Posts

Showing posts from January 16, 2026

பூமிதான நிலங்களும் என்னுடைய கள அனுபவ புரிதலும் இன்றைய நிலவரமும்!

Image
  பூமிதான நிலங்களும் என்னுடைய கள அனுபவ புரிதலும் இன்றைய நிலவரமும்! 1.காந்தி்ஜியின் சீடரும் மிகச்சிறந்த காந்திய தலைவரும் ஆன திரு.ஆச்சார்ய வினோபாவே என்ற உயர்ந்த மனிதனின் சிந்தனையில் அனைவருக்கும் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் நோக்கத்தில் தோன்றிய இயக்கம்தான் பூமிதான இயக்கம்.. 2.நிலமற்றவர்களுக்கு நிலமுள்ள பண்ணையார்கள், ஜமீன்கள், நிலகிழார்கள் நிலத்தை தானமாக இந்த இயக்கத்திற்கு கொடுப்பார்கள். அல்லது பூமிதான இயக்கத்தினர் கேட்டு பெறுவார்கள். 3.அந்த நிலங்களை அங்கு இருக்கும் நிலமற்ற ஏழைகள் &கூலிகளுக்கு பிரித்து கொடுப்பார்கள் பூமி தான இயக்கத்தினர். 4.அதன்படி தமிழகத்தில் திரு.வினோபாவே அவர்கள் 1956 களில் ஓராண்டுக்கு தமிழகம் முழுவதும் நடைபயணம் செய்து பூமி தானங்களை நிலகிழார்களிடம் இருந்து பெற்றார். அப்படி பெற்ற நிலங்கள் தமிழகம் முழுவதும் பல ஆயிர கணக்கான ஏக்கர்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கபட்டு இருக்கிறது. 5.கொஞ்ச நிலங்கள் பகிர்தளிக்க படாமல் பூமி தான போர்டு கிட்டயே உள்ளது.கொஞ்ச நிலங்கள் அந்தந்த பகுதியில் சட்ட சிக்கல்கள் சட்ட குழப்பங்களால் பூமி தான இயக்கத்தாலேயே இன்னும் கையகப்படு...

தமிழகத்தில் நத்தம் நிலவரித் திட்டம் நடக்காத கிராமங்கள்!

Image
  தமிழகத்தில் நத்தம் நிலவரித் திட்டம் நடக்காத கிராமங்கள்! 1)தமிழக முழுவதும் நத்தம் நிலவரித் திட்டம் நில அளவை நடந்த பொழுதும் சில பகுதிகளில் சில கிராமங்களில் நத்தம் நில அளவை நடக்கவே இல்லை. அதனை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலமாக தகவல்கள் கேட்டதில் பல மாவட்டங்களில் இருந்து தகவல்கள் வந்தன ஒரு சில மாவட்டங்களில் இருந்து தகவல்கள் வரவில்லை அப்படி வந்ததிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களை இந்த கட்டுரையில் பகிர்கிறேன். அனைத்து இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பில் அண்ணன் ஹென்றி அவர்களின் வழிகாட்டுதலபடி நத்தம் நிலவரித் திட்டம் நடக்காத கிராமங்களில் நத்தம் நிலவரித் திட்டம் நடக்க வேண்டும் என்று சமீபத்தில் நடந்த மாநாட்டில் கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றினோம் அதில் இந்த தகவல்களை எல்லாம் தீர்மானமாக வைத்திருக்கிறோம். 2)திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாவட்ட நில அளவை அலுவலகம் தொழில்நுட்ப மேலாளர் பொது தகவல் அலுவலர் என் சாந்தகுமாரி அவர்கள் த அ உ.ச மனு எண்-418/2020/ஈ 2/நாள்9.11.2022 தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது திருப்பூர் மாவட்டத்தில் 9 வருவாய் வட்டங்களில் 347 வருவாய் கிராமங்களிலும்...