இனாம் நில நிர்வாக முறையில் என் பிரான்சைஸ்மென்ட்(Enfranchisement) என்றால் என்ன?
இனாம் நில நிர்வாக முறையில் என் பிரான்சைஸ்மென்ட்(Enfranchisement) என்றால் என்ன?
1) இனாம் நில சிக்கலில் உள்ளவர்கள்:மைனர் இனாம் நிலம் தற்பொழுது வரை வைத்திருப்பவர்கள் கற்றறிந்த வழக்கறிஞர்கள் சட்ட ஆர்வலர்கள் அனைவரும் தாசில்தார் செட்டில்மெண்ட் ரெக்கார்டு தீர்ப்புகளை படித்திருப்பீர்கள் இந்த இனாம் என்பிரண்ட்சைஸ்ட் (Enfranchisement )செய்யப்பட்டது அல்லது இது அன்என்பிரான்சிஸ்ட் (Unenfranchisement) ஆக இருக்கிறது என்ற வார்த்தையை படித்திருப்பீர்கள் அல்லது கேள்வி மட்டும் இருப்பீர்கள்
2).இது ஒரு மிக முக்கியமான சட்ட வார்த்தை மிக ஆழமான அர்த்தங்களை உள்ளடக்கியது அதனால் இதனை சாமானியர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுகிறேன் நேற்று நான் எழுதிய Resumption சம்பந்தமான கட்டுரைக்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. அதாவது1) Resumption (ரிசம்ப்ஷன் என்பது
சேவை செய்யாதபோது அரசு அல்லது மன்னர் நிலத்தை மீண்டும் எடுத்து கொள்ளும் அதிகாரம் என்று புரிந்து கொள்ளலாம்
3)அதேபோல் Enfranchisement என்பது இனாம் நிலத்திற்கு இருந்த “பறிமுதல் ஆபத்து”, “சேவை கடமை” போன்ற கட்டுப்பாடுகளை நீக்கி,அதனை சுதந்திரமான வாரிசு மற்றும் விற்பனை செய்யக்கூடிய சொத்து ஆக மாற்றும் செயல்முறையை enfranchisement என்று சொல்லலாம்
4)“Secretary of State v. Srinivasachari”
என்ற வழக்கில் வழக்கில்தான் ஜஸ்டிஸ் சதாசிவ ஐயர் அவர்கள் Enfranchisement பற்றி
“Enfranchisement என்றால், இனாம் நிலம் பறிமுதல் செய்யப்படும் என்ற ஆபத்தை நீக்கி,அதை சாதாரண சொத்தாக மாற்றுவது.” என்று முத்தாய்ப்பாக சொல்லி இருக்கிறார்.
5) இந்த இன்ஃபிரான்சைஸ்மென்ட் செய்வது தனி நபர் இனாம்களுக்கு, சேவை இனாம்களுக்கு வேறு வேறு வித்தியாசமான உரிமைகளை கொடுத்தது. தனி நபர்களுக்கு முழுமையான உரிமையும் சேவை இனாம் களுக்கு கொஞ்சம் வரையறுக்கப்பட்ட உரிமை கொடுத்திருக்கிறது.
7) அது மட்டுமல்லாமல் இனாம்தாரர் விதவைப் பெண்ணாக இருந்தால் அந்த காலத்தில் இருந்த பெண் சொத்து சட்டத்தில் பாதிக்கப்படாமல் உரிமை முறை இருந்தது
10)இனாம் நிலம் என்று வந்து விட்டால் அது Unenfranchised என்று மைனர் இனாம் ஒழிப்பு தாசில்தார்செட்டில்மெண்ட் பதிவேட்டில் எழுதி இருந்தால் அவரே அதனை என் பிரான்சைஸ் செய்து விடு வரி (quitrent) :வி தித்து தூய ரயத்துவாரியாக உங்களுக்கு மாற்றி கொடுத்திருப்பார். ஏற்கனவே என் ஃப்ரான்சிஸ்ட் ஆகியிருந்தால் எந்தவித வரியும் விதிக்காமல் ரயத்துவாரியாக மாற்றி இருப்பார்
11) இந்து சமய மற்றும் வக்பு போர்டுகள் இனாம் என்றாலே பத்திர அலுவலகத்தில் பதிவுக்கு தடை,ஆக்கிரமிப்பு நோட்டீஸ், தரிசாக இருக்கிறது என்று இந்து சமய ஆணையாளரிடம் பொய் சொல்லி தனியார் பிளான்ட் ஸ்டேஷன் கம்பெனிகளுக்கு பொசிஷனை கைமாற்றி விடுவது போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள். அப்பொழுது நீங்கள் மனு எழுத தொடங்கும் பொழுது இது என்பிரான்சிஸ்ட் இனாம் என்று மனுவை எழுத தொடங்க வேண்டும்
மேலும் இது என்பிரான்சிஸ்ட் இனாம் என்று கட்சி செய்ய வேண்டும்
இப்படிக்கு
சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
098416 65836
See less

Comments
Post a Comment