மதுரை-திருப்பரங்குன்றத்தில் ரத்து ஆகும் அனுபந்த பட்டாக்கள்

       45243703_1880159025354372_6578945137810866176_n

மதுரைதிருப்பரங்குன்றத்தில் 25 வருடத்துக்கு முன்பு 4.50 ஹெக்டேர் நிலத்தை நத்தமாக வகைபடுத்தி 500 க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளாக பிரித்து கூலிதொழிலாளர்களுக்கு (அனைத்து சாதியினருக்கும்) ஒப்படை பட்டா (அனுபந்த பட்டாகொடுத்து இருக்கின்றனர்)அதில் 150 பேர்கள் மட்டும் வீடு கட்டி அதில் வாழ்ந்து வருகின்றனர்.

350 பேர் பெயர் கிராம கணக்கில் இருக்கிறது.ஆனால் அவர்களின் ஆளோ முகவரியொ தெரியாமல் கொஞ்சம் பேரும், கொஞ்சம் பேர் அதை பிறத்தியாருக்கு கிரயமும் செய்துவிட்டனர்.அப்படி கிரயம் வாங்கியவர்கள் சிலர் வீடு கட்டி இருக்கின்றனர்.சிலர் அப்படியே காலி நிலமாக போட்டு இருக்கின்றனர்.

ஒருசிலர் உண்மையான பயனாளிகள் வராததை கண்டு போலி ஆவணங்கள் உருவாக்கி இடங்களை விற்று கொண்டும் இருந்தனர்.இதனை எல்லாம் கவனித்த வருவாய்துறை களவிசாரணை மேற்கொண்டு உண்மையான பயனாளிகள் யார் வீடு கட்டி இருக்கிறார்களோ அவர்களை தவிர்த்து அனைத்து பட்டாக்களையும் இரத்து செய்கின்ற வேலையை செய்கின்றது.
அவ அவன் 2செண்டு இடத்துக்காக தூங்காம கொள்ளாமா என்னென்ன பாடா படுறான். இந்த தூங்கா நகர மக்கள் மேற்படி இடத்தை அக்கறையின்மையால் விட்டு இருக்கின்றனர்.

இதில் பணம் கொடுத்து இடம் வாங்கியவர்களுக்கும் பட்டா ரத்தாகி தலையில் கைவைத்து கொண்டு இருக்கின்றனர்.இதன் அனுபந்த பட்டாதாரர்கள் இப்போ ஆளுக்கொரு மூலையில் இருப்பதால் இந்த விஷயம் தெரியாமலேயே இருக்கின்றனர்.இவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து மாவட்ட ஆட்சியர் கைல கால்ல விழுந்து இருக்கிற சொத்தை காப்பாற்ற முயற்சி செய்யலாம்.
நானும் ஆலோசனைகள் வழிகாட்டுதல்கள் உதவிகள் செய்ய தயாராய் இருக்கிறேன்.மதுரை முகநூல் நண்பர்கள் இதனை அதிக அளவில் ஷேர் செய்து உண்மையான பட்டாதாரர்களை ஒருங்கிணைக்க உதவுமாறு வேண்டுகிறேன்.

சொத்துக்கள் சேரட்டும்! ஐஸ்வர்யம் பெருகட்டும்!!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற
அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#அனுபந்தபட்டா #ஒப்படைபட்டா #பட்டாரத்து #திருப்பரங்குன்றம் #மதுரை #பட்டா #சர்வே #சிட்டா

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்