வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்! (பார்ட்-3)


 

வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்! (பார்ட்-3)

16) பெரும்பாலும் இனாம்கள் வழங்குவதற்கு காரணம் நல்ல விளைச்சல் இல்லாத பகுதிகளில் அல்லது தரிசுகளில் மக்கள் குடியேற்றங்களை வைத்து அவர்களின் உழைப்பின் மூலமாக அந்த பகுதியை வளமாக உருவாக்குவதற்காக தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது என் புரிதல் ஆனால் காண்மிய பள்ளிவாசல் மண்ணோடு மக்களை பிணைக்காமல் அப்படியே இரு வார உரிமையையும் வைத்திருக்கிறார்கள்.

17) 1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறியதும் சுதந்திர மக்களாட்சி மலர்ந்ததும் எஸ்டேட் ஒழிப்புச் சட்டம் 1948 நடைமுறைப்படுத்தப்பட்டு ஜமீன் கிராமங்களும் இனாம் கிராமங்களில் முழுவதுமாக இருக்கின்ற அதாவது Propertery Estate ஆக இருக்கின்ற கிராமங்களில் மேல் வார உரிமைகள் எல்லாம் ஒழிக்கப்பட்டு விட்டது. அப்படி ஒழிக்கும் பொழுது இந்த நிலத்திற்கு இருந்த இரு வார உரிமைகளை கை வைக்க முடியவில்லை. ஏனென்றால் இந்த இனாம் ஒரு கிராமமும் சம்பந்தப்பட்டது அல்ல. அதுமட்டுமில்லாமல் இது properity inaam estate யும் இல்லை என்பதால் எஸ்டேட் ஒழிப்புச் சட்டம் 1948 இன் மேல்வார உரிமையை ஒழிக்க முடியாது எனவே இந்த சட்டம் இந்த தாவா சொத்தில் அமல்படுத்தப்படவில்லை

18) அதன் பிறகு இனாம் எஸ்டேட் ஒழிப்புச் சட்டம் -26/1963 மற்றும் மைனர் இனாம் ஓழிப்பு சட்டம் 30/1963 இரு சட்டங்கள் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 26/1963 என்பது முழு கிராமமாக இருக்காது பாதி கிராமம் அல்லது கால் கிராமமோ இருக்கும் ஆனால் அதனுடைய எல்லைகள் ஏக்கரில் அளவுகளில் சொல்லப்பட்டு இருக்காது. இந்த ஆற்றில் இருந்து அந்த மலை வரை அந்த மலையில் இருந்து இந்த காடு வரை என்று மட்டுமே எல்லை குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி குறிப்பிட்டு இருந்தால் அதனை 26/1963 சட்டத்தின் கீழ் இனாம் ஒழிப்பு நடவடிக்கையை எடுக்கலாம்
அதுவே 5 ஏக்கர் 10 ஏக்கர்,5 காணி 10 காணி
அளவுகளில் இனாம் சொல்லப்பட்டு இருந்தால் அதனை மைனர் இனாம் சட்டத்தில் இனாம் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளலாம்.இதில் நிலத்தை எல்லைகாட்டியும் சொல்லி பரப்பும் பழைய நாட்டு வழக்கான கோட்டை விதை நிலம் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

19)என்னுடைய புரிதலை பொருத்தவரை இந்த இடத்திற்கு மைனர் இனாம் ஒழிப்பு செட்டில்மெண்ட் செய்திருக்க வேண்டும் ஆனால் திருநெல்வேலி மாவட்ட வருவாய் துறை இந்த இடத்திற்கு 26/1963 இனாம் ஓழிப்பு சட்டத்தின்படி இனாம் ஒழிக்கிறேன் என்று சொல்லி மேல்வார உரிமையை ஓழிப்பு நடவடிக்கையை செட்டில்மெண்ட் தாசில்தார் செய்து இருக்கிறார். அப்படி செய்த பிறகு மேற்படி பள்ளிவாசல் சொத்து முழுதும் பட்டா கொடுக்காமல் பொறம்போக்கு என்று ஆக்கி இருக்கிறார்கள். அதனை எதிர்த்து waqf board யும் மாநில நில நிர்வாக ஆணையரிடம்
மேல்முறையீடு செய்து இருக்கிறார்கள். அவரும் பட்டா கொடுக்க மறுத்திருக்கிறார்
ஆனால் அந்த கிராமத்தில் அச்சடிக்கப்பட்ட அ பதிவேட்டில் புறம்போக்கு என்று பள்ளிவாசல் நிலம் என பதிவாகி இருக்கிறது
26/1963 சட்டப்படி இனாம் ஒழித்தால் குடிவார பட்டாதாரர்கள் இல்லை என்றால் அதனை
புறம்போக்காக போட வேண்டிய நிலை வரும். அதுவே 30/1963 மைனர் இனாம் ஓழிப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் பள்ளிவாசல் நிலத்துக்கு பட்டா கொடுக்கப்பட்டிருக்கும்.

