பூமிதான நிலங்களும் என்னுடைய கள அனுபவ புரிதலும் இன்றைய நிலவரமும்!
- Get link
- X
- Other Apps

1.காந்தி்ஜியின் சீடரும் மிகச்சிறந்த காந்திய தலைவரும் ஆன திரு.ஆச்சார்ய வினோபாவே என்ற உயர்ந்த மனிதனின் சிந்தனையில் அனைவருக்கும் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் நோக்கத்தில் தோன்றிய இயக்கம்தான் பூமிதான இயக்கம்..
2.நிலமற்றவர்களுக்கு நிலமுள்ள பண்ணையார்கள், ஜமீன்கள், நிலகிழார்கள் நிலத்தை தானமாக இந்த இயக்கத்திற்கு கொடுப்பார்கள். அல்லது பூமிதான இயக்கத்தினர் கேட்டு பெறுவார்கள்.
3.அந்த நிலங்களை அங்கு இருக்கும் நிலமற்ற ஏழைகள் &கூலிகளுக்கு பிரித்து கொடுப்பார்கள் பூமி தான இயக்கத்தினர்.
4.அதன்படி தமிழகத்தில் திரு.வினோபாவே அவர்கள் 1956 களில் ஓராண்டுக்கு தமிழகம் முழுவதும் நடைபயணம் செய்து பூமி தானங்களை நிலகிழார்களிடம் இருந்து பெற்றார்.
அப்படி பெற்ற நிலங்கள் தமிழகம் முழுவதும் பல ஆயிர கணக்கான ஏக்கர்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கபட்டு இருக்கிறது.
5.கொஞ்ச நிலங்கள் பகிர்தளிக்க படாமல் பூமி தான போர்டு கிட்டயே உள்ளது.கொஞ்ச நிலங்கள் அந்தந்த பகுதியில் சட்ட சிக்கல்கள் சட்ட குழப்பங்களால் பூமி தான இயக்கத்தாலேயே இன்னும் கையகப்படுத்த படாமல் இருக்கிறது.
6.பூமி தான நிலங்களை அந்த அந்த பகுதிகளில் தீரவிசாரித்தாலே மக்கள் அடையாளம் காட்டுவார்கள் அல்லது மேனுவல் கால ஈ.சி பார்க்கும்போது பூமிதான போர்டுக்கு நிலங்களை தான பாத்திரம் எழுதி கொடுத்த Entry அதில் காட்டபட்டு இருக்கும்.
7.பூமி தான
போர்டு பெயரில் பட்டா,சிட்டா ஆகியவை மாறிவிட்டு இருந்தால் கிராம நிர்வாக அலுவலக அ- பதிவேடு பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
8.பூமிதான நிலங்களை நிர்வகிக்க பூமிதான போர்டு என்ற அமைப்பு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.பூமிதானபோர்டுக்கு நிலகிழார்கள் தானம் கொடுத்து அது கிரயபத்திரம் ஆகி போர்டு பெயருக்கு தனிபட்டா ஆனதும் மேற்படி நிலங்களை நில மற்றஏழைகளுக்கு பகிர்ந்து கொடுப்பார்கள்.
9.நிலங்களை பெரும் ஏழை பயனாளிகள் அனைத்து வகை சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருந்தார்கள்.பூமிதான நிலங்கள் ஒடுக்கபட்ட Sc St மக்களுக்கு தான் கொடுக்கப்பட்டது என்பது தவறான கருத்து.
10.Sc/St மக்களுக்கு கொடுக்கப்பட்டது DC நிலம் (அ) பஞ்சமி நிலம் என்பர். பஞ்சமி நிலத்துக்கும் பூமிதான நிலத்துக்கும் நிறைய வித்தாயாசங்கள் இருக்கின்றன.
11.பூமி தான நிலத்தை பெற்ற பயனாளிகள் மேற்படி இடத்தை அடமனம் ,விற்பனை,தானம்,ஒத்தி போன்ற எந்த வித பாராதீனமுமம் வில்லங்கமும் செய்ய கூடாது.
12.தொடர்ந்து சில ஆண்டுகள் பூமி தானம் பெற்ற பயனாளிகள் நிலங்களை உழாமல் அனுபவிக்காமல் இருந்தால் அதனை பூமிதானபோர்டு மீண்டும் கையகப்படுத்தி வேறு பயனாளிகளுக்கு கொடுக்கும்.
