத்தின் படி போடிநாயக்கனூர் வட்டத்தில் உள்ள 14 கிராமங்களிலும் நத்தம் நிலவரித் திட்டம் நடைபெற்று இருக்கிறது என்ற தகவலை கொடுத்திருக்கிறார்கள்

30)நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்ட நில அளவை அலுவலகம் பொது தகவல் அலுவலரும் உதவி இயக்குனர் நில அளவு பதிவிடுங்கள் துறை அவர்கள் கொடுத்த ந. க. 4290/2020/இ 2 நாள் 19.12.2020 கடிதத்தின் படி 1988 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நத்தம் நில அளவை பணி நடைபெற்றுள்ளது என்று தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது
இந்த கடிதங்கள் எல்லாம் அடுத்து வருகின்ற புத்தகத்தில் இணைக்க விருக்கின்றேன்.

இப்படிக்கு

சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர் காலம் மக்கள்
நல அறக்கட்டளை
தொடர்புக்கு +91 86100 63410
See less

Comments