வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்! (Part -2)



 

வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்! (Part -2)

9)அதன் பிறகு 1802 ஆம் ஆண்டுக்கு பிறகு மொத்த திருநெல்வேலியும் வெள்ளையர்கள் தங்கள் கட்டு பாட்டில் கொண்டு வந்து விட்டார்கள். ஒட்டுமொத்த சென்னை மாகாணமும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்து விட்டன. இருந்தாலும் பிரிட்டிஷ் அரசு நாட்டுத் (Native) அரசர்களின் நடைமுறையைப் பின்பற்றி, இனாம் முறைகளை 1829 வரை கடைபிடித்தனர். அதன் பிறகு இதன் மூலம் நிறைய வருவாய் இழப்பு வருகிறது என்று உணர்ந்து இனாம் நிலங்களை தணிக்கை செய்வது அதனை வருவாய் பதிவேடுகளில் குறித்து வைப்பது சில இனாம்களுக்கு சில தலைமுறைகள் தான் பயனாளிகள் அனுபவிக்க வேண்டும் என்று இனாம்கள் கொடுத்திருப்பார்கள் அப்படிப்பட்ட இனங்களை எல்லாம் அந்த தலைமுறை முடிந்தவுடன் அதனை முடித்து வைப்பது போன்ற பணிகளை செய்ய ஆரம்பித்தனர்

10)காலப்போக்கில் இனாம்தாரர்கள் அர்த்த மானியம் வைத்திருப்பார்கள் ஆனால் பிரிட்டிஷ் அரசிடம் சர்வ மானியம் என்று சொல்வார்கள், பழைய செப்பேடுகள் இருக்காது ஆவணங்கள் தொலைந்து போய் இருக்கும் இதனால் இனாம்களை பற்றி எந்தவித சரியான முடிவு எடுக்க முடியாமல் பிரிட்டிஷ் அரசு இருந்தது . இவனை எல்லாம் சரி செய்ய ஒரு களப்பணி செய்து நேரடியாக விசாரணை மேற்கொண்டு அவற்றை எல்லாம் ஆவணப்படுத்தி இனாம் என்று உறுதி செய்ய வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு முடிவு எடுத்தது.

11)1858 நவம்பர் 16 அன்று, ஜி. என். டெய்லர் அவர்களை இனாம் கமிஷனராகக் கொண்டு மதராஸ் இனாம் கமிஷன் அமைக்கப்பட்டது; அது சென்னை மாகாணம் முழுவதும் சென்று இனாமை உறுதிப்படுத்த வேண்டிய வேலையை செய்தது. அவர்கள் அந்த காலத்து செப்பு பட்டங்களை ஆராய்வார்கள் ஆவணங்களை பரிசீலனை செய்வார்கள். குறைந்தபட்சம் ஆவணங்கள் இல்லையென்றாலும் செப்பு பட்டயங்கள் இல்லை என்றாலும் 1802 இல் இருந்து 50 ஆண்டுகளாக அந்த நிலத்தை அவர்கள் இனமாக அனுபவித்து வந்திருக்கிறார்கள் என்ற ஆதாரம் இருந்தாலே அதனை இனாம் என்று அங்கீகரித்து அதற்கு டைட்டில் டீட் (Title Deed) பதிவு எண் கொடுத்து விடுவார்கள்

12)அதன் படி இந்த வழக்கு சொத்தில் 1865 களில் இனாம் கமிஷன் ஆய்வு செய்து ஒரு இனாம் தூய பதிவேட்டை உருவாக்கி இருந்தது அதில் Inam Fair Register –“Columns 8 and 10 of the Inam Fair Register would show that the inams were granted for the purpose of Masjid Dharman” “and for performance of Urus, Ramzan, Bara, Mould, etc., and for lighting of lamps”
என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் இதன்படி பார்த்தால் இஸ்லாமிய தர்மத்திற்காக இந்த நிலங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று இனாம் தூய பதிவேற்றத்தின் மூலமாக ஊர்ஜிதம் ஆகிறது

