வழி இல்லாத பிரச்சனையா?…….. தேவை – முன்யோசிதமே !

777-665x435

ஒரு வயற்காட்டில் அனைவரும் விவசாயம் செய்யும் பொழுது வழியை பற்றி யாரும் அலட்டி கொள்வது இல்லை! வழி இல்லாமல் நடுமத்தியில் இருக்கின்ற விளை நிலத்திற்கு வரப்புகள் வழியாகவோ நீர்கால் வழியாகவோ கம்மாய் கரையோர பாதைகளிலோ சென்று விடுவர்.

விவசாயம் மறைந்து நகர்ப்புறமாக மாற்றம் நடைபெறும் போது நடுமத்தியில் இருக்கும் விளை நிலங்களை சுற்றி இருக்கும் பிற நிலத்தவர்கள் காம்பவுண்டோ, வேலியோ போடும் போது, நடுமத்தியில் இருப்பவருக்கு வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டு விடுகிறது. இதனால் வரை தன் இடத்துக்கு சென்று வந்தவர்கள் தற்போது வழி இல்லாததால் அவதிபடுவர்.

மேற்படி நிலங்கள் விற்பனை செய்யப்படும் போது வழி இல்லாத நிலம் என்று விலை குறைவாக கேட்பர். ஒரு சிலர் வாங்குவதற்கு வந்து பார்த்துவிட்டு வழி இல்லாத இடம், வேண்டாம் என்று சொல்லிவிடுவர். நிலத்தை அவசரத்திற்கு விற்க முடியாமல் கஷ்டபடுவார்கள்! இன்றைய சுங்குவார் சத்திரம் ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம், போன்ற பகுதிகளில் இதுபோன்ற வழி சிக்கல்களை நிறைய பார்த்து இருக்கிறேன்.

ஒரு கிராமத்தில் உங்களுக்கு சிறிய அளவிலோ பெரிய அளவிலோ விவசாய நிலம் இருந்தால் கட்டாயம் அந்த கிராமத்தின் முழுமைக்குமான சர்வே வரைபடம், உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும்.

மேற்படி வரைபடத்தில் சாலைகள், வண்டிபாட்டைகள், மங்கம்மா சாலைகள், நடைபாதைகள், நீர்வழி பாதைகள், குறியீடுகளாக காட்டப்பட்டு இருக்கும்.
உங்களுக்கு நடுமத்தி காடாக இருக்கும் போது வழிகள் ஏதும் இல்லை என்றால், மேற்படி கிராம வரைபடத்தில் இருக்கின்ற பாதைகள் ஏதாவது நம் சொத்தை ஒட்டியோ அல்லது அதற்கு அருகிலேயோ செல்கிறதா என்று ஆராய்தல் வேண்டும்.

பெரும்பாலும் வரைபடத்தில் இருக்கின்ற சாலைகள், பாதைகள், வழிகள் களத்தில் மற்றவர் ஆக்கிரமிப்பால் பயிர்நிலமாக கூட மாறி இருக்கும்.
கிராம வரைபடத்தில் இருக்கும் நடைபாதை , வழிகள் , பெரும்பாலும் களத்தில் மூடியே மறைத்து இருகின்றனர். அவனை வட்டாட்சியருக்கு மனு செய்வதன் மூலம் மீட்கபட வேண்டும்.

திருச்சியை தலைமையிடமாக கொண்டு ஆண்ட ராணி – மங்கம்மாள் , திருச்சியிலிருந்து தமிழகத்தின் தென்பகுதி முழுவதும் , நிறைய சாலைகள், ஓய்வு விடுதிகள் , கட்டி இருந்ததால் அவைகளில் பல தார் சாலைகளாக இன்று மாறிவிட்டது. இன்னும் பல மங்கம்மா சாலைகள் வரைபடங்களில் மட்டுமே இருக்கிறது. மேற்படி மங்கம்மா சாலைகளை கண்டறிந்து தனியார் கைப்பற்றில் இருந்து விடுவித்தால் நல்ல பெரிய பாதையே கிடைத்துவிடும்.
மேலும் வண்டிபாட்டைகள் என கிராம வரைபடத்தில் குறிக்கபட்டவை 8 ல் இருந்து 10அடி அகலமுள்ளவையாக இருக்கும். நடைபாதைகள் 2 ல் இருந்து 3அடி அகலமுள்ளவையாக இருக்கும் இவைகள் தங்கள் இடத்தை ஒட்டியோ அல்லது உங்கள் இடத்தில் இருந்து கொஞ்சம் தள்ளியோ சென்றாலும், அதனை உயிர்பிப்பதன் மூலம் வழிதடம் கிடைத்துவிடும்.

மேற்படி வாய்ப்புகள் இல்லாதவர்கள் , நடுகாட்டில் இருந்தவர்கள் எல்லாம் இணைந்து ஒரு வழிபாதையை தங்கள் வயற்காடுகளுக்கு உருவாக்கலாம். முன்பக்கம் நிலம் வைத்து இருப்பவரிடம் சிறிது இடம் வாங்கி வழியை ஏற்படுத்தலாம்.

நமது கிராமம் நகர மயம் ஆக போகின்றது என்ற குறியீடுகள் தெரிவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே உங்கள் உள்ளுணர்வு வழி இல்லாத நமது நிலத்திற்கு ஏதாவது வழி உருவாக்கிட வேண்டும் என்று சொல்லி விட வேண்டும். அந்த சிந்தனையே பிறகு செயல்களாக மாறி வெற்றியை கொடுக்கும்.
குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#way #issue #land

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்