வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்! (பார்ட்-6)
வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்! (பார்ட்-6)
41) மேலும் நீதியரசர் என்ன சொல்கிறார் என்றால் சர்வே சட்டம் 1923 ஆம் ஆண்டு தான் வந்து இருக்கிறது, மேற்படி கிராமம் கிராமம் சர்வே எண் 1963 க்கு பிறகு தான் இனாம் எஸ்டேட் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகு தான் சர்வே செய்யப்பட்டு சர்வே எண் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று விவாதிக்கிறார். மேலும் b உண்மையான செப்பு சாசனத்தில் 25 கோட்டை மற்றும் 50 கோட்டை என்று 75 கோட்டை நிலம் தான் இனாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரு கோட்டை விதை நிலம் எவ்வளவு என்று யாருமே எனக்கு ஆதாரம் கொடுக்கவில்லை வருவாய்த்துறை waqf போர்டு கற்றறிந்த வழக்கறிஞர்கள் எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்காத நிலையில்
42)பத்தி 101 நீதியரசர் இப்படி சொல்கிறார்
Therefore, this Court has no other option but to ascertain as to what is the extent of 75 kottahs of land that was given as grant through the copper plate, and to satisfy itself, this Court embarked on finding out the actual extent of 1 Kottah in today's scenario. A free search in 'Google' revealed that 'Kottah' and 'Katha' are used alternatively and they mean one and the same. In Tamil Nadu, the extent of 1 Katha/Kottah in acre returned a figure of 0.03124 acre and, therefore, the extent of 75 Kathas/Kottahs of land would work out to an extent of 2.3430 acres (Two Acre Thirty Four Cents and One Thirty Square Feet).”
43) ‘1 கோட்டை = எவ்வளவு’
என்பதை நிரூபிக்க எந்த ஆவணமும் சமர்ப்பிக்கவில்லை.
ஆகவே, நீதிமன்றம் தானாக
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவீட்டை
எடுத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துள்ளது.”கோட்டை = எவ்வளவு” என்பதற்கு ஆதாரம் அளிக்காததால்,
நீதிபதி சுயமாக (Google search) பார்த்து இந்த கணக்கை எடுத்தார். கூகுளில்
1 கோட்டை (Kottah / Katha) = 0.03124 ஏக்கர்
ஆகவே, 75 கோட்டைகள் = 2.3430 ஏக்கர்
(அதாவது 2 ஏக்கர் 34 சென்ட் + 1.30 சதுர அடி)
என்று கணக்கிட்டு 75 கோட்டைகள் என்பது வெறும் 2 ஏக்கர் 34 சென்ட் என்று பொசுக்கென்று முடித்து விட்டார்
44) நீதியரசர் மீதி பொருண்மைகளை பற்றி பேசும்பொழுது ஆழமான சிந்தனையுடன் விடை தேடி நிறைய முன் தீர்ப்புகளை எல்லாம் காட்டி அதிலுள்ள முக்கிய செய்திகளை எல்லாம் எடுத்துக்காட்டாகி அற்புதமாக விவாதம் செய்துவிட்டு பரப்பளவு கணக்கை பார்க்கும் பொழுது google search செய்து அதன் அடிப்படையில் பரப்பளவு கணித்தது வானுயற இருந்த ஒரு பெரிய பிம்பம் ச்சே இவ்வளவுதானா? தரை டிக்கெட்டுக்கு இறங்கிட்டாங்களே என்று தோன்ற வைத்துவிட்டது
45)மொத்த பள்ளிவாசல் நண்பர்களுக்கும் வக்கப் போர்டில் இருக்கின்ற பாண்டித்தியம் பெற்ற வழக்கறிஞர்கள் கற்றறிந்த நிர்வாகிகள், கேட்பது என்னவென்றால் திருநெல்வேலிமாவட்டம் ராதாபுரம் தாலுகா கண்டிய பேரிகிராமத்து பக்கத்துல இரண்டு ஏக்கர் நிலத்துக்காகவா 1952 இல் இருந்து வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் வழக்கு செலவே வைத்தே 100 ஏக்கர் அந்த ஏரியாவில் வாங்கி விடலாமே !1200 ஏக்கர் என்று சொல்லிய நீங்கள் அதனுடைய சர்வே எண்களை எல்லாம் எப்படி எடுத்தீர்கள்? Sec 5 proforma எப்படி தயாரித்தீர்கள்? உண்மையிலே சாமானியர்களின் நிலங்களை எல்லாம் வாரி சுருட்டி விடலாம் என்று பேராசை கொண்டு வக்பு சட்டத்தினை பயன்படுத்துனீர்களா? 1200 ஏக்கரை நீங்கள் நிரூபிக்க வேண்டாமா?