21) பள்ளிவாசல் நிர்வாகம் 1948 எஸ்டேட் ஒழிப்பு சட்டம் வந்து ஜமீன் மற்றும் properitry இனாம் ஒழிக்கின்ற சட்டம் அமல்படுத்தப்பட்டபோது திருநெல்வேலி சப் கோர்ட்டில் – O.S. No.49 of 1952 என்ற வழக்கை
கானுமியா (Khanumiya) பள்ளிவாசல் திருநெல்வேலியும் அதற்க்க பிரதிவாதிகள்
மெட்ராஸ் மாநில அரசு (State of Madras) இருந்தது

22)பள்ளிவாசல் நீதிமன்றத்தில் கேட்ட முக்கிய பரிகாரங்கள் என்னவென்றால்
இந்த கிராமங்கள் Madras Estates Land Act, 1908 கீழ் வரும் Estate அல்ல என்று அறிவிக்க வேண்டும்.,நிலங்கள் அனைத்தும் Iruvaram Pannai Lands (இரண்டு வாரமும் பள்ளிவாசலுக்கே சொந்தம்). Ryoti Lands அல்ல என்று அறிவிக்க வேண்டும்.மேலும்
Act 30 of 1947 (Rent Reduction Act) இந்த நிலங்களுக்கு பொருந்தாது.அரசு அல்லது அதன் அதிகாரிகள் வாடகை வசூலிக்கக் கூடாது என்று தடை உத்தரவு (Injunction). என்று கேட்டிருக்கிறார்கள்.

23) அதனை விசாரித்த நீதிமன்றம் செப்பு பட்டயங்கள் இனாம் பதிவேடுகள் ஆகியவற்றையெல்லாம் முழுமையாக பார்த்து விசாரித்து அரசு தரப்பு விளக்கங்களை எல்லாம் கேட்டு 08.03.1955 தேதி தீர்ப்பினை கொடுத்தார்கள் அந்த தீர்ப்பை பள்ளிவாசல் கேட்ட அனைத்து பரிகாரங்களையும் கொடுத்து விட்டார்கள்

24) மெட்ராஸ் எஸ்டேட் லேண்ட் ஆக்ட் 1909 இந்த நிலத்திற்கு கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் எந்த வித இனாம் ஓழிப்பு சட்டங்களும் இதற்குள் நுழைய முடியாது. பள்ளிவாசல் கேட்ட பரிகாரங்கள் அனைத்தும் கிடைக்கும் தாவா சொத்து சர்வ சுகந்திரமாக பள்ளிவாசலுக்கு பாத்தியம் என்றும் உறுதி செய்யும்

25)மேலும் பள்ளிவாசல் சொத்து முழுக்க முழுக்க தனியார் நிலம் என்று உறுதிப்படுத்தும் இப்படி ஒரு தீர்ப்பை பள்ளிவாசல் நிர்வாகம் வாங்கி வைத்திருந்தனர் அதனை எதிர்த்து திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் எந்தவித மேல்முறையீடுகள் எங்கள் வரை செய்யவில்லை அதாவது கிட்டத்தட்ட 70 வருடங்களாக எந்த மேல்முறையிடம் செய்யவில்லை.

26) அப்படி செய்யாததினால் திருநெல்வேலியில் சப் கோர்ட் கொடுத்த தீர்ப்பு இறுதி தீர்ப்பாகிவிட்டது (Finality) தாவா சொத்தில் டைட்டில் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் இருக்கிறது. இந்த எதிரி படி கண்டிப்பாக பட்டா வருவாய்த்துறை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இந்த வழக்கு ஆரம்பத்திலேயே மேல்முறையீடு செய்யாமல் தூங்கி விட்டு இப்பொழுது வருவாய் துறையினர் குய்யோ முய்யோ என்று தேவை இல்லாத சட்ட குழப்பங்களை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள்

இப்படிக்கு

சா. மு. பரஞ்சோதி பாண்டியன்

நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள்
நல அறக்கட்டளை

தொடர்புக்கு +91 86100 63410

Comments