இனாம் நிலத்தில் Resumption என்றால் என்ன?

1) இனாம் நில நிர்வாக ஆவணங்களில் resumption என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டு இருக்கும். பெரும்பாலும் எஸ் ஆர் ரெக்கார்டுகளில் செட்டில்மெண்ட் தாசில்தார் அவர்கள் கொடுக்கின்ற தீர்ப்புகளில் இந்த வார்த்தை அடிக்கடி பார்த்திருப்பீர்கள். இது ஒரு சட்ட வார்த்தை தான் ஆனால் ஒரு நீண்ட ஆழமான விஷயங்கள் கொண்ட செய்தியை உங்களுக்கு தரும்.
2)இனாம் நிலம் வழங்கப்பட்ட பொழுது இருக்கின்ற நிபந்தனையை ரத்து செய்தலை Resumption என்று சொல்வார்கள். இனாம் என்றால் வரி விலக்கு என்று அர்த்தம் ரிசெம்ப்ஷன் என்றால் முழு நில வரியை (Full Assessment) விதித்தல் என்று அர்த்தம். Actual possession
மாற்றப்படாவிட்டாலும், இனாம் வழங்கும்பொழுது போடப்பட்ட நிபந்தனை முடித்தால் Resumption என்று சொல்லலாம்
சில நேரங்களில் நிலத்தை அரசு திரும்ப எடுத்துக் கொள்ளுதல் நேர்வயும் சேர்த்து ரிசப்ஷன் என்று சொல்வார்கள்.(Unide Rajah Vs Pemma Swami (7 M.I.A 128))
3) சில நேர்வுகளில் முழுமையான Resumption என்று சொல்லி நிலம் பறிமுதல் செய்து இருப்பார்கள்.சில நேர்வுகளில் வரி free யை ரத்து செய்து விட்டு முழுமையாக வரியை விதித்து இருப்பார்கள். அல்லது வரியை
பகுதி பகுதியாக அதாவது Resumption படிப்படியாக உயர்த்துதல் செய்வார்கள் (Incremental Assessment) சில நேர்வுகளில்
Enfranchisement Quitrent (சிறிய நிலவரி) விதித்து நிபந்தனை நீக்கிசுதந்திரப்படுத்தல் செய்வார்கள் ( Sri Sitaramaraju v. Ramachendraraju (3 Mad 367)
4)Resumption செய்வதற்கான இனாம் நிலங்கள் இரண்டு வகையாக இருக்கிறது
தொடர்ந்து சேவையை செய்ய வேண்டும் அதாவது சாமி தூக்குதல், மாலை கட்டுதல், பூசாரி பணி செய்தல் செய்தல் போன்ற சேவையாகவும் இருக்கலாம் இதனை
Service-Burdened Grants சேவை தொடர்கிறது என்று சொல்லலாம்.. இன்னொன்று ஊதியத்திற்கு பதிலாக கொடுக்கப்பட்டது தலையாரி தோட்டி, உத்தாரி, மணியக்காரர் வெட்டியான், நீர்க்கட்டி, ஆசாரி போன்ற பணி செய்பவர்களாக இருக்கலாம் இதனை Grants In-Lieu of Wages ஊதியத்திற்கு பதிலாக கொடுக்கப்பட்டது என்று சொல்லலாம்
5) இந்த ரிசப்ஷனை செய்வதற்கு அதிகாரம் அரசிடம் தான் இருக்கிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறையோ வக்ப் போர்டோ செய்வதில்லை. பெரும்பாலும் மைனர் இனாம் ஒழிப்பு சட்டம் வந்த பிறகு
இனாமை ஒழித்து ரயத்துவாரியாக மாற்றுகிறார்கள் என்று சொல்கிறார்கள் அல்லவா அவையெல்லாம் இந்த ரிசம்ஷன் அடிப்படையில் தான் செய்யப்பட்டு இருக்கிறது இந்த ரிசம்ஷன் அடிப்படையில்
கிராம கர்ணா தலையாரி போன்றவர்களுக்கெல்லாம் வரி உள்ள நிலங்களாக மாற்றி அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது
7) அதேபோல் கோயிலில் செய்ய வேண்டிய ஊழியத்திற்கு வக்ப் போர்டில் செய்ய வேண்டிய ஊழியத்திற்கு இந்த ரிசம்ஷன் அடிப்படையில் வரியுள்ள நிலங்களாக மாற்றி அறநிலை துறைக்கும் அதில் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற விவசாயிக்கும் சேர்த்து quitrent வரி விதி ப்பார்கள்
இனாமொழிப்பு சட்டத்திற்கு முன்பு ஜமீன் கிராமங்களில் ஜமீன்தார்கள்
ரிசம்ஷன் செய்திருக்கிறார்கள். அதேபோல் அரசும் இனாம் நிலங்களுக்கு
ரிசம்ஷன் செய்திருக்கிறார்கள். ( பெரும்பாலும் பிராமணர்கள் தங்களுக்கு
கிடைத்த இனாம் நிலங்களை கண்டிசனை தொடர முடியாது என்று சொல்லி நீதிமன்றம்
சென்று ரிசப்ஷன் பெற்றிருக்கிறார்கள் )
9) எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டிஷனை நடைமுறைப்படுத்தவில்லை என்று தங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கும் பொழுது
இது ஏற்கனவே ரிசம்ஷன் ஆகிவிட்டது என்று நீங்கள் கட்சி செய்யலாம். அதனால் உங்களுக்கு கால அவகாசம் கிடைக்கும். அல்லது உண்மையிலேயே ரிசம்ஷன் நடந்திருக்கிறதா என்பதற்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி ஆவணங்களை தேடலாம்.