13) மேலும் column 10 it is marked as ‘hereditary or conditional for life or lives’” இந்த இனாம் hereditary” (பரம்பரை உரிமை)“conditional for life or lives” (வாழ்நாள்/வாழ்நாட்கள் வரை நிபந்தனை அடிப்படையில்)
என்று குறிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாதுand further it is mentioned that ‘so long as the mosque is kept up and the religious services are duly kept up’.ncluding the villages of Lakshmipuram, Andiradhi Kudiyiruppu and Anaikkarai”“பள்ளிவாசல்
பராமரிக்கப்படும் வரைமற்றும்
மதச் சேவைகள் முறையாக நடைபெறும் வரை” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது மேலும் லக்ஷ்மிபுரம்,அந்திராதி குடியிருப்பு, அணைக்கரை ஆகிய கிராமங்களும் சேர்ந்து,
என்று இனாம் பதிவேடு சொல்லி இருக்கின்றது மேற்படி கிராமங்களில் உள்ள இஸ்லாமிய மக்களின் சந்தோசமாக வாழ்வதற்கு கொடுக்கப்பட்ட இனாம் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

14) இந்த இனம் தூய பதிவேட்டில் கிராமங்கள் பெயர் இருப்பதால் முழு கிராமமும் waqf என்று வக்ப் போர்டு தவறுதலாக புரிந்து கொண்டது முழு கிராமங்களும் எங்களுடையது என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே திருச்சியில் திருப்பராய்த்துறை அருகில் பிராமணர் கிராமமானதிருச்செந்துறை கிராமத்திற்கும் முழு கிராமமும் வக்ப் போர்டுக்கு உடையது என்று பத்திர பதிவு துறைக்கு தடை செய்ய சொல்லி waqf board CEO நோட்டீஸ் கொடுத்ததும் அங்கு வாழ்கிற
பிராமணர்கள் பத்தட்டம் அடைந்து விட்டார்கள். இந்திய நாட்டிற்கு பல ஆயிரம் ஆண்டுகளாக கான்ஸ்டியூஷனை உருவாக்கி கொடுப்பது நாங்கள்! இன்றைய கான்ஸ்டடியூஷனும் இந்த நாடு எப்படி இருக்க வேண்டும் என்று வியூகமும் பிராமணர்களாகிய நாங்கள் தான் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம் இப்பொழுது எங்களுக்கே நோட்டீஸா என்று கோபப்பட ஆரம்பித்தவுடன் மொத்த வக்ப் ஆட்களும் அந்த கிராமத்திற்கே சென்று நேரடியாக போய் சரண்டர் ஆகி விட்டார்கள். அப்படி இருந்தும் மேற்படி பிராமணர்கள் விடவில்லை 2024 இல் பாராளுமன்றத்தில் வக்பு போர்டு பல்லு பிடுங்வது போல திருத்த சட்ட மசோதாவை தற்பொழுது கொண்டு வந்திருக்கிறார்கள்.

15) மேற் சொன்ன பள்ளிவாசல் இனாமை அங்கு இருக்கின்ற இஸ்லாமியர்களுக்கு குடிவார உரிமை கொடுத்து உழவடை செய்ய கூட அனுமதிக்காமலேயே பள்ளிவாசல் நிர்வாகம் இருந்து விட்டார்கள். உழவடை செய்திருந்தால் குடிவார உரிமை (Occupancy Rights ) இஸ்லாமிய சாமானியர்களுக்கு வந்திருக்கும் அதனால் மேற்படி நிலங்களில் குடிவார உரிமை கிடையாது. மேற்படி இரண்டு வாரமும் பள்ளிவாசலுக்கு உரிமையாய் விட்டது.

இப்படிக்கு

சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
தொடர்புக்கு: +91 86100 63410

Comments