46) ரெவென்யு அதிகாரிகள் வருவாய் நிலையானைகளை அரைத்து குடித்தவர்களே சர்வே சட்டங்களை கள அனுபவங்களை புரிந்து கொண்டவர்களே 2 ஏக்கர் நிலத்திற்காகவா இனாம் எஸ்டேட் எஸ்டேட் ஒழிப்பு சட்டம் 26/1963 ஐ பயன்படுத்தினீர்கள் இரண்டு ஏக்கர் கெல்லாம் மைனர் இனாம் ஒழிப்பு சட்டத்தை அல்லவா பயன்படுத்த வேண்டும். இதற்காகவா மாநில நில நிர்வாக ஆணையர் பட்டா கொடுக்க மறுத்தார் எத்தனை முறை விசாரணைக்கு உங்களுடைய டேபிளுக்கு வந்திருக்கும் அப்பொழுதெல்லாம் இதனுடைய பரப்பளவை ஏன் கேள்வி கேட்கவில்லை.
47)எனது தந்தையார் ஒரு சாதாரண கொத்தனார் சிறு வயதில் என்னிடம் சொல்லி இருக்கிறார் படிச்ச அதிகாரி எல்லாம் படிக்கட்டுல பேலுர்றான் " ஆத்தங்கரையும் குளத்தங்கரையும் மந்தவெளியும் அவனுக்கு தெரியாது, வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு பட்டு கத்தரிப்பது போல் கத்தரிக்க தெரியாது. பேப்பரை வைத்துக்கொண்டு கடிதம் எழுதி கொண்டு ஜவ்வு போட்டுக் கொண்டே இருப்பார்கள் ஆனை பூனை பெரிய மேட்டர் ஆழமான விஷயம் என்றெல்லாம் சொல்லி ஒண்ணுக்கும் இல்லாம செய்து விடுவார்கள் என்று எனக்கு சொல்லிக் கொடுத்தது இப்பொழுது ஞாபகங்கள் வருகின்றது.
48) வடநாட்டில் பயன்படும் “Katha / Katta” அளவைதமிழ்நாட்டின் “Kottah / Kottai” அளவுடன் நீதியரசர் பொறுத்திவிட்டாரா? என்றால் ஆம்! அதைத்தான் இந்த வழக்கில் இந்த வழக்கில் நீதி அரசர் செய்துவிட்டார். வடநாட்டில் பயன்படுத்துகின்ற கட்டா , பீகாரில் ஒரு பரப்பளவு மேற்கு வங்காளத்தில் ஒரு பரப்பளவு ஒரிசாவில் ஒரு பரப்பளவு என இருக்கிறது. கோட்டை என்பது தமிழகத்தில் பாரம்பரிய அளவு முறையாக கிபி 1500 முதல் கொண்டு நடைமுறையில் இருப்பதற்கு ஆவணங்கள் இருக்கிறது
49) வள்ளியூர் ராதாபுரம் பஜார்களில் இருக்கின்ற தேநீர் கடையில் அமர்ந்து கொண்டு இருக்கும் 60 வயது பெரியவரிடம் சென்று கேட்டால் ஒரு கோட்டை எவ்வளவு பரப்பு என்று சாதாரணமாக சொல்லிவிட்டு செல்வார். சங்கரன்கோவில் கழுகுமலை கோவில்பட்டி எட்டயபுரம் டீக்கடையில் அதிகாலை உப்புமா வாங்கி சாப்பிட்டு சைக்கிளில் ஏறிச் வயல் வேலைக்கு செல்லும் ஒரு சாமானியனை கேட்டால் ஒரு கோட்டை விதைப்பாடு எவ்வளவு பரப்பு என்று சாதாரணமாக சொல்லிவிட்டு கிளம்புவார். நெல்லை அள்ளி மூட்டையில் கொட்டுகின்ற