இப்படிக்கு
சா.மு பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
098416 65836
1) இனாம் நில நிர்வாக ஆவணங்களில் resumption என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டு இருக்கும். பெரும்பாலும் எஸ் ஆர் ரெக்கார்டுகளில் செட்டில்மெண்ட் தாசில்தார் அவர்கள் கொடுக்கின்ற தீர்ப்புகளில் இந்த வார்த்தை அடிக்கடி பார்த்திருப்பீர்கள். இது ஒரு சட்ட வார்த்தை தான் ஆனால் ஒரு நீண்ட ஆழமான விஷயங்கள் கொண்ட செய்தியை உங்களுக்கு தரும்.
2)இனாம் நிலம் வழங்கப்பட்ட பொழுது இருக்கின்ற நிபந்தனையை ரத்து செய்தலை Resumption என்று சொல்வார்கள். இனாம் என்றால் வரி விலக்கு என்று அர்த்தம் ரிசெம்ப்ஷன் என்றால் முழு நில வரியை (Full Assessment) விதித்தல் என்று அர்த்தம். Actual possession
மாற்றப்படாவிட்டாலும், இனாம் வழங்கும்பொழுது போடப்பட்ட நிபந்தனை முடித்தால் Resumption என்று சொல்லலாம்
சில நேரங்களில் நிலத்தை அரசு திரும்ப எடுத்துக் கொள்ளுதல் நேர்வயும் சேர்த்து ரிசப்ஷன் என்று சொல்வார்கள்.(Unide Rajah Vs Pemma Swami (7 M.I.A 128))
3) சில நேர்வுகளில் முழுமையான Resumption என்று சொல்லி நிலம் பறிமுதல் செய்து இருப்பார்கள்.சில நேர்வுகளில் வரி free யை ரத்து செய்து விட்டு முழுமையாக வரியை விதித்து இருப்பார்கள். அல்லது வரியை
பகுதி பகுதியாக அதாவது Resumption படிப்படியாக உயர்த்துதல் செய்வார்கள் (Incremental Assessment) சில நேர்வுகளில்
Enfranchisement Quitrent (சிறிய நிலவரி) விதித்து நிபந்தனை நீக்கிசுதந்திரப்படுத்தல் செய்வார்கள் ( Sri Sitaramaraju v. Ramachendraraju (3 Mad 367)
4)Resumption செய்வதற்கான இனாம் நிலங்கள் இரண்டு வகையாக இருக்கிறது
தொடர்ந்து சேவையை செய்ய வேண்டும் அதாவது சாமி தூக்குதல், மாலை கட்டுதல், பூசாரி பணி செய்தல் செய்தல் போன்ற சேவையாகவும் இருக்கலாம் இதனை
Service-Burdened Grants சேவை தொடர்கிறது என்று சொல்லலாம்.. இன்னொன்று ஊதியத்திற்கு பதிலாக கொடுக்கப்பட்டது தலையாரி தோட்டி, உத்தாரி, மணியக்காரர் வெட்டியான், நீர்க்கட்டி, ஆசாரி போன்ற பணி செய்பவர்களாக இருக்கலாம் இதனை Grants In-Lieu of Wages ஊதியத்திற்கு பதிலாக கொடுக்கப்பட்டது என்று சொல்லலாம்
5) இந்த ரிசப்ஷனை செய்வதற்கு அதிகாரம் அரசிடம் தான் இருக்கிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறையோ வக்ப் போர்டோ செய்வதில்லை. பெரும்பாலும் மைனர் இனாம் ஒழிப்பு சட்டம் வந்த பிறகு
இனாமை ஒழித்து ரயத்துவாரியாக மாற்றுகிறார்கள் என்று சொல்கிறார்கள் அல்லவா அவையெல்லாம் இந்த ரிசம்ஷன் அடிப்படையில் தான் செய்யப்பட்டு இருக்கிறது இந்த ரிசம்ஷன் அடிப்படையில்
கிராம கர்ணா தலையாரி போன்றவர்களுக்கெல்லாம் வரி உள்ள நிலங்களாக மாற்றி அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது
7) அதேபோல் கோயிலில் செய்ய வேண்டிய ஊழியத்திற்கு வக்ப் போர்டில் செய்ய வேண்டிய ஊழியத்திற்கு இந்த ரிசம்ஷன் அடிப்படையில் வரியுள்ள நிலங்களாக மாற்றி அறநிலை துறைக்கும் அதில் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற விவசாயிக்கும் சேர்த்து quitrent வரி விதி ப்பார்கள்
9) எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டிஷனை நடைமுறைப்படுத்தவில்லை என்று தங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கும் பொழுது
இது ஏற்கனவே ரிசம்ஷன் ஆகிவிட்டது என்று நீங்கள் கட்சி செய்யலாம். அதனால் உங்களுக்கு கால அவகாசம் கிடைக்கும். அல்லது உண்மையிலேயே ரிசம்ஷன் நடந்திருக்கிறதா என்பதற்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி ஆவணங்களை தேடலாம்.
இப்படிக்கு
சா.மு பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
098416 65836
See less

Comments
Post a Comment