இனாம் நிலங்களுக்கு இனாம் கமிஷனர் என்று ஒருவர் இருந்தார் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!


 

இனாம் நிலங்களுக்கு இனாம் கமிஷனர் என்று ஒருவர் இருந்தார் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!

1) இனாம் நிலங்களுக்கு வரி கொடுக்க தேவையில்லை ஒரு சில இடங்களில் சிறிய அளவில் மட்டுமே வரிகள் விதித்தி ருப்பார்கள். இதனைப் பயன்படுத்தி இந்த நாட்டில் இருந்த பல நிலக்கிழார்கள் எங்களது நிலமும் இனாம் நிலம் தான் அதனால் நாங்களும் வரி கொடுக்க மாட்டோம் என்று வெள்ளையர்களிடம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு ஏற்றவாறு அந்த காலத்து கரணங்களும் அதாவது அந்த காலத்து கிராம நிர்வாக அதிகாரிகளும் அந்த இனாம்தாரர்களின் சொந்தக்காரர்களாக இருப்பதால் இனாம் இல்லாத நிலங்களையும் இனாம் நிலங்கள் என்று கணக்கு எழுத ஆரம்பித்து விட்டனர். இதனால் அதிக அளவில் வருவாய் கசிவு
ஏற்படுவதை உணர்ந்த வெள்ளையர்கள்
இனாம் நிலங்களை கணக்கெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

2) அப்படி கணக்கெடுப்பதற்கும் அது இனாம் நிலம் தான் என்று உறுதிப்படுத்துவதற்கும் அரசின் சார்பில் ஒரு அதிகாரி தேவைப்பட்டார் அந்த அதிகாரியை தான் இனாம் கமிஷனர் என்கிறோம். இனாம் கமிஷனர் என்பவர் ஒரு நீதிபதி அல்ல ஆனால் அரசின் முழு பிரதிநிதி ஆவார்.

3)இனாம் நிலத்தின் பழைய ஆவணங்கள் அதாவது 1860 க்கு முன்பு அந்த காலத்து கிராம காரணம் வைத்திருந்த சாகுபடி அடக்கல்,மற்றும் பழைய கல்வெட்டுகள், செம்பு பட்டயங்கள் ஓலை சுவடிகள் போன்றவற்றை ஆராய்ந்து அதில் இனாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறதா ?அந்த நிலம் எந்த வகை மேஜர் இனாமா மைனர் இனமா? மேஜர் இனாம் என்றால் முழு வரி விலக்கா? இல்லை பாதி வரிவிலக்கா? அதுவும் இல்லை கால் வரி விலக்கா?என்பதையெல்லாம் ஆராய்வார்.அந்த இனாம்,சேவை இனாம், கோயில் இனாம், தனிநபர் இனாம் போன்ற வகைபாடுகளை தீர்மானிப்பதும் இனாம் கமிஷனர் தான்

4)மேலும் இனாம் நிலம் என்று தீர்மானிக்கும் அதிகாரம் அரசின் மீள்வாங்கும் உரிமையை (Resumption) கைவிட்டு இனாம்தாரருக்கு முழு உரிமை வழங்கவும் செய்வார். அதே போல் இனாம் என்று நிரூபிக்காதவர்களை
அரசின் Reversionary Right (மீள்வாங்கும் உரிமை) வைத்து இனாம் நிலம் அல்ல என்று அறிவிப்பார்.இவ்வாறு அறிவிக்கும்போது எந்த நிபந்தனைகளில் கைவிடப்படுகிறது என்பதையும் தெளிவாக சொல்லி இருப்பார்.

5)அது மட்டும் இல்லாமல் இனாம் நிலத்தைப் பயன்படுத்தி வந்த நபரை
அரசின் சார்பில் புதிய இனாம்தாரராக அங்கீகரத்து இருப்பார்.அதேபோல்
என்ஃபிராஞ்சைஸ்மென்ட் செய்ய
இனாம்தாரருடன்நிபந்தனைகள் பேசி
ஒப்பந்தம் செய்து இருப்பார். அதனை புதிய இனாம் என்று அங்கீகரித்து இருப்பார்.
மேற்படி இனாம் கமிஷனர் கொடுத்த அங்கீகாரம் அரசை கட்டுப்படுத்தும் மேலும் .இனாம் கமிஷனர்
அரசின் சார்பில்இனாம்தாரரின் உரிமையை அங்கீகரித்தால்அரசு அதனை மறுக்க முடியாது.” கமிஷனர் உரிமையை கொடுத்தால் அது அரசு கொடுத்தது போலவே அர்த்தம் அதனால்
அரசு தானே கொடுத்த உரிமையை
பின்னர் திரும்பப் பெற முடியாது.

6)மேலும் சேவை இனாமாக இருந்தாலும் அதாவது சேவை கண்டிஷன் இருந்தாலும் அதனை நீக்கி விட்டு கண்டிஷன் இல்லாமல் இனாம் கமிஷனர் என்ஃபிராஞ்சைஸ் செய்தால் அது Resumption செய்து Regrant செய்வது போல் எடுத்துக் கொள்ள வேண்டும். பாதி உரிமையுடன் இனாம்தாரர் அனுபவித்து வந்தால் இனாம் கமிஷனரின் Regrant செய்யும் பொழுது முழு உரிமை (Absolute Title) உருவாகிவிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

7)ஒருவேளை அந்த உரிமை
புறநபர் (Stranger) பெயரில் கூட
கொடுக்கப்பட்டிருந்தாலும் அதாவது இனாம் நிலத்திற்கு சம்பந்தமில்லாதவருக்கு இனாம் கமிஷனர் இனாமாக கொடுத்தாலும் அது முழுமையாக செல்லும் அது ஒரு புதிய கிராண்டாக மாறிவிடுகிறது.அரசு அதை மறுக்க முடியாது.

😎 இனாம் கமிஷனர் கொடுக்கின்ற இனாம் உத்தரவை நீதிமன்றம் செல்லாது என்று சொல்ல முடியுமா என்றால் அது சொல்ல முடியாது. அதுவே இரண்டு நபர்களுக்கு இடையே இது எங்களுடைய இனாம் நிலம் என்று போட்டி வந்துவிடுகிறது. அதற்கு அந்தப் போட்டி இனாம் உரிமையாளர் இனாம் கமிஷனரிடம் முறையீடு செய்து அவருடைய முறையீடு ஏற்கப்படாத பட்சத்தில் அவர் நீதிமன்றம் செல்லலாம்

9) அதேபோல் ஒரு இனாம் நிலத்தில் மேல் வார உரிமை யாருக்கு? குடி வார உரிமை யாருக்கு என்ற சிக்கல் வந்தாலும். இரண்டு நபர்களுக்கிடையில் குடிவார உரிமை எங்களுக்கு அல்லது இரண்டு நபர்களுக்கு இடையே மேல்வார உரிமை எங்களுக்கு என்று சச்சரவு வந்தாலும் அதனை இனாம் கமிஷனர் விசாரிக்க முடியாது. இவையெல்லாம் சிவில் நீதிமன்றம் தான் தீர்மானிக்கும்.ஆனால் இனாம் கமிஷனர் கொடுத்த இனாம் உரிமையை மேல்முறையீடு செய்கிறேன் சீராய்வு செய்கிறேன் என்று அதனை உடைக்கச் சொல்லி நீதிப்பேராணை வழக்கு போட முடியாது.( தொடரும்)

சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
098416 65836
See less

Comments