ஒரு சம்சாரியை கேட்டுப் பாருங்கள் அவரும் ஒரு கோட்டை எவ்வளவு பரப்பு என்று சாதாரணமாக சொல்வார் ஆனால் நம்முடைய நீதி அரசரோ கூகுளில் பார்த்து முடிவு செய்துவிட்டார் யாரும் ஆவணங்களை சமர்ப்பிக்காத பட்சத்தில் களப்பணி செய்யாத சாமானியர்களிடம் புழங்காத டேபிளில் உட்கார்ந்து முடிவு எடுக்கின்ற படித்தவர்களின் முடிவு இப்படித்தான் இருக்கும்
50)ஆனால் இந்த பள்ளிவாசல் சொத்தை பொறுத்தவரை என்னுடைய முடிவு என்னுடைய புரிதல் அந்த சொத்தைப் பொறுத்து விஸ்தீரணம் என்னவென்றால் இனாம் செப்பேட்டில் எல்லைகள் காட்டி இருக்கிறார்கள் அதேபோல் கோட்டை விதை நிலம் என்ற அளவு முறையையும் சொல்லி குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஒரு மரக்கா என்பது 8 சென்டு நிலமாக்கும் ஆகும் நஞ்சை நிலத்தில் 21 மரக்கா ஒரு கோட்டை விதை நிலம் புஞ்சையாக இருந்தால் 24 மரக்கா ஒரு கோட்டை விதை பாடு என்று சொல்வார்கள். அப்படி பார்த்தால் ஒரு கோட்டை விதை நிலம் என்பது 168 சென்ட் அல்லது 192 சென்ட் ஆகும் . அதன்படி 75 கோட்டைகள் சொல்கிறார்கள் ஒரு கோட்டை 168 சென்ட் என்று வைத்துக் கொண்டால் மொத்தப் பரப்பு 126 ஏக்கருக்கு வருகிறது அதுவே ஒரு கோட்டை 192 சென்ட் என்ற வைத்துக் கொண்டால் 144 ஏக்கர் வருகிறது
51) ஆக பள்ளிவாசல் நிர்வாகமும் waqf board சொல்லுகின்ற 1200 ஏக்கர் என்பது நீதியுடன் அளவிட்டது அல்ல அளவையும் எடையையும் நீதியுடன் நிறைவேற்றுங்கள் இல்லையென்றால் கணக்கு கொடுக்க வேண்டிய இடத்தில் கணக்கு கொடுக்க வேண்டும். அதேபோல் இரண்டு ஏக்கர் தான் என்பதும் நீதித்துறையின் கள அனுபவ இல்லாமை எடுத்துக்காட்டுவதாக இருந்து விடும். அல்லது தெரிந்தே தான் சொல்லியிருந்தால் நீதித்துறை பாகுபாடு பார்க்கிறது என்று சாமானியர்கள் புரிந்து கொள்வார்கள்.. மேலும் ஒரு கோட்டை எவ்வளவு விஸ்தீரணம் என்பதற்கு ஆவண ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. (முற்றும்)
குறிப்பு: மாண்பமை நீதிமன்றம் பரப்பளவை எல்லாம் மீண்டும் பரிசோதித்து waqf board நிர்வாகம் sec 5 இன் புதிய பர்ஃபாமாவை profoma தயாரிக்க சொல்லி இருக்கிறது
இப்படிக்கு
சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
தொடர்புக்கு :+91 86100 63410

Comments
Post a Comment