13.பூமி தான நிலங்களின் பட்டா பூமி தானம் பெற்ற பயனாளிகளின் பெயரில் இருக்காது.எப்பொழுதும் பூமிதான நிலத்தின் ரெவின்யூ ன்யூ பட்டா பூமிதான
போர்டு பெயரில் தான் இருக்கும்.
14.கோவில் நிலங்கள் போல காலெமெல்லாம் அனுபவித்து கொள்ளலாம். பட்டா எப்பொழுதும் கோவில் பெயரில் இருப்பதை போல பூமிதான போர்டு பெயரில் இருக்கும்.
15.மேற்படி பூமிதான போர்டு பெயரில் இருக்கும் பட்டாவிற்கு வருவாய் நில தீர்வையை ஆண்டு தோறும் பூமிதானம் பெற்ற பயனாளிகள்தான் செலுத்த வேண்டும்.
16.பூமிதானம் பெற்றவரின் வாரிசுகள் மேற்படி நிலத்தை வாரிசுஉரிமையில் அனுபவ உரிமையை பெறலாம்..ஆனால் தங்கள் பெயரை பூமிதான போர்டு ஆவணங்களில் சேர்க்க மனு செயது சேர்த்துகொள்ளலாம்.
17.பூமிதான நிலங்களில் சட்டசிக்கல்களும் குழப்பங்களும் எப்படி உருவாகின்றது என்று புரிந்து கொண்டாலே இன்றைய இளம் தலைமுறையினர் பூமிதான நில சிக்கல்களில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
18.பல ஊர்களில் வினோபாவே வரும் போது ஆர்வ கோளாறுகளில் பூமிதானம் கொடுத்தவர்கள் இருக்கிறார்கள்.நிலக்கிழார்களுக்கு ஏற்கனவே சிக்கல்கள் நிலங்கள்,பாகபிரிவினை வாரிசுரிமை சண்டை நடக்கும் நிலங்களை பூமி தான போர்டு பெயரில் தானம் கொடுத்து கிரயம் பாத்திரம் போட்டு விடுவர்.
19.அவை நீதிமன்றங்களில் வழக்குகள் ஆகி பூமிதான போர்டு கையகப்படுத்தால் பட்டா பெயர் மாற்றமால் நிலுவையிலேயே வைத்து இருக்கும்.
20.பூமி தான போர்டுக்கு தானம் கொடுப்பவர் கிரயப்பத்திரம் போட்டு விடுவார்கள்.ஆனால் அவர்கள் அனுபவத்தை ஒப்படைக்காமல் இருந்துவிடுவார்.மேடையில் எல்லார் முன்னிலையில் தானம் கொடுத்துவிட்டு பிறகு திரும்ப பெறும் நிலைக்கு தங்கள் வாரிசுளால் உந்தபட்டு வழக்கு போட்வர்களும் இருக்கிறார்கள்.
21.ஒரு சில இடத்தில பூமிதான போர்டு பெயரில கிரய் பத்திரம் ஆகி இருக்கும்.ஆனால் பட்டா பெயர் மற்றம் செய்யாமல் இருந்துவிடுவார்கள்.மேற்படி பட்டா போர்டுக்கு தானம் கொடுத்தவர் பெயரிலேயே நின்றுவிடும்.அதனை வைத்து உயில், தானம், செட்ல்மெண்ட், கிரயம் போன்ற பத்திரங்களை பத்திர அலுவலகத்தில் வைத்து சட்ட ரீதியான ஆவணங்களை உருவாக்கி இரட்டை ஆவண குழப்டிகள் உருவாக்கி வைத்து இருப்பர்.
22.மேனுவல் ஈ.சி. காலத்தில் ஈ.சி.யில் பூமிதான கிரய பத்திரம் நடந்து இருக்கும்.அதனை சோதிக்காமல் கணிணி கால ஈ.சி மட்டும் பார்த்துவிட்டு மேற்படி நிலங்களுக்கு ரெவின்யூபட்டா தனி நபர் பெயரில் இருக்கிற தெம்பில் வாங்கிவிடுவர்.
23.அதாவது பூமீதான போர்டுக்கு தானம் அளிக்கப்பட்டு முழுமையாக போர்டு கை பற்றுதலிலும் ஆவணங்களிலும் மாறாமல் இருக்கும் இடங்களில் தான் அப்பாவி மக்கள் தவறுதலாக சொத்தை வாங்கிவிட்டு தவிக்கின்றனர்.
