Proprietary Estate Village இல்லாத Shrotriem Inam Village இனாம்தாரர்கள் ஆனபிராமணர்களுக்கு மண்ணுக்கடியில் உள்ள Mica சொந்தமாகுமா?
Proprietary Estate Village இல்லாத Shrotriem Inam Village இனாம்தாரர்கள் ஆனபிராமணர்களுக்கு
மண்ணுக்கடியில் உள்ள Mica சொந்தமாகுமா?
1)ஆந்திராவில், அழகான வட பெண்ணையாற்றங்கரை நகரமான Potti Sriramulu Nellore-இலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில், தென்மேற்கு நோக்கி அமைந்துள்ள ஒரு அழகான கிராமம் தான் Anand Madugu.
இந்த கிராமம் ஒரு Shrotriem Inam Village.
வேதம் கற்றறிந்த பிராமணர்களுக்கு, அரசர்களால் இனாமாக வழங்கப்பட்ட கிராமமாகும்.
2)அந்த கிராமத்தில் குடி வார உரிமையில் உள்ள விவசாயிகளிடம் விளைந்த பொருட்களில் மேல்வாரி பங்காக விளை பொருட்களை பெற்றுக் கொண்டு, நூற்றாண்டுகளுக்கு மேல் அதனை அனுபவித்து வந்ததால், அந்தப் பிராமணர்களுக்கு அந்தக் கிராமத்தின் “உரிமையாளர்கள்” என்ற எண்ணம் ஆழ்மனதில் உருவாகிவிட்டது.
அவர்கள் தங்களை அந்தக் கிராமத்தின் “Owners” என எண்ணத் தொடங்கினார்கள்.
3)அந்த கிராமத்தின் மண்ணின் அடியில்
Mica என்ற மதிப்புள்ள கனிமம் இருந்தது.
அதனை Duvvuru Balarami Reddy உள்ளிட்ட சிலருக்கு, 'Mica Mining Right” என்ற பெயரில்,
ஒரு Mining Lease, அந்த ஸ்தோத்திரியம் இனாம் பிராமணர்கள் வழங்கியிருந்தார்கள்.
4)மேற்படி லீஸில் ஒரு விசித்திரமான நிபந்தனை இருந்தது:
“நீங்கள் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் Mica தோண்டி எடுக்கலாம்.
அதற்கேற்றவாறு நாங்கள் லீஸை புதுப்பித்து தருவோம்.”
என்று அந்த Lease Agreement-இல் ஒரு ஷரத்து எழுதப்பட்டிருந்தது.
5)ஆனால் இந்த Shrotriem Village,
Madras Estates (Abolition and Conversion into Ryotwari) Act, 1948
என்ற சட்டத்தின் கீழ்,
Shrotriem Inam ஒழிக்கப்பட்டு,
அரசின் Ryotwari Village-ஆக மாற்றப்பட்டது.
6)1953-ம் ஆண்டு Estate Abolition நடைமுறைக்கு வந்ததும்,
பிராமணர்கள் வழங்கிய Mining Lease முடிவுக்கு வந்தது.
Mining Permission அரசால் மறுக்கப்பட்டது.
பிராமணர்கள் நினைத்தது இதுதான்:
“இந்த கிராமம் எங்களுடையது.
மண்ணும் எங்களுடையது.
அதனால் மண்ணுக்குள் இருப்பதும் எங்களுடையதே.” அதனால் லீஸ் தொடர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்கள்
7)Mining Lease பெற்றிருந்த Reddy & Group,
நீதிமன்றத்தில் சென்று பரிகாரம் கேட்டார்கள்:
“நாங்கள் சட்டப்படி லீஸ் வைத்திருக்கிறோம்.
எங்களுக்கு Mining செய்ய அனுமதி வழங்க வேண்டும்.”ஆனால் :“Shrotriem Brahmins-க்கு Mineral Rights இல்லை.அவர்கள் கொடுத்த Lease செல்லாது.” என்று அரசு சொல்லி விட்டு அனுமதி மறுத்து விட்டது.
8)இதனை விசாரித்த Andhra Pradesh High Court – Single Judge Bench,
“இந்த Shrotriem Inam ஒரு Proprietary Estate என நிரூபிக்கும் எந்த ஆதாரமும் இல்லை.
ஆகவே, பிராமணர்கள் வழங்கிய Mining Lease சட்டபூர்வமல்ல.”
என்று தீர்ப்பளித்தார்.
9)பின்னர் வழக்கு இருவர் பெஞ்ச் க்கு சென்றது -க்கு சென்றது.
அங்கு ஒரு வித்தியாசமான தீர்ப்பு வழங்கப்பட்டது:
“Surface Rights பிராமணர்களுக்கு.
Sub-Soil Rights அரசுக்கு.
ஆகவே கனிமத்தை இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.” என்று தீர்ப்பை கொடுத்தார்கள்
10)இதற்குப் பிறகு வழக்கு Supreme Court of India-க்கு சென்றது.அங்கு நீதிபதிகள் எழுப்பிய கேள்வி மிக எளிதானது:
“Shrotriem Inam என்றாலே
Mineral Rights தானாகவே வழங்கப்பட்டதாகக் கருதலாமா?”
நீதிமன்றம் தெளிவாகக் கூறியது:
Inam என்பது பெரும்பாலும்
Revenue Assignment மட்டுமே.
Mineral Rights தனியாகவும்,
தெளிவாகவும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், 1920-ம் ஆண்டு Privy Council தீர்ப்பை நினைவூட்டினார்கள்:
“A grant of a village may be only an assignment of revenue.”
அதாவது:
“ஒரு கிராமம் வழங்கப்பட்டது என்றால்,
அதில் உள்ள மண்ணுக்கடியில் இருக்கும்
தங்கம், கல், கனிமங்கள் அனைத்தும்
வழங்கப்பட்டதாக அர்த்தமில்லை.”
என்று தீர்ப்பளித்தார்கள்.
ஆகவே:
Shrotriemdars-க்கு Mineral Rights இல்லை
அவர்கள் வழங்கிய Mining Lease,
ஆரம்ப நிலையிலேயே Void ab initio
(சட்டப்படி செல்லாதது)
என்று தீர்மானிக்கப்பட்டது.
Case Reference
State of Andhra Pradesh vs. Duvvuru Balarami Reddy & Others
Supreme Court of India
Date: 02 April 1962
Citation: AIR 1963 SC 264 / (1963) 2 SCR 152
இப்படிக்கு
சா.மு பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் – மக்கள் நல அறக்கட்டளை
தொடர்புக்கு : 86100 63410

Comments
Post a Comment