24.எனவே பூமிதான நிலங்கள் அருகில் இருக்கிறது அல்லது பூமிதான நிலமா என்ற சந்தேகம் வந்தாலே நன்றாக ஆவண ஆய்வு கள ஆய்வு செய்து முடிவு எடுங்கள்.
25.பூமிதான போர்டுக்கு நிலகிழார் நிலங்கள் தானம் கொடுக்கும்பொழுது போர்டுக்கு பத்திர அலுவலகத்தில் கிரயம் எழுதி கொடுப்பர்.அதனால் அந்த பரிமாற்றம் ஈ.சி.யில் வரும். அதுவே போர்டு ஏழை பயனாளிக்கு நிலத்தை வழங்கும்போது எந்த தான கிரய பத்திரங்கள் சார்பதிவகத்தில் பதியாது..அதனால் மேற்படி பரிமாற்றம் ஈ.சி.யில் வராது.
26.பூமி தான நிலங்களை ஏழை பயனாளிக்கு ஒப்படைக்கும் போது காந்தி-வினோபாவே போட்ட தனி முத்திரை தாளில் பதிவு செய்யாமல் நிலம் சில கண்டிசனுடன் ஒப்படைக்கபட்டு இருக்கும் தொனியில் ஷரத்துகள் எழுதபட்டு இருக்கும்.
27.மேற்படி நிலத்தை யார் தானம் அளித்தார்களோ அவர்களின் பெயரும் அந்த ஆவணத்தில் குறிப்பிடபட்டு இருக்கும்.தெளிவாக தானம் அளிக்கபடவிருக்கும் சொத்துவிவரம் அதில் இருக்கும்.
28.பூமிதான போர்டு நிலங்களை கண்காணிக்க பராமரிக்க கதர்துறை அமைச்சர் கீழே சமூக சேவகர்கள்,சர்வோதய சங்கத்தினர்கள்,பூமிதானம் நிலம் கொடுத்த நிலகிழார்களின் வாரிசுகள் ஆகியோரை கொண்டு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கமிட்டியை நியமிப்பார்கள்.
29.பூமிதான போர்டு 2006 க்கு முன் தலைமையகம் மதுரையில் இயங்கியது.அப்பொழுது போர்டு தனித்து இயங்கியது. 2006 க்கு பிறகு போர்டை வருவாய் துறையின் நிலசீர்திருத்த துறைக்கு கீழ் கொண்டுவரபட்டு தலைமையகம் சென்னைக்கு மாற்றபட்டுள்ளது.
30.பூமிதான போர்டு இன்னும் சிறப்பாக இயங்கினால் போர்டு நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க முடியும்..யாருமே அனுபவிக்காமல் பூமிதான நிலங்கள் பல களத்தில் நான் கண்டுள்ளேன்.அவைகள் எல்லாம் நிலமற்ற ஏழைகளுக்கு பயன்பட செய்து வினோபாவின் ஆசையை நிறைவேற்றலாம்.
2)வழங்கப்படாமல் இருக்கின்ற பூமிதான நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டுகிறேன்!!
1) தமிழகத்தில் பல்வேறு வகையான நில சிக்கல்கள் இருக்கிறது அதில் தேவையில்லாத ஒரு சிக்கலாக இந்த பூமிதான நிலங்களும் இருக்கிறது. என்ன? பூமி தான நிலம் எவ்வளவு நல்ல திட்டம் நிலமில்லாத மக்களுக்கு எவ்வளவு பெரிய வேலையை வினோபா செய்து இருக்கிறார் என்று நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது.
2) ஆப்ரேஷன் சக்சஸ், பேஷண்ட் டெத். இதுதான் பூமிதான இயக்கத்தின் கதை. ஆலமாக பார்த்தால் உண்மையில் சர்வோதயா இயக்கமும் வினோபாவும் பூமி தானம் செய்யவில்லை பூமி குத்தகைதான் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்
3) பூமிதான இயக்கத்தினரும் ,வினோபாவேவும் , சர்வோதயா குழுவினரும் கிராமம் தோறும் பூமி தானம் கேட்டு வரும்பொழுது.நிறைய நிலபரபுக்கள் தங்கள் நிலங்களை பூமிதான போர்டுக்கு தானமாக கொடுப்பார்கள்..
4) மேற்படி பூமி தானம் பெற்ற போர்டு அந்த இடத்தின் பட்டாவை போர்டு பெயரிலேயே மாற்றி கொள்ளும்.பிறகு பூதான் போர்டு நிலமற்ற ஏழைகளுக்கு அந்த நிலத்தை விவசாயம் செய்ய விநியோகம் செய்யும். நிலபிரபுக்கள் போர்டுக்கு எழுதி கொடுக்கும் பொழுது பூமி தான பத்திரம் என்று ஒரு பத்திரம் போடுவார்கள். போர்டு நிலமற்றவர்களுக்கு நிலத்தை கொடுக்கும் பொழுது நிலம் விநியோக பத்திரத்தை கொடுப்பார்கள்.
5) அந்த நிலம் விநியோக பத்திரத்தை பெற்றவர்கள் அந்த இடத்தில் விவசாயம் செய்து கொள்ளவேண்டியது.அந்த இடத்துக்கான நிலவரியை பூமிதான போர்டு பெயரிலே கட்டி வரவேண்டியது. விநியோகம் பெற்ற விவசாயி அந்த நிலத்தை மூன்று வருஷத்திற்க்கு விவசாயம் பார்க்காமல் போட்டிருந்தால் அதனை பூதான் போர்டு கையக படுத்தி வேறு விவசாயிக்கு ஒப்படைக்கும். மேற்படி கண்டிசன்கள் அடிப்படையில் தான் பூதான் போர்டு நிலங்களை விநியோகிக்கிறது..
6) அதாவது நிலகிழார்களிடம் இருந்து தானம் வாங்கிய நிலத்தை நிலமற்றவர்களுக்கு விநியோகப்பது பிறகு அதில் விவசாயம் நடக்கிறதா? நடக்கவில்லையா என்று சோதிப்பது. நடக்கவில்லை என்றால் அதனை வேறு ஏழை பயனாளிக்கு மாற்றி விநியோகம் செய்வது என்று ஆயிரகணக்கான ஏக்கர் நிலங்களை நிர்வாகம் செய்வதற்க்காக ஒரு நிறுவனம் நடத்த வேண்டியது ஆயிற்று!!
7) நிலகிழார்களிடம் நிலதானம் வாங்கினோமா அதனை 20ஆண்டுகளுக்கு மட்டும் விற்க கூடாது என்ற கண்டிசன் மட்டும் போட்டு விட்டு அந்த கிராமத்திலேயே நிலமற்றவர்களுக்கு தானாதி விநிமய விக்கிரய உரிமையுடன் ஒப்படைத்தோமா என்று நடைமுறைபடுத்தியிருந்தால் இன்றுவரை பூமிதான போர்டு நிர்வாகம் போன்ற மேலான்மை செய்கின்ற நிர்வாகம் இருந்திருக்காது. அரசுக்கு பல இலட்சங்கள் நிர்வாக செலவு மிட்சமாயிருக்கும்.
வினோபா அண்டு கோ தானம் வாங்கிய நிலங்களை வைத்து அரசுக்கு இணையாக கம்பெனி
நடத்த திட்டமிட்டு போர்டு என்று ஒன்று உருவாக்கி அதனை தொடர்ந்து சம்பளம்
போட்டு நடத்த முடியாமல் தற்பொழுது ஒட்டுமொத்த பூமி தான போர்டு நிர்வாகமும்
தமிழ்நாடு அரசின் நில சீர்திருத்த துறைக்கு மாறி இருக்கிறது. தானம் பெற்ற
நிலத்தை அன்றே மக்களிடம் தானமாக முழு உரிமையுடன் கொடுத்து இருந்தால்
அவர்கள் பயிர்செய்வார்கள் அடமானம் போடுவார்கள் அவர்களின் வாரிசுகளுக்கு
எழுதி கொடுப்பார்கள் இப்படி எதுவுமே செய்ய முடியாததால் நிலத்தை தானம் பெற்ற
அடுத்த தலைமுறையினர் படித்துவிட்டு வேலைக்கு வந்ததால் அந்த இடத்தில்
விவசாயம் செய்யாமல் போட்டுவிட்டனர். அதனை கண்டுபிடித்து வேறு கண்டு பிடித்த
நபருக்கு போர்டும் இன்று வரை யாருக்கும் மாற்றிவிட்டதில்லை.
9) பல பூமிதான நிலங்கள் ஏற்கெனவே சட்டகுழப்பங்களில் இருக்கிறது .. இப்பொழுது பயானாளிகள் அல்லது பயனாளிகள் வாரிசுகள் ஆண்டனுபவிக்காமல் அந்த இடங்களை விட்டு பல்வேறு காரணங்களுக்காக நகரங்களுக்கு வெளியேறி வந்துவிட்டார்கள்.இப்படிபட்ட பூமி தான நிலங்கள் யுடிஆரில் பெயர் மாற்றி மனைபிரிவுகாளாக பல்வேறு ஆக்கிரமிப்புகாளாக இன்று உருமாறி கொண்டு இருக்கிறது.
10)தமிழக முழுவதும் பூமிதான நிலங்கள் என்பது சுமார் 27 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன அதில் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பூமிதான நிலம் தான் என்று பூமிதான சட்டப்படி அந்தந்த தாலுக்கா வட்டாட்சியர் உறுதிப்படுத்துதல் செய்திருக்கிறார்கள் ஆனால் மீதி இருக்கின்ற தோராயமாக 7000 ஏக்கர் நிலங்கள் வட்டாசியர் அவர்கள் பூமிதான நிலங்கள் என்று வரை பிரகடனப்படுத்தாமல் நிலுவையிலேயே இருக்கிறது உறுதிப்படுத்தாத பூமிதான நிலங்கள் எல்லாம் பொது மக்களால் பூமிதானமாக கொடுக்கப்படாதவை அல்லது தவறுதலாக பூமிதான நிலம் என்று பதிவேற்றப்பட்டவை அல்லது சட்ட அந்தஸ்து இல்லாமல் அரைகுறை தானமாக பூமிதானாம் கொடுக்கப்பட்டதாக இருக்கும் இவற்றை கடந்த 50 ஆண்டுகளாக பூமிதான நிலம் என்ற சட்டப்படிஉறுதிப்படுத்தவே இல்லை இந்த நிலையில் இந்த 7000 ஏக்கர் நிலத்தையும் பூமிதான நிலம் என்று பதிவுத்துறை வழிகாட்டி மதிப்பில் பூஜ்ஜியம் மதிப்பினை போட்டு இருக்கின்றார்கள் இதனால் நிலம் கொடுக்காத மக்கள் மிகவும் அவதி DONATION INDICATES A PHILANTHROPIC MOTIVE. BUT IF THE DONOR SAYS HE GAVE ONLY ONE ACRE, WHICH SHOULD BE AC-CEPTED. OTHERWISE, IT BECOMES DONATION THROUGH COMPULSION." (MADRAS HIGH COURT MRS. NACHAMMAL VS STATE OF TAM-கூறியிருக்கின்றார். IL NADU (29.01.2015) एँ ग्रंण अ எனவே பூமிதான போர்லே மீதி இருக்கின்ற 7000 ஏக்கர் நிலங்களை ஒன்று உறுதியாக பூமிதான நிலமென்று பிரகடனப்படுத்த வேண்டும் அல்லது அந்த நிலங்களை எல்லாம் பூமிதான போர்டில் இருந்து விடுவித்து சம்பந்தப்பட்ட சாமானியர்களுக்கு கொடுக்க வழிவகை வேண்டும்
மேற்கண்ட பூமிதானம் சம்பந்தப்பட்ட ஆவண சிக்கல்களை சரி செய்து கொடுப்பதற்கு ஆலோசனையும் வழிகாட்டுதலும் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை சார்பாக வழங்கப்படுகிறது ( தொடர்புக்கு+91 86100 63410) பூமிதானம் சம்பந்தப்பட்ட சிக்கல்களுக்கு தீர்வு செய்ய தேவைப்படும் கொள்கையை முடிவுகளை எடுப்பதற்கான கோரிக்கைகளை அனைத்திந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் அன்பு அண்ணன் ஹென்றி அவர்கள் மூலமாக முன்னெடுப்பு எடுக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த மாநாட்டு தீர்மானத்திலும் தீர்மானமாக வைக்கப்பட்டிருக்கிறது
இப்படிக்கு
சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை தொடர்புக்கு 8610063410

See less
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment